மத்திய அரசு கடந்த 1999-ஆம் ஆண்டு பல வகையான பொருள்களுக்கு புவிசார் குறியீடு பதிவு மற்றும் பாது காப்புச் சட்டம் கொண்டு வந்தது.
இதன் காரணமாக புவி சார் குறியீடு வழங்கப்பட்ட பொருள்களை மற்ற பகுதி யினர் விற்பனை செய்வதும், போலிகளும் தடுக்கப்படுகின் றன.
அந்த வகையில், ஜவ்வரி சிக்கு புவிசார் குறியீடு பெறும் வகையில் சேகோசர்வ் ஆர் வம் காட்டி வருகிறது.
மரவள்ளிக் கிழங்கு உல கின் பல்வேறு
பகுதிகளில் பயிரிடப்பட்டு பிரதான உணவு பயிராகவும்,ஆசிய, ஆப்பிரிக்க,
லத்தீன் அமெரிக் காவில் தொழில் துறை சார்ந்த பயிராகவும் பயிரிடப்படுகி றது.
சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி,
விழுப்புரம், திருச்சி, திருவண்ணாமலை உள் ளிட்ட 21 மாவட்டங்களில்
மரவள்ளிகக் கிழங்கு பயிரி டப்படுகிறது. தமிழகத்தில் சுமார் 85,000 ஹெக்டேர்
பரப்பளவில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்படுகிறது. ஆண்டுக்கு 90 கிலோ எடை
கொண்ட ஜவ்வரிசி 20 லட் சம் மூட்டைகளும், ஸ்டார்ச் மாவு 7 லட்சம்
மூட்டைகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன.
மரவள்ளிக் கிழங்கு உற் பத்தியில் ஹெக்டேர்
ஒன் றுக்கு 27.92 மெட்ரிக் டன் உற்பத்தி செய்து இந்தியா உலகளவில்
முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்தியாவில் மிக அதிக பட்ச அளவான ஹெக்டேர்
ஒன்றுக்கு 38 மெட்ரிக் டன் மரவள்ளி கிழங்கு உற்பத்தி செய்து தமிழகம் சாதனை
படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment