சொந்த நாடுகளை விட்டு வெளிநாடுகளில்
படிப்பு, வேலைவாய்ப்பு போன்றவற்றிற்காக குடியிருப்போர் குறித்த
கணக்கெடுப்பை மிக்ரேஷன் எனும் சர்வதேச நிறுவனம் நடத்தி, அதன் முடிவுகளை
வெளியிட்டுள்ளது. இதில், இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர். உலகம்
முழுவதும் சுமார் 17.5 மில்லியன் இந்தியர்கள் பல்வேறு நாடுகளில்
வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் அமெரிக்காவிலேயே வசிக்கின்றனர்.
இந்தியர்கள் மட்டுமின்றி, உலகின் மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களின் முதல்
தேர்வும் அமெரிக்காவாகவே உள்ளது. உலகில் இடம்பெயர்ந்து வாழ்பவர்களில்
மூன்றில் இரண்டு பேர் வேலைக்காக சென்றுள்ளனர். அமெரிக்காவில் வாழும்
இந்தியர்கள் மூலம் மட்டும் கடந்த ஆண்டு, 78.6 பில்லியன் டாலர்கள் இந்தியா
விற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்தியர்களுக்கு அடுத்தபடியாக அமெரிக் காவில் அதிகம் வசிப்ப வர்கள் சீனர்கள். மெக்சிகோ நாட்டினர் 3ஆவது இடத்திலும் உள்ளனர்.
No comments:
Post a Comment