Sunday, August 25, 2019

120 அடியை எட்டுகிறது மேட்டூர் அணை

மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டுகிறது. கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளிலும், கேரள மாநிலம், வயநாடு பகுதியிலும் பெய்த பலத்த மழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. அணைகளின் பாதுகாப்பு கருதி உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டது. உபரிநீர் காரணமாக காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகபட்ச மாக நொடிக்கு 2.40 லட்சம் கன அடி வீதம் வந்தது.  சனிக்கிழமை மாலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117.29 அடியாக உயர்ந்தது. அணையின் முழுக் கொள்ளளவான 120 அடியை விரைவில் எட்டும் நிலை உருவாகி உள்ளது. இந் நிலையில், கடந்த இரு தினங்களாக காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்தது. இதனையடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 10 ஆயிரம் கன அடியாகச் சரிந்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 10 ஆயிரம் கன அடி நீரும், கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 600 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 89.21 டி.எம்.சி.யாக உள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...