- கலி.பூங்குன்றன்
இந்தியாவின் பார்வையில் வரலாற்றை மீண்டும் திருத்தி எழுத வேண்டும் என்று வரலாற்று ஆசிரியர்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா கோரிக்கை வைத்தார். 1857ஆம் ஆண்டு கிளர்ச்சியைத்தான் முதல் சுதந்திரப் போர் என்று வீர் சாவர்கர் அழைத்ததாகவும் கூறினார்.
வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில் குப்த்வான்ஷக்-வீர், ஸ்கந்தகுப்த விக்ரமாதித்யா குறித்து இரண்டு நாள் பன்னாட்டு கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கை தொடங்கி வைத்து உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்புரை ஆற்றினார்.
அப்போது, புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் களைப் பற்றி குறிப்பிட்டவர், “இந்திய வரலாற்றை இந்தியாவின் பார்வையில் ஆனால் யாரையும் குறை கூறாமல் இருந்து மீண்டும் திருத்தி எழுத வேண்டிய அவசியம் உள்ளது, என்று கூறியவர், “நமது நாட்டின் வரலாற்றை எழுதுவது நமது பொறுப்பு. நாம் எவ்வளவு காலம் பிரிட்டிஷாரைக் குறை கூறிக்கொண்டு இருக்கப் போகிறோம் என்றவர், இது குறித்து நாம் யாரையும் விமர் சிக்கப் போவதில்லை, உண்மை என்ன என் பதை மட்டும் எழுதுங்கள், அது காலத்தின் சோதனையாக நிற்கும்” என்று கூறினார்.
ஆவணங்கள் இல்லாததால் ஸ்கந்தகுப்த விக்ரமாதித்யாவின் பங்களிப்புகள் மற்றும் வீரம் குறித்து இன்றைய தலைமுறை அறிந் திருக்கவில்லை என்று ஷா வருத்தம் தெரி வித்தவர், வீர் சாவர்க்கர் இல்லாதிருந்தால், 1857 இல் நடந்த முதல் சுதந்திரப் போர் ஒரு கிளர்ச்சியாக கருதப்பட்டிருக்கும் என்றார்.
அப்போது, வீர் சாவர்க்கர் இல்லாதிருந் தால், 1857 கிராந்தி (போர்) வரலாறாக மாறி யிருக்காது, என்றவர், “1857 கிராந்திக்கு ‘முதல் சுதந்திரப் போர்’ என்ற பெயரைக் கொடுத்தது சாவர்க்கர் தான், இல்லை யெனில், எங்கள் குழந்தைகள் இதை ஒரு கிளர்ச்சியாக அறிந்திருப்பார்கள்,” என்று அவர் கூறினார்.
தொடர்ந்து நாட்டின் எதிர்காலம் குறித்து பேசியவர், இந்தியாவுக்கு உலக நாடுகளி டையே மீண்டும் மீண்டும் மரியாதை பெறச் செய்ததற்காக பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டும் வாய்ப்பு தனக்குக் கிட்டியதாக வும், பாஜக ஆட்சியில்தான், இந்திய நாட்டின் மீதான மரியாதை அதிகரித்துள்ளது. உலகம் அனைத்தும் இந்தியா மீது கவனம் செலுத்துகிறது. பன்னாட்டு முன்னேற்றங்கள் குறித்து நமது பிரதமர் பேசும்போது உலகம் கேட்கிறது”.
இவ்வாறு அமித்ஷா கூறினார்.
சாவர்க்கரை வரலாற்று மாந்தராக சித் தரிப்பதில் சங்பரிவார்கள் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றனர்.
காந்தியார் கொலைக்கு மூல வித்தும் ‘மூளை தானமும்‘ செய்தவர் தான் இந்த சாவர்க்கர். சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து தண்டனையிலிருந்து தப்பிப் பிழைத்தவரே தவிர நிரபராதியல்ல.
பெயரில் முன்னொட்டாக வீர என்று இருக்கிறதே தவிர உண்மையில் ‘முதல் மதிப்பெண் பெறத் தகுதி வாய்ந்த’ கோழைத் தனமான ஆசாமிதான் இந்த ஆசாமி.
அந்தமான் சிறையிலிருந்து வெள்ளைக் கார அரசுக்கு அவர் எழுதிய மன்னிப்புக் கடிதம் பகிரங்கமாக அவரின் கோழைத் தனத்துக்குக் கோட்டை வாசற்படியாகும்.
கடவுள் நம்பிக்கையற்றவராகக் கருதப் பட்டாலும் இந்து மத வெறியில் புடம்போட்டு எடுக்கப்பட்டவர். ‘இந்துத்துவா’ என்பதை அறிமுகப்படுத்தியவர் என்ற வகையில் பிஜேபியினரும், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார்களும் இவரைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கரகாட்டம் ஆடுவார் கள்.
நாடாளுமன்றத்தில் இவர் படத்தை வைத்தாகிவிட்டது. காந்தியின் படத்துக்கு எதிர் வரிசையில் - படுகொலை செய்யப் பட்ட காந்தியாரும், அவர் படுகொலைக்குக் காரணகர்த்தாவாக இருந்த சாவர்க்கரும் ஒரே மண்டபத்தில்! இந்த மானங்கெட்டத் தனம் இந்தப் பாரத ‘புண்ணிய பூமி‘யில்தான் நடக்க முடியும் - வெட்கக்கேடு!
இந்திய வரலாற்றைத் திருத்தி திரும்ப எழுத வேண்டும் என்று திருவாய் மலர்ந் தருளியிருப்பவர் இந்தியாவின் உள்துறை அமைச்சர்.
ஏதோ அமித்ஷாதான் இப்படி சொல்லு கிறார் என்று எண்ணிவிட வேண்டாம். வரலாற்றை ஏற்கெனவே திருத்தி எழுதும் திருப்பணியைத் தொடங்கியவர்கள்தான் இவர்கள். வாஜ்பேயி பிரதமராக வந்த போதே இந்தத் திருகு தாளத்திற்குப் பந்தக் கால் நட்டுவிட்டனர்.
இந்திய வரலாற்று ஆய்வுக் கழகம் (Indian Council For Historical Research) முற்றிலும் காவிக் கழகமாக மாற்றி அமைக் கப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ். மனப்பான்மை கொண்ட 18 பேர் புதிதாக நியமிக்கப்பட்டார்கள். அவர்களுள் கே.எஸ்.லால், பி.பி.லால், பி.பி. சின்ஹா ஆகியோர் பாபர் மசூதி இருந்த இடத்தில் அதற்கு முன் ராமன் கோயில் இருந்தது என்று சரித்திரம் சொன்னவர்கள்.
I. “பேராசிரியர் சுமித் சர்க்கார், பேராசிரி யர் கே.எம். பணிக்கர், உறுப்பினர் செயலா ளர் டி.கே.வி. சுப்பிரமணியம் உள்ளிட்ட 12 புகழ் பெற்ற வரலாற்று ஆய்வாளர்கள் இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்திலிருந்து (I.C.H.R.) வெளியேற்றப்பட்டார்கள். பாபர் மசூதியை இடிப்பதற்காகப் பிரச்சாரத் தில் ஈடுபட்டு கெட்ட பெயர் எடுத்த - வரலாற்றாளர் என்று கூறிக் கொள்ள வரலாற்றுத் தளத்தில் எத்தகைய தகுதியும் இல்லாதவர்கள் இந்தப் பொறுப்புக்களில் நியமிக்கப்படத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் கள். பாபர் மசூதி இருந்த பகுதியில் இராமர் கோயில் இருந்தது எனப் பொய்யான ஆதாரத்தைத் தந்த வரலாற்றாளரான பி.ஆர்.குரோவர் இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
II. இந்திய சமூக விஞ்ஞான ஆய்வுக் கழகத்தின் தலைவராக (I.C.S.S.R.) பா.ஜ.க.வின் முன்னாள் டில்லி நாடாளுமன்ற உறுப்பினர் எம். சோந்தி நியமிக்கப்பட்டு உள்ளார்.
III. வரலாற்றிலும் தொல்பொருள் ஆய் விலும் பா.ஜ.க.வின் பொய்யான கண்டு பிடிப்புக்களைத் தவிடுபொடியாக்கிய புகழ் பெற்ற வரலாறு மற்றும் தொல்பொருள் ஆய்வாளரான பேராசிரியர் சுரஜ்பான் கல்வி ஆலோசனைக் குழுத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். ஒரு ஹிந்துத்துவா பேர் வழி அந்த நாற்காலியை அலங்கரித்தார்.
IV. கல்வி திட்டமிடும் தேசியக் குழு வின் (N.C.E.P.A.) இயக்குநரை நியமிப்ப தற்கான தேர்வுக்குழு மாற்றியமைக்கப்பட் டது இந்தப் பதவிக்குக் காவிக் கறைபடிந்த ஒருவரை நியமிப்பதற்காக.
IV. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்குழுவின் (N.C.E.P.A.) பேராசிரி யர்களையும், விரிவுரையாளர்களையும் தேர்வு செய்வதற்கான குழுவில் டாக்டர் கே.ஜி. ரஸ்தோகி நியமிக்கப்பட்டார். ஆர். எஸ்.எஸ்.ன் பிரச்சாரகர்களில் ஒருவரான கே.ஜி. ரஸ்தோகி 1947-இல் நடைபெற்ற மதக் கலவரத்தில் பங்கேற்றதற்கான மறைக்க முடியாத சான்றுகளை உடையவர். அவர் தனது ‘ஆப் பிடி’ (Aap biti) என்ற சுயசரிதையில் தனது சொந்த வார்த்தை களில் “அந்த இடத்தில் ஒரு விநோதமான நிகழ்ச்சி நடந்தது. தாக்குவதற்காகச் சென்ற வர்கள் (இந்துக்கள்) கொலை நடந்த வீட்டில் காணப்பட்ட ஒரு அழகான பெண் (முஸ்லீம் பெண்) தொடர்பாகத் தங்களுக்குள்ளேயே ஒருவரோடு ஒருவர் சண்டையிடத் துவங் கினார்கள். தாக்கச் சென்றவர்கள் தங்கள் நோக்கத்தை மறந்து அப்பெண்ணை உரிமை கொண்டாடப் போட்டியிட்டார்கள். நான் அவர்களை மிரட்டினேன். பின் மனதுக்குள் ஒரு தீர்வு வந்தது. நான் அந்தப் பெண்ணைச் சுட்டுக் கொன்றேன்” என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இவர் தூக்குமரத்தில் தொங்கவிடப்பட வில்லை. சிறையில்கூட அடைக்கப்பட வில்லை. ஆனால், இந்த நாட்டின் முதன் மையான கல்வி நிறுவனத்தில் கல்வியாளர் களைத் தேர்வு செய்யும் குழுவில் நியமிக் கப்பட்டார். இவர் யாரைத் தேர்ந்தெடுப் பார்? கொந்தளிப்பான அந்த நாட்களில் தம்மைப் போலவே வளர்ந்தவர் களையோ, அல்லது தனது இணைபிரியா நண்பர் களையோ தேர்வு செய்வதுதானே அவரது முன்னுரிமையாக இருக்கும்?
VI. இந்துத்துவா என்பது ஒரு மதம் அல்ல; அது ஒரு வாழ்க்கை முறை என்று விளக்கமளித்த ஒரு தீர்ப்பின் மூலம் பா.ஜ. க.வின் மதச்சார்பு நிலைக்குச் சட்டபூர்வ அங்கீகாரம் அளித்ததாகக் கூறப்பட்ட முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ். வர்மாவின் தலைமையில் பாடத் திட் டத்தை மறுபரிசீலனை செய்யும் குழுவை மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அமைத்துள்ளது. (அவர் கூற்று திரிக்கப் பட்டது என்பது வேறு செய்தி)
VII. நாட்டின் உயர் கல்வியைச் சீரமைக் கப் பல்கலைக் கழக மான்யக் குழுவின் செயலாளராக பா.ஜ.க. தொடர்புடைய ஹரிகவுதம் என்பவர் நியமிக்கப்பட்டார்.
‘ஸ்டேட்ஸ்மென்’ (6.11.99) ஏட்டின் தலையங்கம்.
ரஸ்தோகியின் நியமனக் காலம் முடிவ தற்குள் இந்திய வரலாறு முற்றிலும் மாற்றி எழுதப்படும். இந்துக்கள் தேசப் பக்தர்கள் எனவும் அனைத்து சிறுபான்மையினரும் மதவாத ஆக்கிரமிப்பாளர்கள் என்றும், நாட்டின் அனைத்துக் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்கப்படும்” என்று “ஸ்டேட்ஸ் மென்” தலைப்பில் தீட்டியுள்ளது.
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பாசிச குரூரக் கண்ணோட்டத்தோடு பாடத் திட்டங்கள் அமைக்கப் பட்டு பிஞ்சு நெஞ்சங்கள் நஞ்சுக் காடுகளாக மாற்றப்பட்டு வருகின்றன. சரஸ்வதி, சிசுமந்திர் என்கிற பெயரிலும், வித்யாபாரதி என்கிற பெயரி லும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் நாடெங்கும் கல்வி நிலையங்களை நடத்தி வருகிறார்கள்.
14 ஆயிரம் பள்ளிகளையும், 60 கல்லூரி களையும் நடத்தி வருகிறார்கள்; மேல் படிப்புக்கான 25 கல்வி நிறுவனங்களும் உண்டு. ஜெய்ப்பூர், அஹ்மத் நகர் ஆகிய நகரங்களில் இந்துத்துவா ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கின்றனர். 18 இலட்சம் மாணவர் கள் இவர்களின் இந்துத்துவா கோட்பாட்டுக் கல்வி நிறுவனங்களில் பயின்று வருகின்ற னர்.
நவம்பர் 14-ஆம் நாள் நேருவின் பிறந்த நாளை குழந்தைகள் தினமாகக் கொண்டாட அரசு ஆணையிருந்தும் கோகுலாஷ்ட மியைத்தான் (கடவுள் கிருஷ்ணன் பிறந்த நாளாம்) குழந்தைகள் தினமாகக் கொண் டாடுகிறார்கள். டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண் டாடவேண்டும் என்பதே அரசு ஆணை. ஆனால், இவர்கள் நடத்தும் பள்ளிகளிலோ, வேதகால முனிவரான வியாசரின் பிறந்த நாளை ஆசிரியர் தினமாகப் போற்றி வருகின்றனர். (புராண வியாசரின் பிறந்த நாளை எப்படித்தான் தேடிப் பிடித்தார் களோ?)
உத்தரப்பிரதேசத்தில் இவர்களின் சரஸ்வதி சிசுமந்திர் பள்ளியில் ஏழாம் வகுப்பில் இடம் பெற்றுள்ளவை:
“முலாயம் சிங் யாதவ் இக்கால இராவ ணன் என்று ஏன் அழைக்கப் படுகிறார்?”
“பாபர் மசூதியை இடிக்கும் முயற்சி நடந்தபோது முலாயம்சிங் யாதவைச் சேர்ந்த ஆட்களின் துப்பாக்கிக் குண்டு களால் எத்தனை இந்துக்கள் கொல்லப்பட் டனர்?” (‘அவுட் லுக்‘ 10-5-1999)
இதுபோன்ற கேள்விகள் இடம் பெற்றால், அந்தப் பிஞ்சு உள்ளங்கள் எந்த அளவு ரத்த வெறியோடு தயாரிக்கப்பட்டு வெளியில் அனுப்பப்படும்?
கணக்குப் பாடத்தில் கூட அவர்களின் கோணல் புத்தியை விடவில்லை.
“10 கரசேவர்கள் சேர்ந்து பாபர் மசூதியை இடித்தால் இத்தனை நாளாகும்? 20 கரசேவர்கள் இடித்தால் எத்தனை நாளாகும்?” இதுதான் கணக்குப் பாடமாம்.
யூதர்கள் மீது வெறியைக் கிளப்புவதற்கு அடால்ப் ஹிட்லர் இந்த முறையைத்தான் பின்பற்றினார். யூதர் பெற்ற இலாபம் எவ்வளவு என்பதற்குப் பதிலாக யூதன் அடித்த கொள்ளை எவ்வளவு என்று கேட் கப்பட்டிருக்கும். பாசிஸ்டுகளும், நாஜிக ளும் கையாளும் அதே பாணியைத்தான் இந்த ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., சங்பரிவார் பாசிஸ்டுகளும் பின்பற்றி வருவதை முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.
இயேசுநாதர் இமயமலைக்கு வந்து இந்து சாமியார்களிடம் உபதேசம் பெற்று தான் பைபிள் எழுதினாராம்; மெக்காவில் பச்சை துணி போட்டு மூடப்பட்டு இருப்பது சிவலிங்கம்தான் என்றும் பாடப் புத்தகத்தில் எழுதி வைத்துள்ளார்கள். கிருஷ்ணன் கடவுளிடத்திலிருந்துதான் கிறிஸ்து வந்தார் என்று காஞ்சி சங்கராச்சாரியார் கூறவில் லையா?
இந்திய வரலாறு தலைமுறைகளை அழிக்கும் குண்டுகளைத் தயாரிக்கும் ஆலைகளாக (Bomb Factories) மாற்றப் பட்டு விட்டது பா.ஜ.க. ஆட்சியில் என் கிறார்கள், - ‘ஃபிரண்ட் லைன்’ ஏட்டின் கட்டுரையாளர்கள் பார்வதி மேனன் அவர் களும் டி.கே. இராஜலட்சுமி அவர்களும்.
பாடத் திட்டங்களை ஆய்வு செய்வதற் கென்றே உள்ள அரசு அமைப்பு தேசிய கல்வி மற்றும் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனம் (National Council for Educational Training and Research) என்ப தாகும்.
பா.ஜ.க. பள்ளிகளில் நடத்தும் பாடத் திட்டங்களைப் பற்றி ஆய்வு செய்த குழு தெரிவித்துள்ள கருத்து மனித மனசாட்சி யைத் தட்டி எழுப்பக் கூடியதாகும்.
“இத்தகைய கருத்துகளைக் கொண்ட நூல்கள் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பயிற்றுவிக்கப்படுமேயானால், நம் நாட்டின் எதிர்காலம் சீர்குலைந்துவிடும்; நாடு பேரழி வைச் சந்திக்க நேரிடும்” என்று எச்சரித் துள்ளது.
பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் கல்வித் திட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும் இந்தத் தன்மைபற்றி ஃபிரண்ட். லைன்’ ஏடு (2011-1998) இவ்வாறு கூறுகிறது.
“இந்த வரலாற்றுத் தவறுகள் ஒரு பக்கம் சார்ந்த பொய்கள், மாச்சர்யங்கள் காலத் தால் உண்மைக்குப் புறம்பானவை என எடுத்து வீசப்பட்டவை, கோட்பாடுகள், கற்பனைகள் இவையெல்லாம் அப்படியே விட்டு வைக்கப் படவில்லை. பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் இவை அவ்வப்போது அதிகப் பொய்களைக் கொண்டு வலுவூட்டப்படுகின்றன’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா ஏதோ இப்பொழுதுதான் இந்தப் பார்ப்பனீய வெறித்தனத்தை அரங்கேற்றுவதாகக் கருதக் கூடாது.
1992-இல் உ.பி.யில் ஆட்சியில் இருக் கும்போதே திட்டமிட்டுக் கல்வித் துறை யைக் காவி மயமாக்கியது.
50 வரலாற்றுப் பேராசிரியர்கள் அப் பொழுதே அதனைக் கண்டித்துக் கருத்துத் தெரிவித்தனர்.
“பாபரின் தளபதி மீர்பாசி. அவன் அயோத்தியிலும், அதேரியிலும் இருந்த இந்துக் கோயில்களை இடித்துத் தரைமட்ட மாக்கிவிட்டு அந்த இடங்களில் மசூதியைக் கட்டினான். பாபரின் மதக் கொள்கை இதுதான்.”
“ஆரியர்கள் வெளிநாட்டிலிருந்து வந்து இந்தியாவை ஆக்கிரமித் தார்கள். இந்தியாவின் பூர்வீகக் குடிமக்களான திரா விடர்களைத் தென்பகுதிக்கு விரட்டிவிட் டார்கள் என்பது பொய். ஆரியர்கள் இந்தியாவின் பூர்வீகக் குடிகள்.”
இவை போன்ற உண்மைக்கு மாறான வற்றை பொய்யென்று தெரிந்தே உ.பி. பா.ஜ.க. அரசு 1992 ஆம் ஆண்டிலேயே பள்ளிப் பிள்ளைகளுக்குப் பாடங்களாக வைத்திருந்தன.
இவற்றைக் கண்டித்து ஜவகர்லால் நேரு, ஜமியாமிலியா மற்றும் டில்லி பல் கலைக் கழகங்களைச் சேர்ந்த 50 வரலாற் றுப் பேராசிரியர்கள் கூட்டறிக்கை விடுத் தனர்.
மத்திய பிரதேசத்திலும் பா.ஜ.க. அரசு இதே பாணியைத் தான் பின்பற்றியது.
எதிர்ப்புக் குரல் கிளம்பிய நேரத்தில் அம்மாநிலக் கல்வி அமைச்சராக இருந்த விக்ரம் வர்மா என்ன கூறினார் தெரியுமா?
“வரலாற்றை எழுதும்போது அக்கால சமூக, பொருளாதார அமைப்புகளை அடிப்படையாகக் கொள்ளவேண்டுமே தவிர,ஆளுகிற மனிதர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பதை அடிப்படையாகக் கொண்டு கருத்தை உருவாக்கக் கூடாது என்ற கருத்தை ஏற்க முடியாது. இந்தக் கண்ணோட்டத்தில் வரலாற்றை எழுதுவது, இந்திய வரலாற்றுக்குப் பெருமை சேர்ப்பது ஆகாது. ஒரு இந்து அரசரை மக்களுக்கு எதிராக நடந்தார் என்றோ, ஒடுக்கு முறைக்காரர் என்றோ குறை சொல்லக் கூடாது’’ என்றார்.
காந்தியாரும், அலி சகோதரர்களும் இணைந்து அறிவித்த கிலாபத் இயக்கத்தை சுதந்திரப் போராட்டம் என்று கூறுவது தவறு; அது பெருமைக்குரியதல்ல; பாகிஸ் தான் பிரிவினைக்கு வித்திட்டதே அந்தக் கிலாபத் இயக்கம்தான் என்றும் ம.பி. பா.ஜ.க. அமைச்சர் கூறினார் என்றால் - அவர்களைப் பிடித்து ஆட்டும் இந்துத்துவா வெறி, உண்மைகளைத் துடிக்கத் துடிக்கக் கழுவிலேற்றி ரத்தம் குடிக்கும் ஓநாய்த் தனமானது என்பது விளங்கவில்லையா?
வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது டில்லியில் நடந்த கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ்.சை சேர்ந்த சிட்டியங்லா (இவர் கல்வி நிபுணராம்) ஒரு கல்வித் திட்டத்தைத் தயாரித்து அம்மாநாட் டில் அளிப்பதாக ஏற்பாடு. கல்வித் திட்டம் என்பது வேறு ஒன்றுமல்ல, இந்திமயமாக் குதல், தேசியமயமாக்குதல் ஆன்மிகமய மாக்குதல் ஆகியவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஒன்றாகும். கடும் எதிர்ப் பின் காரணமாக கைவிடப்பட்டது.
(அந்த மாநாட்டில்தான் கடவுள் வாழ்த்து என்ற பெயரால் சரஸ்வதி வந் தனம் பாடப்பட்டபோது, அன்றைய தமிழக கல்வி அமைச்சர் இனமான பேராசிரியரும், வேறு சில மாநிலத்தைச் சேர்ந்த கல்வி அமைச்சர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வெளிநடப்புச் செய்தனர் என்பது இந்த இடத்தில் நினைவூட்டத்தக்கதாகும்)
அய்.சி.எச்.ஆர் (ICHR - Indian Council of Historical Research) எனப் படும் இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கழ கத்தின் தலைவரான சுதர்சன் ராவ் ”மேற் கத்திய ஆய்வாளர்கள் வரலாற்றாய்வில் சான்றாதாரங்களை முதன்மையாக வைத்தே முடிவுக்கு வருகிறார்கள்”.
‘இந்தியா போன்ற தொன்மையான நாகரீகமும், கலாச்சாரமும் கொண்ட பகுதி யில் வாய்வழிக்கதைகளையும் தகவல்க ளையும் சான்றுகளாக கொள்வது தவிர்க்க இயலாதது”, “சனாதன வருணாசிரம தருமங் கள் இந்திய சமூகத்தில் அமைதியையும் ஒழுங்கையும் நிலைநாட்டியது, அவரவர் கடமையை அவரவர் செய்வதே வருணா சிரம தருமமாகும், இது மதங்கள் தோன்றுவ தற்கு முன்பே இந்தியாவில் இருந்துவரு கிறது” என்றார்
2015ஆம் ஆண்டு ஜனவரியில் நடை பெற்ற இந்திய அறிவியல் பேராயத்தில் இந்திய பல்கலைக்கழகங்களின் சமஸ் கிருதத் துறை பேராசியர்களைக் கொண்ட ‘‘சமஸ்கிருதத்தின் வழி வேத அறிவியல்” என்ற அமர்வு நடைபெற்றது. அந்த அமர் வில் ‘‘வேத காலத்திலேயே விமானத் தொழில்நுட்பம் (வைமானிக சாஸ்திரம்), உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, குவாண் டம் இயற்பியல், அணு இயற்பியல் நம் மிடையே இருந்தது.
அதை அறிந்து கொள்ள நாம் அனை வரும் சமஸ்கிருத மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும். மேற்கண்ட அறிவியல் அனைத்தும் இசுலாமிய படை யெடுப்பினாலும், காலனி ஆட்சியாளர் களாலும் அழிக்கப்பட்டது” என்று கூறினார்.
ஸ்டெம் செல் கண்டுபிடித்தது அமெ ரிக்கர்கள் அல்ல. மகாபாரதத்தில் காந்தாரிக் குக் குழந்தை பிறக்காமல் இருந்த போது, வசிஷ்டர் நூறு கவுரவர்களை ஸ்டெம் செல் முறை கொண்டு தான் உருவாக்கினார்.தொலைக்காட்சி, யோக வித்யா யோகக் கலை, விதய திருஷ்டி, ஞானக் கண் போன்ற முறைகள் நம்மிடையே இருந்தது. அதில் தான் பாரதப் போரை அஸ்தினாபுரம் அரண்மனையில் அமர்ந்து சஞ்ஜையா என்ற ஒருவன் மூலம் கண் தெரியாத திருதராஷ்டிரன் அறிந்து கொண்டார். ஆகவே, தொலைக்காட்சி என்பது நம்மி டையே முன்னரே இருந்தது. அனஸ்வரத் என்ற பெயரில் இயந்திர மோட்டார்கள் நம்மிடையே இருந்தது. புஷ்பக விமானம் என்று முன்னரே நாம் விமானங்கள் இயக்கியிருக்கிறோம். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை விநாயகருக்கு நாம் முன்னரே செய்திருக்கிறோம் (இதை மோடியே 25.10.2014 அன்று மும்பையின் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் மருத்துவ மனை ஆராய்ச்சி மய்யத்தை திறந்து வைத்து, நாட்டின் தலைசிறந்த மருத்து வர்கள் முன்னிலையில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டார்)
- இவையெல்லாம் குஜராத்தின் பாடத் திட்டத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக இருந்து கொண்டு இருக்கின்றது.
சுதர்சன் ராவ் ராமர், பரதர், பஞ்ச பாண்டவர்கள் வாழ்ந்த இடங்களை தொடர்ந்து ‘ஆய்வு’ செய்தவர், மகா பாரதத்தில் உள்ள அணு அறிவியல் என பல நூல்களை எழுதியுள்ளார். இவரது நூல்களை மோடி மிகவும் விரும்பிப் படிப் பார். மோடி குஜராத் முதல்வராக இருந்த போது குஜராத் பள்ளிப் பாடத்திட்டத்தில் இவரது நூலில் உள்ள பல கதைகள் அறிவியல் பாடத்தில் சேர்க்கப்பட்டது.
இவர் அரியானாவில் உள்ள சமஸ்கி ருதப் பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து ராமனின் வயதைக் கண்டுபிடித்து வெளியிட்டார். இதற்காக இவருக்கு முனைவர் பட்டத்திற்கு இணையான சிறப்பு பட்டமும் கிடைத்தது. (எப்படி இருக்கிறது!).
சுதர்சன் ராவ் பலமுறை மத்திய அரசின் ஆய்வுக்கழகம் மற்றும் தொல்லியல் துறை யில் முக்கிய பதவி கேட்டு விண்ணப்பித் திருந்தார். ஆனால் இவருக்கு தொடர்ந்து பதவிகள் மறுக்கப்பட்டு வந்த நிலையில் மோடி ஆட்சிப்பொறுப்பு ஏற்ற சில நாட் களில் இவருக்கு இந்திய வரலாற்று ஆராய்ச் சிக் கழகத்தின் தலைவர் பதவி வழங்கப் பட்டது அதன் பிறகு அவர் 28.6.2014-ஆம் ஆண்டு இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவராக பொறுப்பேற்றார்.
சான்றுகள், ஆதாரங்கள் அடிப்படை யில் வரலாற்றை எழுதக் கூடாது. கட்டுக் கதைகளையும் வாய்வழிச் செய்திகளையும் அடிப்படையாகக் கொண்டு வரலாற்றை எழுத வேண்டும் என்று கூறுகிறார் - கூறி யும் வந்தார். இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தின் (ICHR) தலைவர் உள்துறை அமைச்சர் அமித்ஷா வரலாற்றை மாற்றி எழுத வேண்டும், திருத்தி எழுத வேண்டும் என்று கூறுவது எல்லாம் இவர் போன்றவர் கள் வரலாற்றுத் துறை தலைவராக இருக் கிறார்கள் என்ற தைரியத்தில்தான்!
No comments:
Post a Comment