Thursday, August 29, 2019

மீனவர் வயிற்றில் அடியா? மீனவர் நலத்துறையும் மத்திய அரசின் கைகளுக்கு செல்லும் அவலம்


மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் வகையிலும், மீனவர் நலனில் மாநில அரசிற்கு உள்ள உரிமையைப் பறிக்ககும் வகையிலும் மோடி தலைமையிலான பாஜக அரசு புதிய திட்டம் ஒன்றைக் கொண்டு வந்துள் ளது. இதன் மூலம் மீனவர் உரிமை பறிபோகும் அபாயம் உருவாகி யுள்ளது.
ஆழ்கடல் மீன் பிடித்தல், உரிமம் வழங்குதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தொடர்பாக புதிய சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள மத்திய அரசு முயற்சித்து வருவதாகவும், இதற்கான சட்ட முன்வடிவை மாநில அரசுகளுக்கு அனுப்பி கருத்துக் கோரியுள்ளது.
இப்புதிய சட்டத்திருத்தம் கொண்டு வந்தால் ஆழ்கடல் தொடர் பான மாநில அரசுகளின் அதிகா ரங்கள் பறிபோகும் மேலும், விசைப் படகு மீனவர்களுக்கு ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்கான அனுமதி வழங்கும் அதிகாரமும் மத்திய அரசின் வசம் சென்றுவிடும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமையின்படி இது வரை, ஆழ்கடலில் 12 நாட்டிக்கல் மைல் வரையிலான கடற்பரப்பில் மீன்பிடி உரிமை வழங்குதல் உள் ளிட்ட கட்டுப்பாடுகள் மாநில அரசு வசம் இருந்து வருகிறது.
இந்நிலையில், புதிய சட்டத் திருத்தத்தின் மூலம் ஆழ்கடலில் மீன்பிடிக்க, விசைப்படகுகளுக்கு அனுமதி வழங்குவது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மத்திய அரசின் வசம் கொண்டு வர பா.ஜ.க முயற்சித்து வருகிறது.
இதன் மூலம் எல்லைக் கட்டுப் பாடின்றி அந்நிய கார்பரேட் நிறு வனங்களுக்கு மீன் பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டுவிடும்.
மேலும், மாநில அரசின் உரிமை பறிக்கப்பட்டால் காலங்காலமாகச் செய்து வரும் மீன்பிடித் தொழில் கடுமையான பாதிப்பைச் சந்திக்க நேரிடும் மேலும் மாநில அரசு
களின் மூலம் மீனவர் களுக்கு கிடைக்கும் அனைத்து சலுகைகளும் பறிக்கப் பட்டுவிடும், இதன் மூலம் மீனவர்கள் பெரும் கார்பரேட் நிறுவனங்களுக்கு கொத்தடிமை களாக சென்று மீன் பிடி தொழிலை செய்யவேண்டிய அவலத்திற்கு ஆளாவார்கள்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...