Thursday, August 29, 2019

தழும்பை தவிர்க்கும் மஞ்சள் பிளாஸ்திரி


மஞ்சள் ஒரு கிருமி நாசினி. புண்களை ஆற்றும் திறன் கொண்டது என்பது நம் பாட்டிகளுக்கே தெரிந்திருந்தது. அதை சுவிட்சர்லாந்திலுள்ள, எம்ப்பா ஆய்வு மய்யம் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.
விரைவில் கரையும் உயிரி பாலிமர்களால் ஆன பஞ்சு போன்ற பொருளில், மஞ்சளில் உள்ள, 'குர்குமின்' என்ற பொருளை வைத்து, புண்களின் மேல் பிளாஸ்திரி போல போட்டு சோதித்தனர், விஞ்ஞானிகள். தோலின் செல்கள், உயிரி பாலிமர்களுக்கு இடையே உள்ள சந்து, பொந்துகளில் புகுந்து வளர ஆரம்பித்தன. இப்படி வளரும் செல்கள் வழக்க மாக தழும்பை உருவாக்கும். ஆனால், உயிரி பாலிமரில் ஊற வைக்கப்பட்ட குர்குமின், செல்களை இயல்பாக வளர வைத் தன. இதனால், பெருமளவு தழும்பு உருவாகாமலேயே புண்கள் ஆறின. மஞ்சள் பிளாஸ்திரியை புண்ணின் வடிவத் திற்கு ஏற்ப வெட்டி ஒட்ட முடியும். உயிரி பிளாஸ்திரிக்கு வளைந்துகொடுக்கும் திறன் உண்டு என்பதால், முழங்கை, முழங்கால் பகுதிகளிலும் அதை ஒட்டி வைக்க முடியும்.
சோதனை கட்டத்திலிருக்கும் மஞ்சள் பிளாஸ்திரி விரைவில் சந்தைக்கு வரும் என, எதிர்பார்க்கலாம்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...