Sunday, August 25, 2019

சுடுகாட்டுக்கு இடம் ஒதுக்கக்கோரி பொதுமக்கள் போராட்டம்

திருவண்ணாமலை தேனிமலையில் சுடுகாட்டுக்கு இடம் ஒதுக்கீடு செய்யக் கோரி, போட்டாட் சியர்அலுவலகத்தில் இரவு முழுவதும் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் கோட்டாட்சியர் சிறீதேவி பேச்சுவார்த்தை நடத்தினார். திருவண்ணாமலை தேனிமலை பகுதியில் 1.50 ஏக்கர் நிலத்தை அப்பகுதியை சேர்ந்த ஒருபிரிவினர் சுடுகாடாக பயன்படுத்தி வந்தனர். மற்றொரு பிரிவினர் இந்த நிலம் தங்களுக்கு சொந்தமானது என கூறி எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
மேலும், இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனுதாரர்களுக்கு சம்பந்தப்பட்ட நிலத்தை அளந்து கொடுக்கு மாறு வருவாய்த்துறையினருக்கு உத்தர விட்டது.
அதன்பேரில், வருவாய்த்துறை அதிகாரிகள் இடத்தை அளவீடு செய்து, நிலத்தை சுற்றிலும் கடந்த 21ஆம் தேதி கம்பிவேலியை அமைத்தனர்.
தேனிமலை பகுதியை ஒருபிரிவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சுடுகாட்டுக்கு இடம் ஒதுக்கீடு செய்யக் கோரியும் நேற்று முன்தினம் அந்த பகுதியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், மாலை 6 மணி யளவில் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்ற பொது மக்கள், தங்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை அங்கிருந்து செல்ல மாட்டோம் என கூறி, இரவு முழுவதும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று காலை 10 மணியளவில் அலுவலகத்திற்கு வந்த கோட்டாட்சியர் சிறீதேவி போராட்டத்தில் ஈடு பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கோட்டாட்சியர், மனுதாரர் அவருக்கு சொந்தமான இடம் என உரிய ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின்படிதான் இடம் அளவீடு செய்து வேலி அமைக்கப்பட்டுள்ளது என்றார். அதற்கு போராட்டக்காரர்கள், பிரச்சினைக்குரிய அந்த இடத்தை யாரும் பயன்படுத்தாத வகையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கூறி மனு அளித்தனர். மனு மீது உரிய விசாரணை நடத்தப்படும் என கோட்டாட்சியர் தெரிவித்ததையடுத்து, காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...