இரண்டாம் உலகப்போரின் போது, ஜெர் மனியின்
நாஜி படைகளுக்கு தலைமை தாங்கி பல லட்சம் யூதர்களை கொன்று குவித்த
சர்வாதிகாரி ஹிட்லர், ஆஸ் திரியா நாட்டில் பிறந்தவர். ஆஸ்திரியாவின் மேற்கு
பகுதியில் ஜெர்மனியின் எல் லையையொட்டி அமைந் துள்ள பிரவ்னவ் ஆம் இன்
நகரில் உள்ள ஒரு வீட்டில் 1889ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி ஹிட்லர்
பிறந்தார்.
17ஆம் நூற்றாண்டில் கட் டப்பட்ட இந்த
கட்டடத்தில் ஹிட்லர் சில வாரங்களே வாழ்ந்தார். எனினும் அந்த வீடு ஹிட்லர்
மற்றும் அவரது கொள்கைகளை நினைவு கூரும் இடமாகவே இருந்து வந்தது. இதனால்
ஆஸ்திரியா அரசு அந்த வீட்டை கைப் பற்றி, அழிக்க முயற்சிகளை மேற்கொண்டது.
ஆனால் இந்த வீட்டின் உரிமையாளர் அரசுக்கு இணங்கவில்லை.
இந்த விவகாரம் தொடர் பாக அரசுக்கும்,
வீட்டின் உரிமையாளருக்கும் பல ஆண் டுகளாக சட்டப்போராட்டம் நடந்து வந்தது.
இறுதியில் கடந்த 2016ஆம் ஆண்டு கட் டாய விற்பனை உத்தரவின் மூலம் அந்த
வீட்டை 8 லட் சத்து 10ஆயிரம் யூரோக்க ளுக்கு அரசு கையகப்படுத்தி யது.
அதன் பிறகு, வீட்டை இடித்து தரைமட்டமாக்கு
வது என்பது உள்ளிட்ட பல் வேறுபட்ட கருத்துகள் முன் வைக்கப்பட்ட நிலையில்
ஹிட்லர் பிறந்த வீட்டை காவல் நிலையமாக மாற்ற ஆஸ்திரியா அரசு தற்போது முடிவு
செய்துள்ளது.
No comments:
Post a Comment