வீட்டிற்குள் இருக்கும் மாசுக்காற்றால் கடந்த 2016ல் மட்டும் உலக அளவில் 38 லட்சம் பேர் இறந்துள்ளதாக மருத் துவர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
தலைநகரான டில்லியில் தற் போது காற்று மாசு
பாதிப்பு அதி கரித்து காணப்படுகிறது. இதற்கு அருகில் உள்ள மாநிலங்களான
அரியானா, உத்தரபிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள்
வயல்களில் அறுவடை செய்த பிறகு தேவையற்ற வைக் கோலை எரிப்பதே காற்று மாசு
அதிகரிக்க முக்கிய காரணம் என்று தேசிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்
தெரிவித்துள்ளது.
இந்தியாவில் வெளிப்புற மாசுக் காற்றால்
இறப்பவர்களின் எண் ணிக்கை, கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.
தலைநகர் டில்லியில் ஆண்டுக்கு இரண்டு நாட்கள் மட்டுமே சுவாசிக்க உகந்த
காற்று இருந்துள்ளது. காற்று மாசு பாட்டால் இந்தியர்களின் ஆயுள் ஏறத்தாழ
இரண்டரை ஆண்டுகள் வரை குறைகிறது என்று அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல்
மய்யத்தின் ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் காற்று மாசு காரண மாக 8இல்
ஒருவர் உயிரிழக்கின்றனர். ஒரு வருடத்திற்கு 70 லட்சம் பேர் இறக்கின்றனர்.
குழந்தைகள் 9 சத வீதம் பேர் பாதிக்கப்படுகின்றனர். காற்று மாசு காரணமாக
நுரையீரல் புற்றுநோயால் 25 சதவீதம் பேரும், நுரையீரல் நோய்த்தொற்றால் 17
சதவீதம் பேரும், பக்கவாதத்தால் 16 சதவீதம் பேரும், இதயநோயால் 15 சதவீதம்
பேரும், நுரையீரல் அடைப்பு நோயால் 8 சதவீதம் பேரும் இறக்கின்றனர் என்றும்
ஆய்வுகள் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வெளிப்புற காற்றை விட,
வீட்டிற்குள் இருக்கும் மாசு காற்றால் உடலுக்கு அதிக பாதிப் புகள்
ஏற்படுகிறது என்று மருத்து வர்கள், அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். இது
குறித்து சேலம் மருத்துவர்கள் கூறியதாவது:
இன்றைய சூழலில் ஒருவர் வீட் டிலும்,
அலுவலகத்திலும் சுவா சிக்கும் காற்றில் கூட அதிகமாசு காணப்படுகிறது.
வெளிப்புற மாசுக்கு எந்த விதத்திலும் குறையாத நிலையில் உட்புற மாசு உள்ளது.
உட்புற மாசுபாட்டைப் பொறுத்த வரையில், மற்றவர்களைவிட சுவாசப் பிரச்சினைகள்
இருப்ப வர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். பூட்டிய இடங்களில் அதிக
நேரம் இருக்கக்கூடாது.
உலகளவில் வீட்டு காற்று மாசு பாடு
சுற்றுச்சூழல், சுகாதார பிரச் சினையாக உள்ளது. வீட்டில் சமை யல்,
விளக்குகள் போன்றவற்றினால் காற்று மாசு ஏற்பட்டு குழந்தைகள்
பாதிக்கப்படுகின்றனர். குறைந்த மற்றும் நடுத்தர அளவில் உள்ள நாடுகளில்
உலகின் 41 சதவீதத்தினர் மாசுபடுத்தும் எரிபொருட்களை முக்கியமாக சமையலுக்கு
பயன் படுத்துகின்றனர். இதன் காரணமாக வீட்டு காற்று மாசுபாட்டால் கடந்த
2016இல் 38 லட்சம் மக்கள் உயிரி ழந்துள்ளனர்.
இதில் 5 வயதுக்குட்பட்ட 4 லட்சம்
குழந்தைகளும் இறந்துள் ளனர். உட்புற மாசுபாட்டில் இருந்து விடுபட,
அனைவரும் இயற்கையை நோக்கி திரும்ப வேண்டும். இதற் காக வீட்டை சுற்றியும்,
வீட்டிற் குள்ளேயும் செடிகள் வைப்பதும், வளர்ப்பதும்தான் சிறந்தது. மாசான
காற்றை சுவாசிப்பதால் நுரையீரல் மட்டுமின்றி கல்லீரல், மூளை, நரம்பு
மண்டலம், இதயம், மண்ணீரல் என உடலின் அனைத்து உறுப்புகளுமே பாதிக்கப்படும்.
மாசு காற்றை சுவாசிக்கும் போது ஆஸ் துமா போன்ற பிரச்சினைகளில் ஆரம்பித்து
புற்றுநோய் வரையில் பல்வேறு தீவிர பாதிப்புகள் ஏற் படுத்த கூடும். இவ்வாறு
மருத் துவர்கள் கூறினார்.
No comments:
Post a Comment