ஈராக் நாடு தொடர் போர்களால் சீரழிவை
சந்தித்து வந்த நாடு ஆகும். சதாம் உசேன் ஆட்சிக்கு பிறகு அங்கு அரசியல்
நிலைத் தன்மை இல்லாமல் போனது.
தொடர் போர்களால் நாட்டின் பொருளாதாரம்
சீர் குலைந்து விட்டது. வேலை இல்லா திண்டாட் டம் தாண்டவமாடி வருகி றது.
ஊழலுக்கு குறைவில்லை. இது மக்கள் மத்தியில் அர சின்மீது பெரும் அதிருப்தியை
ஏற்படுத்தி உள்ளது.
இதன் காரணமாக பிரத மர் அதெல் அப்துல் மஹ திக்கு எதிராக மக்கள் கிளர்ந் தெழுந்து வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின் றனர்.
இந்த போராட்டங்களில்
போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் வெடித்து
வருகிறது. இதனால் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு, ரப்பர் குண்டால்
சுடுவது அதி கரித்து வருகிறது. இதுவரை அங்கு 400-க்கும் மேற்பட் டோர்
போராட்டங்களில் பலியாகி உள்ளனர். ஆயிரக் கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர்.
இதற்கிடையே, சமீபத்தில் தொலைக்காட்சியில்
நாட்டு மக்களிடம் உரையாற்றிய ஈராக் அதிபர் பர்ஹாம் சாலி, அதெல் அப்துல்
மஹதி பிரத மர் பதவியில் இருந்து விலகு வதற்கும், பதவி விலகல் கடி தம்
அளிப்பதற்கும் தயாராக உள்ளார் என குறிப்பிட்டார்.
இந்நிலையில், ஈராக்கில் நடைபெற்று வரும்
போராட் டங்களின் எதிரொலியாக, அந்நாட்டு பிரதமர் அதெல் அப்துல் மஹதி, தனது
பதவியிலிருந்து விலகியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை
யில், எனது பதவி விலகல் கடிதத்தை நாடாளுமன்றத் தில் சமர்ப்பித்து விட்டேன்
என தெரிவித்துள்ளார்.
ஈராக்கில் கடந்த ஆண்டு மே மாதம்
நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டுதான், பிரதமர் அதெல் அப்துல் மஹதி அரசு
பதவி ஏற்றது என்பது நினைவு கூரத்தக்கது.
No comments:
Post a Comment