Sunday, August 25, 2019

பார்லே பிஸ்கட் நிறுவனத்தில் 10,000 தொழிலாளர்களை பணி நீக்க வாய்ப்பு

இந்தியாவின் மிகப்பெரிய பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான பார்லே புராடக்டஸ் பிரைவேட் லிமிடெட் 10,000 தொழி லாளர்களை பணி நீக்கம் செய்யக் கூடும். ஏனெனில் பொருளாதார வளர்ச்சி குறைந்து வருவதோடு கிராமப்புற மய்யப்பகுதிகளில் தேவை யும் சரிந்து வருவதால் உற்பத்தியின் அளவை குறைப்பதாக பார்லே நிறுவனத்தின் நிர்வாகி தெரிவித்தார்.
ஆசியாவின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதாரமான இந்திய பொருளாதாரம் கார் முதல் ஆடைகள் வரை விற்பனை சரிவை எதிர்கொண்டு வருகிறது. உற்பத்தியை குறைக்க நிறுவனங்கள் கட்டாயமாகி வருகிறது.
வளர்ச்சியை புதுப்பிக்க அர சாங்கம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தி யுள்ளது.
பார்லே பிஸ்கட் விற்பனையின் வீழ்ச்சியினால் உற்பத்தியை குறைக்க வேண்டியிருக்கும்.
இதன் விளைவாக 8,000லிருந்து 10,000 பேர் பணிநீக்கம் செய்யப் படலாம் என்று மும்பையில் இருந்து பார்லேவின் பிரிவுத் தலைவர் மயங்க் ஷா கூறினார்.
“நிலைமை மிகவும் மோசமானது, அரசாங்கம் உடனடியாக தலையிடா விட்டால் வேலைவாய்ப்பு இழப்பு என்பது கட்டாயமாகிவிடும்” என்று அவர் கூறினார்.
1929ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பார்லே நிறுவனத்திற்கு சொந்தமாக 10 நிறுவனங்கள், 125 ஒப்பந்த உற்பத்தி ஆலைகள் நேரடி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் உட்பட சுமார் ஓர் இலட்சம் பேரை பணியில் அமர்த்தி யுள்ளது.
பார்லே நிறுவனத்தின் அதிகாரி ஷா, பார்லே பிஸ்கட் பிராண்டு களுக்கான தேவை வேகமாக சரிந்து வருகிறது.
2017 ஆம் ஆண்டு முதல் விதிக்கப் பட்ட ஜிஎஸ்டி வரியினால் ஒவ்வொரு பிஸ்கட்டிற்கு ரூ. 5 வரியாக கட்ட வேண்டிய சூழலை ஏற்படுத்தியுள்ளது.
அதிக வரி காரணமாக ஒவ்வொரு பேக்கிலும் குறைவான பிஸ்கட்களை வழங்கி வருகிறது பார்லே.
இது கிராமப்புற இந்தியாவில் குறைந்த வருமானம் கொண்ட நுகர்வோரின் தேவையை குறைத் துள்ளது. இது பார்லேவின் வருவாயை பாதிக்கும் மேலாக குறைத்துள்ளது.
“இங்குள்ள நுகர்வோர்கள் விலை யில் தான் மிகவும் கவனமாக உள் ளனர். குறிப்பிட்ட விலைக்கு எத் தனை பிஸ்கட் பெறவேண்டும் என் பதில் கவனமாக உள்ளனர்” என்று ஷா தெரிவித்தார்.
1.4 பில்லியன் டாலருக்கும் அதிகமான வருவாயைக் கொண்ட பார்லே, கடந்த ஆண்டு ஜிஎஸ்டி வரி விகிதங்களை மறுபரிசீலனை செய் யுமாறு முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லியுடன் பேச்சு வார்த்தை நடத்தியது.
பார்லே குளுக்கோ என்று அழைக்கப்பட்ட மும்பையை தலை மையிடமாக கொண்ட நிறுவனத்தின் பெயர்தான் பார்லே-ஜி என்று மாற்றப் பட்டது.
1980- - 1990களில் அனைத்து வீடுகளிலும் உச்சரிக்கப்படும் பெய ராகவும் இருந்தது.
2003 ஆம் ஆண்டில் பார்லே ஜி உலகின் மிகப்பெரிய பிஸ்கட் பிராண்டாக கருதப்பட்டது.
இந்தியாவின் பொருளாதார மந்தநிலை ஏற்கெனவே அதன் முக் கியமான வாகனத் தொழிலில் ஆயி ரக்கணக்கான வேலை இழப்புகளுக்கு வழி வகுத்தது. தேவையில் வீழ்ச்சியை துரித்தப்படுத்தியது என்று  ஷா கூறினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...