Sunday, August 25, 2019

விளைநிலங்களில் பெட்ரோல் டீசல் குழாய் பதிக்கும் திட்டம் தகவல் அறியும் சட்டத்தில் விவரம் கோரி 500 விவசாயிகள் மனு

தருமபுரி மாவட்டத்தின் வழியாக கோவை இருகூரிலிருந்து, கரு நாடக மாநிலம் தேவனகோந்தி வரை பெட்ரோல், டீசல் குழாய் பதிக்கும் திட்டம் குறித்து, தகவல் அறியும் சட்டத்தில் விவ சாய நிலங்கள் பற்றிய விவரம் கேட்டு, 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் தனித்தனியாக மனு அளித்தனர்.
கோவை மாவட்டம், இருகூரில் இருந்து கருநாடக மாநிலம் தேவனகோந்தி வரை பாரத் பெட்ரோலியம் கார்ப் பரேசன் சார்பில் பெட்ரோல், டீசல் ஆகியவை குழாய் மூலம் கொண்டு செல்ல முடிவு செய் யப்பட்டுள்ளது. இதற்காக, விவ சாய விளைநிலங்கள் வழி யாக குழாய் பதிக்கப்படவுள்ளது. இதனால், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்ம புரி, கிருஷ்ணகிரி உள் ளிட்ட 7 மாவட்டங்களில் உள்ள நூற் றுக்கணக்கான விவசாயி களின் விளைநிலங்கள் பாதிக்கப்படு கிறது. இந்த திட் டத்தை நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதி வழி யாக கொண்டு செல்ல வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து வரு கின்றனர்.
இத்திட்டத்தை செயல் படுத்துவதற்கான அறிவிப்பு, மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் சார்பில், அரசி தழில் வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பான பணி களுக்காக புஷ்பா என்ற அதி காரியும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இத்திட்டம் எந்ததெந்த மாவட்டங்களில் விளை நிலங் கள் வழியாக செல்லும் என நிலங்களில் சர்வே எண், கையகப் படுத்தப்பட உள்ள நிலத்தின் அளவு உள்ளிட்ட வைகளும் தெரிவிக்கப்பட் டுள்ளது.
இதனால், விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். இந் நிலையில், தர்மபுரி மாவட் டத்தை சேர்ந்த ராமர்கூடல், சின்னம்பள்ளி, பெரும்பாலை, அரகாசனஅள்ளி, மாக்கனூர் ஊராட்சி பகுதியை சேர்ந்த விவசாயிகள்,  22ஆம் தேதி தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திரண்டனர்.
பின்னர், சமூக ஆர்வலர் பியூஸ் மானூஸ் தலைமையில், 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் தனித்தனியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பொது தகவல் அதிகாரியிடம் ரூ.10 மதிப்புள்ள நீதிமன்ற வில்லை ஒட்டி, தகவல் அறியும் சட்டத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில், பாரத் பெட் ரோலிய நிறுவனத்தால், இருகூர் முதல் தேவனகோந்தி வரை பெட்ரோலிய குழாய் பதிப்பு தொடர்பான பணிகள் தொடர் பான அனைத்து கோப்பு களையும் பார்வையிட, சரியான நேரத்தை குறிப்பிட்டு ஒதுக்கு மாறு கேட்டுக்கொள்வதாக கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, விவசாயிகள் கூறுகையில், ‘தகவல் அறியும் சட்டத்தில் எந்தெந்த விவசாயி களின் நிலத்தின் வழியாக இத் திட்டம் செல்கிறது என் பதை கேட்டு மனு செய்துள்ளோம். எங்கள் விவசாய நிலத்தின் வழியாக கொண்டு செல்லாமல், மாற்றுப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும்,’ என்றனர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...