Wednesday, July 19, 2017

பெரியாரைப் புரிந்து கொள்ள இதோ இரண்டு வெளிச்சங்கள்!

தந்தை பெரியார் என்ற பகுத்தறிவுப் பகலவன் பற்றி இப்போது ஏராளமான நூல்கள் 
வெளிவருகின்றன.

பல நூல்கள் பெரிதும் வணிக நோக்கத்தோடு வந்தாலும்கூட, சில அரிய நூல்கள் அய்யாவின் அறிவார்ந்த சுயமரியாதை, விஞ்ஞானத்தின் விளக்க ஏடுகளாக விவரங்களும், விவேகமும் உள்ளடக்கமான நூல்களாக வெளிவந்துள்ளன!


தந்தை பெரியார் என்ற ஒப்பாரும் மிக்காருமான சுயசிந்தனையாளர் பற்றி வெளிவரும் நூல்களை மூன்று வகைகளாகப் பகுக்கலாம்!


1. தந்தை பெரியாரைத் தெரிந்து கொள்ளுதல் - நூற்கள் வகையறா,


2. தந்தை பெரியாரை அறிந்து கொள்ளும் நூல்கள் பட்டியல்!


3. தந்தை பெரியார் பற்றிப் புரிந்து கொள்ளும் அரிய நூற்கள்!

மூன்றாவது (பட்டியலின்படி) - புரிந்து கொண்டு, மகிழ வேண்டிய வாய்ப்புள்ள நூல்கள் இரண்டு அண்மையில் வெளிவந்துள்ளன.

ஒன்று நீடாமங்கலம் தோழர் 'நீலன்' அவர்களால் தொகுக்கப்பட்ட "பெரியாரைத் தெரியுமா?" என்ற நூல்.


மற்றொன்று அண்மையில் 16.7.2017 அன்று திருவாரூரில் நடைபெற்ற திருவாரூர் மண்டலக் கழகக் கலந்துரையாடலின்போது, தோழர் ஞான.வள்ளுவன் அவர்களால் மேடையில் என்னிடம் தரப்பட்ட நூல்.


முன்னே குறிப்பிட்ட தோழர் 'நீலன்' அவர்களது நூலை, தோழர் கவிஞர் கலி.பூங்குன்றன்
மூலமாக அதன் தொகுப்பாசிரியர் நீடாமங்கலம் தோழர் நீலன் அவர்கள் எனக்கு அளித்த சில நாள்களில் (2 வாரங்கள் முன்பு) படித்தேன். சுவைத்தேன். ஆம். அது ஒரு தேன்கூடு - தெவிட்டாத கருத்துக் கொம்புத் தேன்!


முகவுரையில் தொகுப்பாசிரியர் நீலன் கூறுகிறார் கேளுங்கள்.

"இந்நூல் தந்தை பெரியாருடைய வாழ்க்கை வரலாற்று நூல் அல்ல. அவர் வாழ்க்கையில் நடைபெற்ற, கடைப்பிடித்த கொள்கைகளின், சித்தாந்தங்களின் வெளிப்பாடுதான் இந்நூல்! பெரியார் அவர்களின் சமுதாயம், அரசியல், பொருளாதாரம், கலை இலக்கியம், விஞ்ஞானம் போன்ற தலைப்புகளில் எடுத்துச் சொல்லிய உயர் கருத்துக்களின் தொகுப்பே இந்நூல். இதில் நம்முடைய சொந்தக் கருத்து எதுவும் இல்லை".

500 பக்கங்கள் - 300 ரூபாய். இன்றைய காலகட்டத்தில் இதை அதிக விலை என்று கூறிட முடியாது. பெரியார் பற்றி புரிந்து கொள்ள பெரிதும் உதவும் அரிய கருவூலம் இந்நூல்.
அதுபோலவே அரசு ஊழியத்திலிருந்து ஓய்வு பெற்ற தோழர் ஞான.வள்ளுவன், வைத்தீசுவரன் கோயில் என்ற ஊரைச் சேர்ந்த கழக வீரர்! ஆசிரியர் ஞானசம்பந்தம் அவர்களின் கொள்கை விழுது (மகன்). தந்தையாரும், தந்தை பெரியாரும் இவரைச் செதுக்கியுள்ளனர் சிறப்பாக என்பது அவர் தனித்துவத்தினைக் காட்டுகின்றது.

தந்தை பெரியார் பெயரில், பெரியார் 95 என்ற தலைப்பில் 95 தலைப்புகளில் எழுதியுள்ள இந்நூல் தந்தை பெரியார் பற்றி மட்டுமல்ல (அவரது இளமைக்காலம், வாழ்வு பற்றி மட்டுமல்ல) - அவரது இயக்கம், பங்கேற்ற போராட்டங்கள், பல்வேறு தோழர்கள் - தொண்டர்கள் - அன்னை மணியம்மையாரின் தொண்டறம், அவரது அரிய முடிவான தீர்க்கங்கள், அவர் சந்தித்த துரோகங்கள் உள்பட, நயத்தக்க நாகரிகத்துடன் உண்மைகளை களபலியாக்காமல், படிக்க ஏதோ ஒரு புதினம் போல எழுதியுள்ளார் அவர்.

நமது இயக்க நூல்கள் - வரலாறு - போராட்டங்கள் இவைகளின் ஒரு பிழிவு (ஞிவீரீமீst) என்ற பாணியில் இந்நூல் சுவைபட அமைகிறது.

மாலை 7.30 மணிக்குத் தந்தார் திருவாரூரில், அறைக்குச் சென்று ரயிலுக்கு வருமுன்னரும், வந்த பின்னர் தொடர் வண்டியில் இரவு தூக்கத்திற்கு முன்பும் படித்தேன், சுவைத்தேன்!
இவ்விரு நூல்களும் குறிப்பாக இளைய சமுதாயத்தினர் அய்யாவைப் புரிந்து கொள்ள பெரிய வழிகாட்டி (நிuவீபீமீ) நூற்கள் போல அமைந்துள்ளன! இந்நூல் 454 பக்கங்கள் - 300 ரூபாய் விலை.
நவில் தொறும் நூல் நயம் பொங்கி வழிகின்றன!

வாங்கிப் படியுங்கள்; இதில் உள்ள பல அரிய கருத்துக் கருவூலங்களை,  Whatsapp, Twitter, Facebook  போன்றவற்றில் சிறிது சிறிதாக எடுத்துப் போட்டுப் பரப்பவும் செய்யுங்கள்.

அவரவர்கள் தொண்டறப் பணியாகட்டும்!

நூல்: பெரியாரைத் தெரியுமா?, தொகுப்பாசிரியர்: உ.நீலன், அருள் பதிப்பகம், 6, வினாயகம் பேட்டை தெரு, சைதாப்பேட்டை, சென்னை - 15. தொலைபேசி: 044-24355052

நூல்: பெரியார் 95, ஆசிரியர்: ஞான.வள்ளுவன், இனியன் பதிப்பகம், தந்தை பெரியார் இல்லம், 55/24, வடக்குத் தேர் தெரு, வைத்தீசுவரன் கோயில் - 609 117. சீர்காழி வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம். கைப்பேசி: 94439 85889.

பனிலிங்கம் என்னும் பித்தலாட்டம்

ஜம்மு-சிறீநகர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்நாத் குகையில் பனி லிங்கத்தைக் காணச் சென்ற பக்தர்கள் பயணம் செய்த பேருந்து ஒன்று 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளா னதில் 16 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட் டோர் காயமடைந்தனர்.

அமர்நாத் பனிலிங்கத்தைக்காணச் செல்கின்ற பக்தர்கள் பேருந்து மூலமாக மலை அடிவாரத்தி லிருந்து, மலைக் கோவிலுக்கு பலத்த பாதுகாப் புடன்  அழைத்துச் செல்லப்படுவர். ஜம்மு - காஷ் மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் குகை 3,888 மீட்டர் உயரத்திலும், சிறீநகரிலிருந்து 141 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. 


அமர்நாத் குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தைக் காண்பதற்காக ஆண்டுதோறும்  சென்று வருகிறார்கள். ஜூலை மாதத்தில் உருவாகும் இந்த பனிலிங்கம் சுமார் 2 மாதத்தில் இருக்கும் இடம் தெரியாமல் உருகிவிடும். இரண்டு மாத இடைவெளிக்குள் அமர்நாத் குகை பனி லிங்கத்தைக் காண வருவோருக்கு பால்டல் மற்றும் சந்தன்வாரி ஆகிய இரண்டு வழிகளில் அமர்நாத்துக்கு செல்ல பாதைகள் உருவாக்கப்பட் டுள்ளன.


எல்லையோர மாநிலமான காஷ்மீர் மாநிலத் தில் அமையப்பெற்றுள்ள இக்கோயில் இந்திய இராணுவத்தினரின் கண்காணிப்பில் உள்ளது. ஆகவே, மத்திய அரசின் முன் அனுமதியைப் பெற்றே இங்கு செல்ல முடியும்.  


இந்நிலையில், கடந்த 16ஆம் தேதி அன்று  ரம்பான் மாவட்டம் அருகே ஜம்மு - சிறீநகர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்நாத் யாத்ரீகர்கள் பயணித்த வாகனம் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வாகனத்தில் இருந்தவர் களில் 16 பேர் பலியாகினர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வேதனைக்குரியது இது!


இந்த ஆண்டுக்கான அமர்நாத் பயணம் கடந்த ஜூனில் தொடங்கி வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கடந்த ஆண்டைவிட நாள் களின் எண்ணிக்கை இந்த ஆண்டில் குறைக்கப் பட்டுள்ளது.


கடந்த வாரத்தில் அமர்நாத் பயணம் மேற் கொண்டவர்களின் பேருந்துமீது நடத்தப்பட்ட தீவிரவாதிகளின் தாக்குதலில் 8 பேர் பலியானார்கள். தற்போது விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் உள்ளவர்களில் சிலரின் நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


ஒவ்வொரு ஆண்டும் விபத்துகளும், பலிகளும் நடந்து கொண்டேதான் உள்ளன.

பட்டபின்புகூட புத்தி கொள்முதல் பெறவில்லை என்றால் என்ன காரணம்? பக்தி வந்தால் புத்தி போகும் என்ற தந்தை பெரியாரின் அறிவுவாக்கு தான்.

பகுத்தறிவாளர் சங்கத்தின் அகில இந்திய முக் கிய தலைவர் சேனல் இடமருகு அமர்நாத்துக்கே நேரில் சென்று பனிலிங்கம் பித்தலாட்டத்தை அம் பலப்படுத்தினார்.


லிங்கக் கடவுள் என்பது உண்மையானால், அது ஏன் பனிக்காலத்தில் மட்டும் தோற்றமளிக்க வேண் டும்? குறிப்பிட்ட இடத்தில் மலையின் அமைப்புக் கேற்ற வகையில் செங்குத்தாக பனி மலை உறை கிறது. இயற்கையாக நடக்கும் இந்தக் காட்சியை பனி லிங்கம் என்று புரளியாகக் கிளப்பிவிட்டனர். இந்தப் பனிலிங்கத்தை இந்து மதத்தில் இன்னொரு பிரிவினரான வைணவர்கள் ஏற்றுக் கொள்வ தில்லை.


இந்தப் பனிலிங்கத்தின் பக்கத்தில் ஸ்டவ் பற்ற வைக்கக் கூடாதாம். ஏன் தெரியுமா? சூடு பட்டால் பனி உருகி சிவலிங்கத்தின் கற்பனை வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிவிடுமே!

அவர்கள் சொல்லுகிற அந்த வழிக்கே வரு வோம். தன்னை நாடி வரும் பக்தர்கள் பலியாகிறார் களே! அவர்களைக் காப்பாற்ற வக்கில்லாதது கடவுள்தானா?

மக்கள் நல அரசாக இருக்குமானால் இந்த மோசடியைத் தடை செய்ய வேண்டும்.

நீட் தேர்வு: விலக்குக் கோரி தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும்

சென்னை, ஜூலை 19 நீதிமன்றத்தில் ஆணித்தரமாக வாதிட்டு அரசாணை யைக் காப்பாற்றாதது ஏன்? குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலைப் பயன் படுத்தி ‘நீட்’ தேர்வுக்கு அழுத்தம் தரப் படுமா? என்று சட்டப் பேரவையில் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று கேள்வி எழுப்பினார்.
சட்டப் பேரவையில் நேற்று (18.7.2017 கேள்வி நேரம் முடிவுற்றதும் எதிர்க் கட்சித் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள், சில முக்கிய பிரச்சினைகளை ‘தகவல் கோரலின்’ கீழ் எடுத்துரைத்து உரையாற்றினார். 

அப்போது தளபதி மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டதும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதமும் வருமாறு:-


தளபதி மு.க. ஸ்டாலின்: - அடுத்து, ஒரு முக்கியமான பிரச்சினை. ‘ழிணிணிஜி’ தேர்வுப் பிரச்சினை. இந்தப் பிரச்சினை குறித்து பல நேரங்களில் இங்கு விவா திக்கப்பட்டிருக்கிறது. எனவே, அதிக மாக அதைப்பற்றி நான் விவாதிக்க விரும்பவில்லை என்று சொன்னாலும், அவசியத்தை, அவசரத்தை, இன் றைக்கு இருக்கக் கூடிய மாணவர்கள் படக்கூடிய துன்பங்களை, துயரங்களை அடிப்படை யாக வைத்து, ஒரே யொரு பிரச்சினையை நான் இங்கு தங்கள் மூலமாக இந்த அவைக்கு, இந்த அரசின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

மாநிலப் பாடத் திட்டத்தில் 4.2 இலட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். சி.ஙி.ஷி.ணி. பாடத் திட்டத்தில் 4,675 பேர் மட்டுமே படித்துக்கொண்டிருக்கிறார் கள். ‘ழிணிணிஜி’ தேர்வு எழுதியிருக்கும் 88,431 பேரில், ஜூன் 22ஆம் தேதியிட்ட ஆணையில் குறிப்பிட்டிருக்கின்ற அடிப் படையில், சிஙிஷிசி பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள் 4,675 பேர் மட்டுமே. மீதமுள்ள 84,000 மாணவர்கள் மாநில பாடத் திட்டத்தில் +2 படித்தவர்கள். ஆகவேதான், ‘ழிணிணிஜி’ தேர்வுக்கு விலக்க ளிக்க வேண்டுமென்று வலியுறுத்தி, இதே சட்ட மன்றத்தில், 1.--2.2017 அன்று ஏகமன தாக எல்லா கட்சிகளும் ஒருங்கி ணைந்து இரண்டு மசோதாக்களை நிறை வேற்றி, அந்த இரண்டு மசோ தாக்களுக் கும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டு மென்ற நிலையில், டில் லிக்கு அனுப்பி வைத்தோம். ஆனால், அது குடியரசுத் தலைவருக்கு அனுப்பப் படாமல் மத்திய அரசின் அலுவலகத்தி லேயே கட்டிப் போட்டு வைத்திருப்பது, கூட்டாட்சித் தத்துவத்திற்கு அது விரோ தமாக இருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில், மாநிலப் பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு ‘ழிணிணிஜி’ தேர்வின் அடிப்படையில் 85 சதவிகித இடங்களை ஒதுக்கி, 22.6.2017 அன்று அரசாணை வெளியிடப்பட்டிருக் கிறது. மாநிலப் பாடத் திட்டத்தில் படித் தவர்களையும், மத்தியில் உள்ள சி.ஙி.ஷி.ணி. பாடத்திட்டத் தில் படித்தவர்களையும் ஒரே தட் டிலே வைத்து நாம் பார்க்க முடியாது என்பதை நீதிமன்றத்தில் ஆணித் தர மாக வாதிட்டு, அரசாணையை இந்த அரசால் காப்பாற்ற முடியவில்லை என்பது ஒரு செய்தி.

 அழுத்தம் கொடுத்திருக்கலாம்!


அதைவிட ஒரு அருமையான சந் தர்ப்பம், இந்த அரசுக்குக் கிடைத்தது. குடியரசுத் தலைவர் தேர்தலில், மத் தியில் உள்ள பா.ஜ.க.வின் வேட்பாள ருக்கு ஆதரவு அளிப்பதற்கு முன்பாக, இந்த ‘ழிணிணிஜி’ தேர்வு மசோதாவுக்கு ஒப்பு தலைப் பெற அழுத்தம் கொடுத்திருக் கலாம். அதையும் இந்த அரசு செய்ய வில்லை. 


மருத்துவக் கலந்தாய்வு முடிந்த பிறகு, பொறியியல் கலந்தாய்வு நடப்பது தான் வழக்கம். ஆனால், இந்த முறை ‘ழிணிணிஜி’ தேர்வுக் குழப்பத்தால், மருத்து வக் கலந்தாய்வு தடைபட்டிருக்கிறது. ஆனால், பொறியியல் கலந்தாய்வு நேற் றிலிருந்து நடக்கத் தொடங்கியிருக்கிறது.


ஆகவே, மாணவர்களுடைய எதிர் காலம் பாதிக்கப்பட்டிருக்கிறது. பெற் றோர்கள் பெரிய கவலைக்கும், அவ திக்கும் ஆளாகியிருக்கிறார்கள்.


எனவே, இதற்கெல்லாம் முதல் காரணமாகத் திகழும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காதது இந்த அரசு தான் என்பதை நான் இங்கே அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்ய விரும்புகி றேன். எனவே, தமிழகத்திற்கு மன்னிக்க முடியாத ஒரு துரோகத்தை மத்திய, மாநில அரசுகள் செய்திருக்கின்றன.


எனவே, நான் நிறைவாகக் கேட்க விரும்புவது, மத்திய அரசிடம் இருக் கக்கூடிய ‘ழிணிணிஜி’ தேர்வு தொடர்பான இரண்டு மசோதாக்களுக்கு உடனடி யாக குடியரசுத் தலைவரின் ஒப்புத லைப் பெறுவதற்கான முயற்சிகளிலே நீங்கள் ஈடுபட வேண்டும். குடியரசுத் தலைவர் தேர்தல் முடிந்துவிட்டது. அடுத்து, குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

எனவே, குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலைப் பயன்படுத்தியாவது, இந்த அரசு, இந்த ‘ழிணிணிஜி’ தேர்வுப் பிரச்சினையிலே முழுக்கவனம் செலுத்தி, முழு அழுத்தத்தைத் தர வேண்டுமென்று பேர வைத்தலைவர் மூலமாக நான் அரசைக் கேட்டு அமைகிறேன்.

நீட் தேர்வு: முடிந்துவிடவில்லை முடிவு காணும்வரை போராட்டம் தொடரும்!

சென்னை, ஜூலை 19- 'நீட்' பிரச்சினை முடிந்துவிட்டது என்று யாரும் முடிவுக்கு வர வேண்டாம். நல்ல முடிவு காணும் வரை மக்கள் போராட்டம் தொடரும் - எங்கள் போராட்டம் தொடரும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

இன்று பேராயர் எஸ்றா சற்குணம் அவர்களின் 79 ஆம் ஆண்டு பிறந்த நாளினையொட்டி சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடைபெற்ற விழாவின்போது செய்தியாளர்களைச் சந்தித்தார் தமிழர் தலைவர்.

நீட் தேர்வை எதிர்த்து ஒரு சமூகநீதி போராட்டம் நாடெங்கும் வெடித்திடும். இதுவரையில் தொடர்ந்து ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் சார்பாக அத்துணை கட்சிகளையும் திராவிடர் கழகம் ஒருங்கிணைத்து ஆர்ப்பாட்டங்களையும், மாநாடு, கருத்தரங்குகளையும் நடத்தியது. மாணவர்கள், பெற்றோர்கள் முயற்சியினாலும் ஒரு கோடி அஞ்சலட்டைகளை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வருகின்றனர்.


பாதிக்கப்பட்ட மாணவர்கள் ரத்தத்திலே கையெழுத்திட்டு...


நேற்று முன்தினம் பாதிக்கப்பட்ட மாணவர்கள் ரத்தத்திலே கையெழுத்திட்டு, தங்கள் நெஞ்சத்தில் வடியக்கூடிய ரத்தக் கண்ணீரையும் அவர்கள் பிரதிபலித்திருக்கிறார்கள். எங்களையும் சந்தித்தனர்.


இதையெல்லாம் பார்த்தும் தமிழ்நாடு அரசு இன்னமும் மவுனம் சாதிக்கக் கூடாது தமிழக சட்டப்பேரவையில் ஏற்கெனவே ஆறு மாதங்களுக்கு முன் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவேண்டும் என்று மத்திய அரசினை வற் புறுத்தி, தங்களுடைய மாநில உரிமையை நிலை நிறுத்தவேண்டும்.


இந்திய அரசியல் சட்டப்படி, தமிழ்நாடு அரசு நீட் தேர்விலிருந்து விலக்கு கோருவது என்பது பிச் சையோ, சலுகையோ அல்ல.


மாறாக, அரசியல் சட்டம் மாநிலங்களுக்கு அளித்திருக்கிற மகத்தான உரிமை. அந்த உரிமையை மாநில அரசு வலியுறுத்திப் பெறவேண்டும்.


அடுத்ததாக துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கப் போகிறார்கள் தமிழக உறுப்பினர்கள் - குறைந்தபட்சம் அந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு நிபந்தனை வைக்கலாமே!


இவ்வளவு நாள் இதுவரையில் இல்லாது மத்திய இணையமைச்சர் மதிப்பிற்குரிய பொன்.ராதா கிருஷ்ணன் அவர்கள், இப்பொழுதுதான்  நாங்கள் கல்வி அமைச்சரிடம் நீட் தேர்வுபற்றி பேசவிருக் கிறோம் என்று சொல்லியிருக்கிறார். அவர்கள் இது வரையில் இப்படி சொன்னதில்லை.


இதன்மூலமாக தமிழ்நாட்டில் சுவரெழுத்து என்னவென்று ஓரளவிற்கு பி.ஜே.பி. புரிந்துகொண்டு வருகிறது என்று நாம் நினைக்கிறோம். அந்த வகை யில், நிச்சயமாக நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கவேண்டும்.


ஏற்கெனவே நீட் தேர்வு பற்றி நாடாளுமன்ற நிலைக்குழு அளித்த பரிந்துரைகளில்,  எந்த மாநிலம் தங்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் - நாங்கள் நீட் தேர்வு எழுத விரும்பவில்லை என்று கோருகிறதோ, அந்த மாநிலத்திற்கு முழு உரிமை உண்டு என்று அந்தப் பரிந்துரையில் சொல்லியிருக்கிறார்கள்.


எனவே, நாடாளுமன்றத்தில் கொடுக்கப்பட்ட உறுதிமொழி என்பதும்
நிறைவேற்றப்படவேண்டும். அரசியல் சட்ட கடமையையும் அவர்கள் செய்ய வேண்டும். எனவேதான், இதில் தமிழக அரசு, தமிழக அமைச்சர்கள் மத்திய அரசுக்கு வலியுறுத்தவேண்டும்.
இல்லையானால், பெருந்திரள் போராட்டம் - மக்கள் சமுத்திரம் பொங்கி எழும்.


தி.மு.க.வோடு...


செய்தியாளர்: நீட் தேர்வு தொடர்பாக தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் அவர்கள் உங்களை சந்தித்துப் பேசியிருக்கிறார். அது தொடர்பாக நாளைக்கு தி.மு.க. மாவட்டச் செயலாளர்களைக் கூட்டியுள்ளார். திராவிடர் கழகத்தோடு இணைந்து எந்த மாதிரியான போராட்டத்தை தி.மு.க. முன் னெடுத்துச் செல்ல உள்ளார்கள்?


தமிழர் தலைவர்: நாளைக்கு அதைத்தான் முடிவு செய்ய உள்ளார்கள். நாங்கள் அதனை யூகத்தினால் சொல்ல முடியாது. நாளைக்கு அவர்கள் முன்னெடுத்து செல்வார்கள். நீட் தேர்வு நடந்து விட்டது - முடிந்து விட்டது என்று யாரும் நினைக்கவேண்டாம்.


நீட் தேர்வு ஒழிக்கப்படுகிற வரையில், தமிழ் நாட்டிற்கு விலக்கு அளிக்கப்படுகின்ற வரையில் போராட்டம் தொடரும் - தமிழகத்தில் 22 அரசு மருத் துவக் கல்லூரிகள் இருக்கின்றன. கரையான் புற் றெடுக்க கருநாகம் குடிபுகுந்தது போல, பிற மாநிலங் களில் தமிழகத்தில் உள்ளது போன்ற கல்லூரிகள் கிடையாது. ஆகவே, இங்கே உள்ள கல்லூரிகளில் எளிதாக நுழைந்துவிடலாம் என்று நினைப்பதற்கு இடமே கிடையாது. ஆகவே, அதற்குரிய திட்டங்களை தி.மு.க. வகுக்கின்றபொழுது, திராவிடர் கழகம், ஒத்தக் கருத்துள்ள அத்துணைப் பேரும் அவர்களோடு இணைந்து போராடுவோம்.


- இவ்வாறு செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.


Friday, July 14, 2017

சில்லரை சில்லரையாக பாவம் போக்குவது மற்ற மதங்களில்- ஒட்டுமொத்தமாகப் பாவம் போக்குவது ஹிந்து மதத்தில்தான்!


மதுரை முருகேசன் இல்லத் திறப்பு விழாவில் தமிழர் தலைவர்


மதுரை, ஜூலை 14-   மற்ற மதங்களில் எல்லாம் சில்லரை சில்லரையாக பாவங்களைப் போக்கலாம்; ஆனால், அர்த்தமுள்ள ஹிந்து மதத்திலோ ஒட்டுமொத்தமாக ஒரே தடவையில் பாவங்களைப் போக்கிக் கொள்ளலாம் என்றால், மதங்களால் ஒழுக்கம் வளருமா என்று சிந்திக்கவேண்டும்  என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். 
 மதுரையில் 9.7.2017 அன்று மாலை 6.30 மணிக்கு மதுரை மாவட்ட இணைச் செயலாளர் தொப்பி நா.முரு கேசன் - சு.இளமதி, மு.கவின்மதி ஆகியோரின் ‘பெரியார்’ இல்லத்தினை தமிழர் தலைவர் ஆசிரியர் திறந்து வைத்தார். இல்லத் திறப்பு கல்வெட்டினையும் திறந்து வைத்தார்.

வீடு கட்டும் பணியில் சிறப்பாகப் பணியாற்றிய ஒப்பந்தக்காரர், வடிவமைப்பாளர், பணியாளர்களுக்குத் தமிழர் தலைவர் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். புதிய இல்லம் கட்டிய இணையருக்கு இயக்க நூல்களைத் தமிழர் தலைவர் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

கவின்மதி வரவேற்புரையாற்றினார். தலைமைச் செயற் குழு உறுப்பினர்கள் தே.எடிசன்ராசா, சாமி.திராவிடமணி, வழக்குரைஞரணி செயலாளர் நீதியரசர் நடராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைப்புச் செயலாளர் வே.செல்வம்  தொகுப்புரை யாற்றினார்.

பங்கேற்றோர்

மதுரை மண்டலத் தலைவர் முருகானந்தம், மதுரை மண்டல செயலாளர் பவுன்ராசா, மாவட்டத் தலைவர்கள் முனியசாமி, எரிமலை, சிவகுருநாதன், மாவட்டச் செயலா ளர்கள் வேங்கை மாறன், மோதிலால், கணேசன், திண்டுக் கல் மண்டலத் தலைவர் வீரபாண்டி, மாநில ப.க. தலைவர் வா.நேரு. மோகனா அம்மையார், என்னாரெசு பிராட்லா, பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், பேராசிரியர் நம்.சீனிவாசன் மற்றும் மதுரை மாவட்டத் தோழர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

தமிழர் தலைவர் உரை
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

அவரது வாழ்த்துரை வருமாறு:

பெரியார் இல்லம் திறப்பு

மிகுந்த மகிழ்ச்சியோடு, மனநிறைவோடு, நெகிழ்ச்சி யோடு நடைபெறக்கூடிய அன்புச் செல்வர்கள் முருகேசன், இளமதி, கவின்மதி ஆகியோரின் இல்லமான ‘பெரியார்’ இல்லத் திறப்பு விழாவிற்கு வருகை புரிந்த உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நம்முடைய அருமைப் பேத்தி கவின்மதி அவர்கள் பேசிய உரையில் மிகத் தெளிவாக ஒரு கருத்தை சொன்னார். பெரியார் கொள்கையைப் பின்பற்றுகின்ற ஒரு குடும்பம். நல்லதோர் குடும்பம். நல்ல குடும்பம் - புரட்சிக்கவிஞர் அவர்கள் சொல்லியதைப்போல, ஒரு பல்கலைக் கழகம்.

இந்தக் குடும்பம் ஒரு சுயமரியாதைப் பல்கலைக் கழகம் என்று சொன்னால், அது மிகையாகாது. அதற்கு ஆதார மாகத்தான் தோழர் செல்வம் அவர்கள் வெள்ளை அடித்தப் பிரச்சினையில் மிகத் தெளிவாக ஒன்றைச் சுட்டிக்காட்டினார்.

பல பேர் தங்களுடைய தவறுகளை மறைப்பதற்கு வெள்ளையடித்துக் கொண்டிருப்பார்கள் - மற்ற வாழ்க்கை முறையில் இருப்பவர்கள். எங்கள் தோழர்கள் வெள்ளை யடிக்கும்போதுகூட தவறு நடக்கக்கூடாது என்று கவன மாக இருப்பவர்கள் என்பதை அந்த நிகழ்வின்மூலமாக அவர்கள் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

தொப்பி முருகேசன் வந்துவிட்டாரா?

இந்நிகழ்வைப் பொறுத்தவரையில், இது நம் குடும்ப நிகழ்வு. அவர் சொல்லியதைப்போல, இவருடைய மண விழாவினை - முருகேசனை நான் எப்பொழுதும்  முழுப் பெயரை சொல்லி அழைப்பதில்லை. அவருடைய அடை யாளத்தை மட்டுமே சொல்லி செல்லமாக அழைப்பேன். அது உங்களுக்கு நன்றாக தெரியும். அடையாளம் என்று விரிவாக சொல்லவேண்டிய அவசியமில்லை. தொப்பி முருகேசன் வந்துவிட்டாரா என்று தான் கேட்பேன். அவ்வளவு அன்பொழுக இருக்கக்கூடிய ஒரு பாச மிகுந்த கொள்கைக் குடும்பம் இது.


பெரியார் கொள்கையைப்  பின்பற்றுகிறவர்கள்

திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில், தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கிய ஒரு அற்புதமான உறவு என்பது இருக்கிறது -அது ரத்த உறவுகளைவிட கடின மானது, இறுக்கமானது, அதுதான் மிக முக்கியம். கண் ணீரைவிட ரத்த உறவு இறுக்கமானது என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள்.

ஆனால், எங்களைப் பொறுத்தவரையில், ரத்த உறவை விட மிகவும் நெருக்கமான உறவு இருக்கிறது - அதுதான் கொள்கை உறவு. அதற்கு ஜாதியில்லை, கட்சியில்லை, மதமில்லை. அதுதான் சுயமரியாதை உணர்வு.

நாங்கள் எத்தனையோ ஆண்டுகளாகப் பழகியவர்கள். ஒரு குடும்பமாக இங்கே இருக்கிறோம். ஆனால், யாருக்கும் யார் என்ன ஜாதி என்று தெரியாது. தெரியவேண்டிய அவசியமும் கிடையாது. அப்படி ஒரு நல்ல உறவு.

பெரியார் கொள்கையைப் பின்பற்றுகிறவர்கள் - அவர் தெளிவாக குழந்தையின் மூலமாக சொன்னதைப்போல, நாணயம், நேர்மை, ஒழுக்கம், அடுத்தவர்களுக்குத் தொல்லை கொடுக்காதது, பிறரை ஏமாற்றாதது என்பதுதான் மிக முக்கியம்.


மூத்திரக் குளத்தில்  மூழ்கி எழுந்தால் பாவம் போகுமாம்!

காரணம் என்னவென்றால், அடிப்படை தத்துவ ரீதியாகவே, அவர்களை சங்கடப்படுத்துவதற்காக யாரும் நினைக்கக்கூடாது, உண்மையைச் சொல்கிறோம். அவர் களுக்கெல்லாம் ஒவ்வொரு வழி வைத்திருக்கிறார்கள். நீங்கள் பாவம் செய்திருந்தால், வியாழக்கிழமை அன்று சென்று வழிபட்டால், பாவம் போய்விடும். இன்னொருவர் வெள்ளிக்கிழமை அன்று சென்றால், பாவம் போய்விடும். இன்னொரு மதத்தில் ஞாயிற்றுக்கிழமை போனால், பாவம் போய்விடும். பிறகு திங்கள் கிழமையிலிருந்து புதுக் கணக்கை ஆரம்பிக்கலாம். அர்த்தமுள்ள இந்து மதத்திற்கு ஒரு தனிச் சிறப்பு என்னவென்றால், இப்படி சில்லறை சில்லறையாக பாவத்தையெல்லாம் கழித்தால்கூட, மிச்ச மீதி பாவம் ஒட்டுமொத்தாக இருந்தாலும், 12 ஆண்டுகளாக சேர்த்து வைத்து - மகாமகக் குளத்தில் முக்கி எழுந்து விட்டால் போதும், பாவம் போய்விடுமாம். அது மூத்திர வாடை அடித்துக் கொண்டிருக்கும், அது வேறு விஷயம். ஆனாலும்கூட, அந்தக் குளத்தில் மூழ்கி எழுந்தால் போதும் என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். இதனால் ஒழுக்கம்  வளருமா?
நாத்திக நன்னெறியாளர்களைப் பொறுத்தவரையில்...

ஆனால், பெரியார் தொண்டர்கள், பகுத்தறிவாளர்கள், கடவுள் மறுப்பாளர்கள், நாத்திக நன்னெறியாளர்களைப் பொறுத்தவரையில் தவறு செய்யக்கூடாது. ஒழுக்கக் கேட்டிற்கு ஆளாகக்கூடாது. ஆனால், தண்டனையிலி ருந்து தப்பக் கூடாது, அதுதான் மிக முக்கியம். இதுதான் வள்ளுவருடைய நெறியும்கூட. அதுதான் திராவிட சமு தாயத்தின், தமிழர் சமுதாயத்தின் நெறி.

எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றென்ன செய்யாமை நன்று!
என்ற குறளுக்கு என்ன பொருள் என்றால்,
தவறு செய்யாதே! தவறு செய்தால், தண்டனையை அனுபவிப்பதற்குத் தயாராக இரு. அதிலிருந்து தப்பித்துக் கொள்ளவேண்டும் என்று குறுக்குவழிகளில் ஈடுபடாதே!
மதவாதிகள் என்ன சொல்கிறார்கள்?

ஆனால், மதவாதிகள் என்ன சொல்கிறார்கள் என்றால், நீங்கள் எந்தத் தவறு வேண்டுமானாலும் செய்துகொள்ள லாம். அதற்காக தலைமுடியை நீக்கிக் கொண்டால் போதும், உண்டியலில் காசு போட்டால் போதும், வேண்டுதலை நிறைவேற்றினால் போதும் - அதிலும் கெட்டிக்காரனாக இருப்பவன், வெல்லத்திலேயே பிள்ளையாரை செய்து வைத்து, அதிலேயே கொஞ்சம் கிள்ளி காணிக்கையாக வைத்து உள்ளே எடுத்துக்கொண்டு போய்விடுகிறான். இப்படிப்பட்ட சூழல்கள் இன்றைக்கு இருக்கின்றன.

தொப்பி முருகேசன் அவர்கள் எளிய ஒரு தொழில் செய்கிறார். அந்தத் தொழிலை நாணயமாக நடத்தி, அதில் வருவாய்க்கு உட்பட்ட செலவு - அதில் இப்படிப்பட்ட அற்புதமான ஒரு வீட்டைக் கட்டியிருக்கிறார்.

வீட்டைக் கட்டிப் பார் -  கல்யாணத்தை செய்து பார்

இங்கே பேசிய பேத்தி, தாத்தாதான் எங்களுடைய அப்பாவிற்கும், அம்மாவிற்கும் நடைபெற்ற திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி வைத்தார். தாத்தாதான் இந்த வீட்டையும் திறந்து வைக்கிறார் என்று சொல்லியது.

பெரியார் தாத்தா பெயரில்தான் வீடு இருக்கிறது - பெரிய தாத்தா பெயரில் என்பதுதான் மிக முக்கியம்.

இந்தக் குடும்பம் எவ்வளவு வளர்ந்திருக்கிறது என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.
நம்மூரில் ஒன்றைச் சொல்லி மிரட்டி வைத்திருக்கிறார்கள் - வீட்டைக் கட்டிப் பார் - கல்யாணத்தை செய்து பார் என்று.

இந்த இரண்டையும் சுலபமாகச் செய்யக்கூடியவர்கள் திராவிடர் கழகத்துக்காரர்கள் என்பதை இந்தப் பெரியார் இல்லத் திறப்பு நிகழ்ச்சி தெளிவாக உணர்த்தும்.

இந்த வீட்டை நன்றாக சுற்றிப் பார்த்தாலும், பூசணிக்காய் எங்கேயும் இருக்காது. ஆனால், நம் நாட்டில் பூசணிக்காயை உபயோகிக்காமல் இருக்கமாட்டார்கள். கிரகப் பிரவேசம் என்பார்கள் - இது தமிழ்ச்சொல் அல்ல.

பெரியார் இல்லத் திறப்பு விழா என்று அழைப்பிதழில் போட்டிருக்கிறார்கள் - தனித்தமிழில்.
பஞ்சகவ்யம் என்பது என்ன?

நுழையக்கூடாதது நுழைந்தது - நடக்கக்கூடாதது நடந்தது.

முருகேசன் அவர்களும், நம்முடைய இளமதி அவர் களும்  வைதீகக் கருத்துகளுக்கு ஆளாகியிருந்தால் என்ன செய்திருப்பார்கள்? வீடு திறப்பிற்கு என்னை அழைத் திருக்க மாட்டார்கள். மாட்டை அழைத்து வந்து, ரிவர்ஸ் கியரில் விடுவார்கள். அதற்குப் பின்னால் ஒரு சொம்பை வைத்துக்கொண்டு, அதனுடைய மூத்திரத்தைப் பிடிப் பார்கள். பிறகு அய்யர் வந்தவுடன், எந்த அய்யர்மீதும் நமக்குத் தனிப்பட்ட முறையில் கோபம் கிடையாது.
அவர் வந்தவுடன் என்ன செய்வார் என்றால், அதில் பால், தயிர், மோர் அத்தனையும் போட்டு அதனை பஞ்சகவ்யம் என்று சொல்வார். பஞ்சகவ்யம் என்பது என்ன செவ்வாய்க் கோளில் இருந்து கொண்டு வந்த ஸ்பெஷல் மிக்சரா அது.

மூத்திரத்தைக் குடிக்கிறாயா? என்றால்...

பஞ்சகவ்யத்தை அவர் கொடுத்தால், இவர் குடித்து, இவர் குடும்பத்தினரையும் குடிக்க வைத்து, இது போதா தென்று, தலையில் ஒன்றும் இல்லை என்று காட்டுவதற்காக தலையிலும் தடவிக்கொண்டு, கொடுத்தவரிடம் என்ன சொல்வார்கள் என்றால், ‘‘நீங்கள் அடுத்த முறையும் வந்து இதுபோன்று கொடுக்கவேண்டும் என்று சொல்லி, 50 ரூபாயை வைத்துக்கொள்ளுங்கள், 100 ரூபாயை வைத்துக்கொள்ளுங்கள்’’ என்பார்கள்.

பகுத்தறிவிற்கும், பகுத்தறிவு இல்லாதவர்களுக்கும் இதுதான் வித்தியாசம்.
அண்மையில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சி முகாமில்கூட சொன்னேன், சாதாரணமாக ஒருவரிடம் மூத்திரத்தைக் குடிக்கிறாயா? என்றால், என்னை என்ன அவ்வளவு கேவலமானவன் என்று நினைத்துவிட்டாயா என்று கன்னத்தில் ஓங்கி அறைவான்.

ஆனால், பஞ்சகவ்யம் குடிக்கிறாயா என்றால், கொடுங் கள், கொடுங்கள் என்று வாங்கிக் குடித்துவிட்டு, கொடுத்த வருக்கு பணம் கொடுக்கிறான்.

ஆக, அந்த அடிப்படை எவ்வளவு நாசமாகப் போய் விட்டது பாருங்கள். பகுத்தறிவு சிந்தனை வந்ததினால், இன்றைக்கு இவருடைய வாழ்க்கை எவ்வளவு சிறப்பாக இருக்கிறது.
பகுத்தறிவு என்பது வெறும் வறட்டுத் தத்துவமல்ல. அது வாழ்வியல். அந்த வாழ்வியலினால் இவருக்கு என்ன தேவையோ, அந்த அளவிற்கு வீடு கட்டியிருக்கிறார். அவர்களுடைய தேவைக்கேற்ப.

வாஸ்து என்பது தமிழ்ச்சொல்லா?

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், இப்பொழுது திடீரென்று முளைத்திருக்கிறது. 50 ஆண்டு களுக்கு முன்பு இது கிடையாது. அது என்னவென்றால், வாஸ்து சாஸ்திர முறைப்படி கட்டவேண்டும் என்று சொல்கிறார்கள். வாஸ்து என்பது தமிழ்ச்சொல்லா? என் பதை நினைத்துப் பாருங்கள்.

தேர்தலில் நின்று பல லட்ச ரூபாய் செலவு செய்துவிட்டு, தோல்வியுற்ற ஒருவர் மனம் நொந்து போய் உட்கார்ந் திருக்கிறார்.

அவரைப் பார்த்து ஒருவர் சொல்கிறார், ‘‘நீங்கள் ஏன் தோற்றுப் போனீர்கள் என்பதற்கு இப்பொழுதுதான் சரி யான காரணத்தைக் கண்டுபிடித்தேன்’’ என்கிறார்.

தோற்றுப் போனவர் ஆர்வமுடன், ‘‘என்னங்க, அதைச் சொல்லுங்கள்’’ என்று கேட்கிறார்.
‘‘வேறு ஒன்றும் இல்லீங்க, இந்த வாசற்படியை இடித்து விட்டு, அந்தப் பக்கமாக வாசற்படியை வைக்கவேண்டும்’’ என்கிறார்.

வாசல்படிக்கு என்னமோ வாக்குரிமை இருப்பது போன்றும், அது இவருக்கு வாக்களிக்காமல் போனது போலவும் இருக்கிறதே, இது எவ்வளவு பெரிய மூடத்தனம் என்பதை நினைத்துப் பாருங்கள்.

வாஸ்து சாஸ்திரத்தில் வீட்டிற்குள் கழிப்பறைக்கு இடமில்லை!

இப்பொழுது வீடு கட்டி முடித்தவர்கள் வீட்டை சுற்றிக் காட்டும்பொழுது, இதுதான் மாஸ்டர் பெட்ரூம், இது வரவேற்புரை, இது சமையலறை என்று சொல்வார்கள் மாஸ்டர் பெட்ரூமில் கழிவறை, குளியலறை இருக்கிறது - குளித்து மற்ற காரியங்களைச் செய்துவிட்டு வரலாம். இதுபோன்று ஒரு வீட்டில் இரண்டு, மூன்று அறைகள் இருக்கிறது என்றால், அது பெருமைதான். வாஸ்து சாஸ் திரத்தில் கழிப்பறைக்கே வீட்டிற்குள் இடம் கிடையாது.

தன்னம்பிக்கையோடு  வளர்ந்த காரணத்தினால்....

ஆகவே, மூடநம்பிக்கைகளுக்கு இடமில்லாமல், தன்னம்பிக்கையோடு அவர்கள் வாழ்ந்த காரணத்தினால், இன்றைக்கு முருகேசன் - இளமதி அவர்களுடைய இல்லம் இருக்கிறதே அது மிகப்பெரிய அளவிற்கு வளர்ந்து, ஒரு சிறப்பான, தேவையான இல்லமாக இன்றைக்கு அமைந்திருக்கிறது.

அப்படிப்பட்ட அவர்களுடைய வாழ்க்கை சிக்கனம் மிக முக்கியம். தந்தை பெரியார் அவர்கள் சிக்கனமாக வாழுங்கள் என்று சொன்னார்.

பல பேருக்கு சிக்கனத்திற்கும், கருமித்தனத்திற்கும் வித்தியாசம் தெரியாது. சிக்கனத்திற்கும், ஆடம்பரத்திற்கும் வித்தியாசம் தெரியாது.

ஆடம்பரம் என்பது தேவைக்குமேல் செலவழிப்பது - தேவையற்ற செலவு. 
சிக்கனம் என்பது - தேவைக்கு செலவழிப்பது.

கருமித்தனம் என்பது தேவைக்கே செலவழிக்காமல் இருப்பது.
சிக்கனம் வேறு; கருமித்தனம் வேறு

ஆகவே, கருமிகளாக இருக்கவேண்டிய அவசிய மில்லை. சிக்கனம் வேறு; கருமித்தனம் வேறு. அந்த வகையில், முருகேசன் அவர்கள் சிக்கனவாதி. இயக்கத் திற்காக தன்னுடைய குறிப்பிட்ட நேரத்தை அவர் செல விடுபவர். எங்களை சந்திக்கும்பொழுதுகூட, தன்னுடைய தொழிலை நடத்திவிட்டுத்தான் வந்து சந்திப்பார்.

அப்படிப்பட்ட அற்புதமான ஒரு தோழர் முருகேசன் அவர்கள். எங்களுடைய இயக்கத் தோழர், எங்களுடைய குடும்பத் தோழர். எங்களுக்குக் கொள்கை உறவுதான் மிக முக்கியம்.

சிக்கனமாகவும், சிறப்பாகவும் வாழலாம்

ஆகவே, அவர்கள் எல்லா துறைகளிலும் இதுபோல் அவர் வளரவேண்டும். இந்நிகழ்ச்சியை கூட எதற்காக வைத்திருக்கிறார்கள் என்றால், ஒரு பிரச்சாரத்திற்காகத்தான். நாங்கள் இந்தக் கொள்கையைப் பின்பற்றியதினால், தாழ்ந்துவிடவில்லை, வீழ்ந்துவிடவில்லை. நாங்கள் வளர்ந் திருக்கிறோம். நீங்களும் இந்தக் கொள்கையைப் பின் பற்றினால், சிக்கனமாகவும், சிறப்பாகவும் வாழலாம் என்று காட்டியிருக்கிறார்கள்.

எனவே, அவர்கள் சிறப்பாக வாழவேண்டும். அது போலவே, அந்தப் பெண் குழந்தை - பேத்தி சிறப்பாக பேசினார். அவர்களையும், கவின்மதி அவர்களையும் பாராட்டி, காலத்தின் நெருக்கடியினால் உங்களுக்கு அனைவருக்கும் நன்றி தெரிவித்து, விடைபெறுகிறேன்.
வணக்கம், நன்றி!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

ஜனநாயக உரிமைகளைக் காப்பாற்றுவதற்காக போராடவேண்டிய கட்டத்தில் நாம் இருக்கிறோம்!

தமிழ்நாடு காங்.தலைவர் சு.திருநாவுக்கரசர் பொதுவாழ்வுப் பொன்விழாவில் தமிழர் தலைவர் உரை

சென்னை, ஜூலை 14  சமூகநீதி, மதச்சார்பின்மை, மாநில சுயாட்சி உரிமை என்கிற ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவேண்டிய காலகட்டத்தில், அவசியத்தில் நாம் இருக்கிறோம்; ஒன்று சேர்ந்து போராடுவோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
சென்னை காமராசர் அரங்கத்தில் நேற்று (13.7.2017) நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரசு கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசரின் பொதுவாழ்வுப் பொன்விழாவில் பங்கேற்று சு.திருநாவுக்கரசர்பற்றிய நூலினை வெளி யிட்டு திராவிடர்  கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:  

சிறப்பாக நடைபெறக்கூடிய அருமை நண்பர் அரசியலிலே பொன் விழா காணுகின்றவர்.
மிக அற்புதமான நட்புக்குரிய நண்பர் என்று அனைவராலும் மதிக்கப்படக் கூடிய தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியின் தலைவர் அருமை நண்பர் திருநாவுக்கரசர் அவர்களுடைய பிறந்தநாள் பெருவிழா, பொதுவாழ்வில் பொன்விழா ஆகிய அற்புதமான நிகழ்ச்சிக்கு தலைமையேற்றிருக்கக்கூடிய பாட்டாளிகளின் தோழரும், எளிமையின் இலக்கணமும், தமிழகத்தினுடைய மூத்த தலைவராக கலைஞர் அவர்களுக்கு அடுத்தபடியாக திகழ்ந்து கொண்டிருக்கக்கூடியவருமான அன்பிற்குரிய தோழர் நல்லக்கண்ணு அவர்களே, தமிழகத்தினுடைய நம்பிக்கையாக, தமிழ்நாட்டினுடைய தற்போதைய நிலைகளுக்கெல்லாம் ஒரு விடியலாக வந்திருக்கக்கூடிய தமிழகத்தின் ஒப்பற்ற எதிர்க்கட்சித் தலைவர், திமுக செயல் தலைவர் அருமைச்சகோதரர் மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களே, இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து மலரை வெளியிட்டிருக்கக்கூடிய அன்பிற்குரிய புதுவை மாநில ஜனநாயகப்போராளி, முதல்வர் என்பது இரண்டாவது, ஜனநாயகப்போராளி என்ற பெருமையை இன்றைக்கும் பெற்றிருக்கக்கூடிய மாண்புமிகு வி.நாராயணசாமி அவர்களே, அனைத்து இயக்கங்களைச்சார்ந்த, கட்சி களின் தலைவர்களே, சான்றோர்களே, காங்கிரசு பேரியக்கத்தின் அனைத்து முக்கியப் பொறுப்பாளர்களே, தாய்மார்களே, நண்பர்களே, தோழர்களே உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.

இங்கே வரவேற்புரையாற்றிய அருமை நண்பர் விசுவநாதன் சுட்டிக்காட்டினார். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் எப்படி ஒரு வாக்கியத்தை தோழர் திருநாவுக்கரசருக்கு சொன்னார்கள் என்பதை சிறப்பாக எடுத்து சுட்டிக்காட்டினார்.

‘‘ஜனக்கட்டு’’ உடையவர்
என்றைக்கும் மக்களோடு இருக்கக்கூடிய ஒரு மக்கள் தொண்டனாக, தோழனாக பணியாற்றக்கூடியவராக, தலைவராக திகழக்கூடிய ஒருவர் என்ற பெருமை இருக்கிறதே, இதுதான் எளிதில் எவரும் சம்பாதிக்க முடியாத ஒன்றாகும். அதிலே அவர் தனித்தன்மையோடு இருக்கக்கூடியவர்.

அறந்தாங்கியானாலும், புதுக்கோட்டை மாவட்ட மானாலும், அங்கே கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பொதுவாழ்க்கையிலே நேசிக்கப்படக்கூடிய தோழர் அருமை திருநாவுக்கரசர் ஆவார். அங்கே எந்தக் கட்சிக்காரராக இருந்தாலும், எந்த இயக்கத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், அவர்களின் இல்லங்களில் நல்ல நிகழ்ச்சியாக இருந்தாலும், துயர நிகழ்ச்சியாக இருந்தாலும் அது எத்துணை மாதங்களானாலும் அவர்கள் வீட்டுக்குச் சென்று தொடர்பு வைத்துக்கொண்டிருக்கிற ஓர் எடுத்துக்காட்டான தலைவர் என்று சொன்னால், அவர் தோழர் திருநாவுக்கரசர் ஆவார்.

மாணவர் பருவத்திலேயே  திராவிடர் இயக்கம்

அவர் மாணவப் பருவத்திலேயே திராவிட இயக்கத்திலேயே இருந்து வளர்க்கப்பட்டவர். காங்கிரசு பேரியக்கத்தில் நமக்கு ஒன்றும் பெரியஅளவில் கருத்துப்போர் கிடையாது. ஆனால், அவரை திராவிட இயக்கம்தான் வளர்த்து காங்கிரசு இயக்கத்துக்கு தந்திருக்கிறது. விவசாயத்திலே ஒரு புதுமையான கண்டுபிடிப்பு உண்டு. விதைகளாக வைத்து, செடிகளாக வைத்து நடுவது என்பது ஒரு முறை, மரங்களையே அப்படியே பெயர்த்து எடுத்து வைப்பது இன்னொரு முறை. திருநாவுக்கரசர் இரண்டாவது முறையைச் சார்ந்தவர். திராவிட இயக்க மண்ணிலிருந்து, திராவிட இயக்கத்தாலே வளர்ந்த காரணத்தாலேதான் அவர்களுக்கு மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று சொன்ன அண்ணாவினுடைய குணம் உண்டு. எனவேதான், அவர் திராவிட இயக்கத்துக்கும், தேசிய இயக்கத்துக்கும் முரண்பாடல்ல,  உறவுப்பாலம் உண்டு. 

அதுவும் இந்த காலகட்டத்திலே, இன்றைக்கு தோன்றியிருக்கிற சங்கடமான மிகப்பெரிய அளவில், மதசார்பின்மைக்கு அறைகூவல், சமூக நீதிக்கு அறைகூவல், மாநிலங்களின் உரிமைகளுக்கு அறைகூவல், ஆளுநர்களே உரிமைகளைப் பறிக்கக் கூடிய அளவிற்கு அறைகூவல். அதற்கு புதுவையைவிட நல்ல உதாரணம் வேறு கிடையாது. நாம் அதைப்பற்றி பேசவேண்டிய அவசியத்தில் - தமிழ்நாட்டில் ஆளுநரே இல்லை. பல காலம் ஆளுநரால் பிரச்சினை இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு ஆளுநரே பொறுப்பு ஆளுநர். பொறுப்பில்லாத பல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கெல்லாம் அவரைத் தேடிக்கொண்டு போவார்கள்.

எதிர்க்கட்சித் தலைவர், துணைத் தலைவர் சந்திக்க வேண்டும் என்றால்கூட, மும்பைக்குப்போய்த்தான் சந்திக்கிறார்கள். எனவே, அதைக் கேட்பதற்குக்கூட உரிமை இல்லை.
போர்த் தளபதிகள் கூடியிருக்கின்றனர்

இந்தக் காலக்கட்டத்திலேதான் இந்த மேடையிலே இருக்கிற அனைவரும் திருநாவுக்கரசரை பாராட்டுவதற்காக, அவரது பொன்விழாவைக் கொண்டாடுவதற்காக, அல்லது நாமெல்லாம் ஒன்றாக இருக்கிறோம் என்று காட்டுவதற்காக என்பதல்ல, ஜனநாயக உரிமைக்கு ஏற்பட்டிருக்கிற ஆபத்தை எதிர்த்துப் போரிடுகின்ற போர் வீரர்கள். போர்த் தளபதிகள். இதிலே எல்லோரும் சேர்ந்திருக்கிறார்கள்.  இதிலே கட்சியில்லை, கருத்து மாறுபாடுகள் இல்லை. இதைக்காட்டுக¤ன்ற விழாவாக இந்த விழா இருக்கிறது.

எனவேதான், நல்ல தளபதிகள் இங்கே அமர்ந்தி ருக்கிறார்கள். நடக்கக்கூடிய போரில் வெல்வோம், வெல்வோம். இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.
விழாவில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், புதுவை முதல்வர் வி.நாராயணசாமி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜி.இராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, காங்கிரசு கட்சி முதுபெரும் தலைவர் குமரிஅனந்தன், திராவிடர்கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்,  ஆதித்தமிழர் கட்சித் தலைவர் ஜக்கய்யன் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டார்கள்.

செம்மொழி தமிழாய்வு மய்ய முத்திரை தமிழ் எழுத்துக்களில் இருக்க வேண்டும்

சென்னை, ஜூலை 14 செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனத்தில் அலுவலக முத்திரையில் இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே உள் ளது. தமிழ்  புறக்கணிக்கப் பட்டுள்ளதாக சட்டப்பேர வையில் எதிர்க் கட்சி தலை வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

சட்டப் பேரவையில் நேற்று (13.7.2017) கேள்வி நேரம் முடிந்ததும், நேரம் இல்லா நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சென்னையில் உள்ள செம் மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத் தினுடைய அலுவலக முத்திரை, இந்தி மற்றும் ஆங்கில எழுத்துக்களில் மட்டுமே  இருக்கிறதென்று இன்று (நேற்று) காலையில் எல்லா பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் செய்தியாக வந்திருக்கிறது. செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திலேயே தமிழுக்கு முக்கியத்துவம் இல்லை என்பது அதிர்ச்சியளிக்கக்கூடிய செய்தியாக அமைந்திருக்கிறது.  தமிழ்நாட்டில் தமிழுக்கு இப் படியொரு நிலை வந்திருப்பது வேதனையான நிலை. செம் மொழி தமிழாய்வு மத்திய நிறு வனத்தின் தலைவர் நம்முடைய முதலமைச்சர்தான். 

எனவே, நான் அவரை கேட்டுக்கொள்ள விரும்புவது, அலுவலக  முத்திரை இந்தி யில் இருப்பது முதலமைச்சருக்கு தெரியுமா, செம்மொழி ஆய்வு நிறுவனத்தில் தமிழ் புறக்கணிக்கப்பட்டு இருப்பதை முதலமைச்சர்  அறிவாரா, தமிழ் முத்திரை இடம்பெறுவதற்கு முதல மைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பாரா?

இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்: செம்மொழி தமி ழாய்வு மத்திய நிறுவனம் முழுமையும் மத்திய அரசின் ஆளுகைக்கு  உட்பட்டது. செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவ னத்தின் கல்விக்குழு, நிதிக்குழு, ஆளு கைக் குழுவில் தமிழ்நாடு அரசின் சார்பில் பங்கேற்கும் உலக  தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்குநர் ஆகியோர் மூலம் செம்மொழி மத்திய நிறுவனத்தின் நிர்வாக அலுவல்கள் தமிழகத்தை  பொறுத்தவரையில் தமிழில் மட்டுமே அமைதல் வேண்டும் என்று அவ்வப்போது வலியுறுத்தப்பட்டு வரு கிறது. இதுகுறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டுச்சென்று தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங் கோட்டையன்: செம்மொழி தமிழ் ஆய்வு மத்திய நிறுவனத்தின் அலுவலக முத்திரையில் இந்தி மற்றும் ஆங்கில  மொழி மட்டும் இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தரமணியில் உள்ள செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவன  அதிகாரியிடம் நான் தொலைபேசியில் பேசினேன். தமிழில் உள்ள அலுவலக முத்திரையை அவர் எனக்கு அனுப்பி வைப்பதாக கூறியுள்ளார். இவ் வாறு விவாதம் நடைபெற்றது.

'நவீன மகாபாரதம்!'

மத்தியப் பிரதேச மாநிலத்தில் சூதாட்டத்தில் பணம் சொத்து அத்தனையும் இழந்ததால், இறுதி யாக தனது மனைவியை சூதாட்டத்தில் வைத்து விளையாடிய கேவலம் நடந்துள்ளது. அதிலும் அவர் தோல்வியடைந்தார். இந்த நிலையில் சூதாட்டத்தில் வென்றவர்கள் அவரது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்தனர். இது தொடர்பாக கணவர் உள்ளிட்ட ஏழு பேரை இந்தூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  

ஜான்சாசவும் பகுதியைச் சேர்ந்த 38 வயது பெண் ஒருவர் புகார் அளித்தார். அப்புகாரில் அவர் கூறியதாவது, "எனக்கும், கிஷோர் சர்மா என்பவருக்கும் 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது, இத்திருமணத்தில் எனது பெற்றோர்கள் பெரும் பொருட்செலவு செய்தனர். எங்களுக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளன. இந்த நிலையில் எனது கணவர் குடிப்பழக்கம் மற்றும் சூதாட்டத்தில் அடிமையாகிவிட்டார்.  

நீண்ட நாள்களாக சூதாடி எனது பெற்றோர் கொடுத்த பொருள்  மற்றும் எங்களுக்குச் சொந்த மான வீடு, நிலம் உள்ளிட்ட அனைத்தையுமே சூதாடி இழந்துவிட்டார். இந்த நிலையில் சில நாள்களுக்கு முன்பு கன்ஷியாம் சவுக்கிதார் மற்றும் நவுசத்ராம் இருவருடன் தவுலத்பூர் என்ற ஊரில் சூதாடியுள்ளார். இந்த சூதாட்டத்தில் என்னைப் பணயமாக வைத்து சூதாடியுள்ளார். 
  
சில நாள்களுக்கு முன்பு மூன்று பேர் எனது வீட்டிற்கு வந்து "உனது கணவர் எங்களிடம்  தோற்றுவிட்டார். அவர் தோற்றப் பணத்தை கொடு" என்று என்னை வற்புறுத்தினர். நான் மறுத்த போது உன்னையும் சேர்த்து பணயம் வைத்துதான் விளையாடி தோற்றுவிட்டார், என்று கூறி என்னை பாலியல் வன்கொடுமை செய்தனர். அதன் பிறகு அவர்கள் 'நடந்ததை வெளியே சொன்னால் குழந்தைகளைக் கொலைசெய்துவிடுவோம்' என்று மிரட்டிவிட்டுச்சென்றுவிட்டனர்.  

இவர்களுக்குப் பயந்து நான் எனது குழந்தை களை அழைத்துக் கொண்டு எனது தாய்வீடு சென்றுவிட்டேன். கடந்த சனிக்கிழமை அன்று மீண்டும் என் வீட்டிற்கு வந்த அவர்கள் "உனது கணவர் மூத்த பெண்ணையும் பணயமாக வைத்து தோற்றுவிட்டார், ஆகவே உனது மூத்த பெண்ணை எங்களுடன் அனுப்பிவிடு" என்று மிரட்டினர். நான் அவர்களை விரட்டிவிட்டேன், ஆனால் அவர்கள் மீண்டும் என் வீட்டிற்கு வந்து மூத்த பெண்ணை அவர்களுடன் அனுப்புமாறு தொடர்ந்து மிரட்டுகின்றனர்" என்று தனது புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.  

இவரது புகாரை காவல்துறையினர் ஏற்க மறுத்து விட்டனர். இதனை அடுத்து அவர் மாவட்ட காவல்துறை ஆணையரிடம் (இந்தூர் கிழக்கு)  புகார் தெரிவித்தார். இதனை அடுத்து காவல்துறை ஆணையர் இப்புகாரை விசாரிக்க ஆணையிட்டார்.   

விசாரணையில் இவரது கணவர் மற்றும் அவரது நண்பர்கள் சூதாடியதும், மனைவியைப் பணயம் வைத்து தோல்வியடைந்ததும் தெரியவந்தது, இதனைத் தொடந்து பெண்ணின் கணவர், அவரது நண்பர்கள் உட்பட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்து மதத்தின் இதிகாசங்கள் இராமாயணமும் மகாபாரதமும் தான்! இரண்டு  இதிகாசங்களுமே பெண்களை இழிவுபடுத்தக் கூடியவை தான்!

கர்ப்பிணிப் பெண் என்று தெரிந்திருந்தும் தனது மனைவியைக் காட்டுக்கு அனுப்பியவன் இராமன். காதலை வெளிப்படுத்திய பெண்ணின் மூக்கையும், முலையையும் சிதைத்தவன் இராமனின் உடன் பிறப்பு இலட்சுமணன்.

மகாபாரதமோ 'அய்வருக்கும் தேவி அழியாத பத்தினி' என்று புது இலக்கணம் வகுத்தது! மனை வியை வைத்து சூதாடியிருக்கிறார்கள் - அந்தக் கலாச்சாரத்தின் தொடர்ச்சிதான்  - தாக்கம்தான் பிஜேபி ஆளும் மத்தியப் பிரதேசத்தில் நடந்தி ருக்கிறது. இந்த இலட்சணத்தில் 1000 கோடி ரூபாய் செலவில் மகாபாரதத்தைத் திரைப்படமாக எடுக்கப் போகிறதாம் மத்திய பிஜேபி அரசு,  இதைவிட வெட்கக் கேடு வேறு உண்டா? தனது ஒவ்வொரு நடவடிக்கையிலும் 'இது இந்துமத அரசு' என்று முத்திரைப் பதிப்பதில்தான் பா.ஜ.க. முந்திரிக் கொட்டையாகத் துள்ளுகிறது. அரசமைப்புச் சட்டத் தில் வலியுறுத்தப்பட்டுள்ள மதச் சார்பின்மையைக் காலில் போட்டு மிதிக்கும் மத்திய அரசு சட்டப்படி தொடரத் தகுதி உடையது தானா?

குற்றாலத்தில் 40-ஆவது ஆண்டு தொடர்ச்சியான நிகழ்வு!

12 ஊர்களில் பெரியாரியப் பயிற்சிப் பட்டறை
ஒத்துழைப்புக் கொடுத்தவர்கள் அனைவருக்கும் பாராட்டு நன்றி!




பிப்ரவரி தொடங்கி ஜூலை வரை 12 ஊர்களில் சிறப்பாக நடைபெற்ற பெரியாரியப் பயிற்சிப் பட்டறையின் வெற்றிக்குப் பெரிதும் காரணமாக இருந்த அனைவருக்கும் பாராட்டும் நன்றியும் தெரிவித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கி, ஜூலை 9 வரையில், பல வார விடுமுறை நாட்களில், பெரிதும் சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில், தமிழ்நாடு முழுவதிலும் பல மாவட்டங்களில் நமது இளைஞர்கள், மாணவர்களுக்குப் "பெரியாரியப்" பயிற்சிப் பட்டறையை  நடத்துவது என்று தலைமைச் செயற்குழு முடிவின்படி -

நெய்வேலி, ஏலகிரி, சென்னை (பெரியார் திடல்), நெமிலி, லால்குடி, திண்டிவனம், திருத்துறைப்பூண்டி, மருங்குளம், சுருளி (தேனி மாவட்டம்), காரைக்குடி, குன்னூர், குற்றாலம் ஆகிய 12 ஊர்களில் நடத்தினோம். (நாமக்கல் மட்டும்தான் பாக்கி).

1200 இளைஞர்கள்

இதுவரை அருமையான இருபால் இளைஞர்கள், மாணவமணிகள் - பட்டதாரிகள், பட்டயதாரர்கள், பல வகை படிப்பாளிகள் உட்பட சுமார் 1200 பேர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்!

நம்பிக்கை 
நல்ல கொள்கையாளர்களாக அவர்களில் பலரும் 'செதுக்கப்பட்டு'ள்ளனர் என்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்று. (கட்டுப்பாடு காத்தவர்கள் அனைவரும்) ஒரு சிலர் தவிர மற்ற அனைவரும் இயக்கத்தில் ஈடுபாடு கொண்ட எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்கள் ஆவார்கள்.

40 ஆண்டு குற்றாலப் பயிற்சிப் பட்டறையும் பாடுபட்டவர்களும்
குற்றாலத்தில்  தொடர்ந்து (இடையில் ஓரிரு ஆண்டுகள் தவிர) நடைபெற்று வந்து இப்பெரியாரியப் பயிற்சி பட்டறை 40ஆவது ஆண்டு ஆகும்!
இதனைத் துவக்கக் காரணமான  பெரியார் பெரும் தொண்டர்கள் தி.ஆர். தியாகஅரசன், சிவனணைந்த பெருமாள், கீழப்பாவூர் வழக்குரைஞர் பாண்டிவளவன், பேராசிரியர் அறிவரசன், டேவிட் செல்லதுரை, டாக்டர் கவுதமன், டாக்டர் பிறைநுதல் செல்வி, பொறியாளர் சி. மனோகரன், மதுரை பே. தேவசகாயம், கோவில்பட்டி செல்லதுரை, தூத்துக்குடி தோழர்கள் காளிமுத்து, பெரியாரடியான்,  பால். ராசேந்திரம், சாமி. திராவிடமணி, நெல்லை திருமலை, நெல்லை சங்கரலிங்கம் என்று எண்ணற்றோர் உண்டு. சிலர் விடுபட்டிருக்கவும் கூடும்! (மன்னிக்க).

வரலாறான பேராசிரியர்கள்

வகுப்பெடுத்து இன்று வரலாறாகியுள்ள நமது முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்கள் பெரும் புலவர் பேராசிரியர் ந. இராமநாதன், கு.வெ.கி. ஆசான், பெரியார் பேருரையாளர் இறையன், மு.நீ. சிவராசன், வழக்குரைஞர் கோ. சாமிதுரை போன்றோரை மறக்கவே முடியாது.

துவக்கத்திலிருந்து உதவிய திராவிட முன்னேற்றக் கழக குற்றாலம் பிரமுகர் பண்பாளர் திரு. இராஜராஜம் உட்பட பலரின் உதவியோடு தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது.

வள்ளல் வீகேயென் அவர்களை மறக்க முடியுமா?

வள்ளல் 'வீகேயென்' கண்ணப்பனாரின் அளப்பரிய கொடை - இடம், உணவு, உபசரிப்பு எல்லாம் வாழ்நாள் முழுதும் மறக்க இயலாத பேருதவிகள்!
இவ்வாண்டு அவரை படமாகப் பார்த்த நிலையில் நம் கண்கள் குளமாகின! என்ன செய்வது இயற்கையின் இயல்பை ஏற்பதுதானே பகுத்தறிவாளர்

கடமை.

இவ்வாண்டு அவரது படத்திறப்பை - அவரது மூத்த மகன் கேப்டன் 'வீகேயென்' ராஜா அவர்கள் அனுப்பி வைத்த படத்தை - திறந்து வீர வணக்கம் 'வீகேயெனு'க்குத் தெரிவித்து நான் எனது நிகழ்ச்சியைத் துவக்கினேன்.
இவ்வாண்டு கேப்டன் 'வீகேயென்' இராஜா அவர்கள் தந்தையைப் போல தனது கடமையைச் செய்தார். அவருக்கு நமது இயக்கச் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அனைவருக்கும் நன்றி

மற்றும் நமக்கு எல்லா வகையிலும் இந்த பெரியாரியப் பயிற்சி (Training on Periyarism) வெற்றிகரமாகக் கடுமையாக உழைத்த நமது அமைப்புச் செயலாளர் மதுரை வே. செல்வம், பால். இராசேந்திரம், த. திருப்பதி மற்றும் தோழர்கள் அனைவருக்கும் நமது பாராட்டுகளையும், நன்றியும் தெரிவித்து மகிழ்கிறோம். (பட்டியல் 3ஆம் பக்கம் காண்க)

பயணங்கள் முடிவதில்லை!

சென்னை   தலைவர்
14-7-2017   திராவிடர் கழகம்

Thursday, July 13, 2017

கீழமை நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தேசிய தேர்வை எதிர்த்து சட்டமன்றத்தின் தீர்மானம்


சென்னை, ஜூலை 13 திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலை வரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க் கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (12.-07.-2017) தமிழக சட்டப்பேரவையில், மாவட்ட அளவிலான கீழமை நீதிமன் றங்களில் அகில இந்திய அளவிலான தேர்வுகள் நடத்தி நீதிபதிகளை நிய மனம் செய்யும் வகையிலான மத்திய அரசின் நடவடிக்கையால், மாநில உரிமைகள் அடுத்தடுத்து பறிபோவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும், உச்சநீதிமன்றத்தில் உடனடியாக அஃபிடவிட் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி, ஆற்றிய உரை விவரம்:

மாண்புமிகு சட்டப் பேரவைத் தலைவர் அவர்களே, மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு நீட் தேர்வு இருப்பது போல, மாவட்ட அளவிலும், அதற்குக் கீழ் இருக்கக்கூடிய நீதித்துறை நியமனங்களில், நீட் தேர்வைப் போலவே அகில இந்திய அளவிலான தேர்வு முறையைக் கொண்டு வருவதற்கு மத்திய அரசு எல்லா வகைகளிலும் முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறது. அரசமைப்புச் சட்டத்தின் ஆறாவது அத்தியாத்தில் உள்ள 233 முதல் 237 வரையிலான பிரிவுகள், மாவட்ட அள விலும் - அதற்குக் கீழுள்ள நீதிமன்றங் களிலும் நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரத்தை உச்ச நீதிமன்றத்துக்கும், அரசங்கத்துக்கும் வழங்குகின்றன. 

அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வுகளை நடத்தி, கீழமை நீதிமன்றங் களுக்கு இதுவரையிலும் நீதிபதிகள் தேர்வை செய்து வந்தன. ஆனால், மத்திய சட்டத் துறையில் நீதித்துறையை கவனித்து வரும் செயலாளர், உச்ச நீதி மன்றத்துக்கு எழுதி இருக்கும் கடிதத் தில், அகில இந்திய அளவில், மாவட்ட அளவிலான நீதிபதிகளையும் தேர்வு செய்யலாம், என்று பரிந்துரை செய்திருக் கிறார்.

கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிராக....
 இந்தப் பரிந்துரையின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வருவது குறிப்பிடத் தக்கது. மத்திய அரசின் இந்த முயற்சி கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிராக அமைந்திருக்கிறது. ஏற்கெனவே, பாஜக ஆண்டு கொண்டிருக்கும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில், அகில இந்திய அளவில் நீதிபதிகளைத் தேர்வு செய்யும் முயற்சிக்கு, உச்ச நீதிமன்றத்தில் அஃபிடவிட் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக செய்திகள் வந்திருக்கின்றன.

 ஆகவே, நீதித்துறை நிர்வாகத்தில் மாநில அரசுக்கு இருக்கக்கூடிய உரி மையை பறிக்கக்கூடிய வகையில், இந்தத் தேர்வுமுறையை மத்திய அரசு புகுத்த நினைப்பது, மாநில சுயாட்சிக் கொள்கைக்கு முற்றிலும் விரோதமாக அமைந்து விடும். எனவே, நான் இந்த அரசை கேட்க விரும்புவது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கும், சென்னை உயர் நீதிமன்றத்துக்கும் இருக் கும் நீதித்துறை நியமன அதிகாரங்களைப் பறிக்கும் விதத்தில் இது அமைந்திருக் கிறது என்பதால், கீழமை நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் அகில இந்திய தேர்வு தேவையில்லை என்றக் கருத்தை மத்திய அரசுக்கு, தமிழக அரசு அழுத்தத் தைத் தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அகில இந்திய தேர்வுகள்  தேவையில்லை

அதேநேரத்தில், மாநிலத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் நீதிபதிகளை தேர்வு செய்ய அகில இந்திய தேர்வுகள் தேவையில்லை என்பதை மூத்த வழக் குரைஞர்கள் மூலமாக மாநில அரசு முறைப்படி உச்ச நீதிமன்றத்தில் தெரி விக்க வேண்டும். நீட் தேர்வு நடத்தி மருத்துவக் கல்லூரியில் சேர்க்கக்கூடிய மாநில அரசின் உரிமை பறிபோகிறது. இப்போது கீழமை நீதிமன்றங்களுக்கும் அகில இந்திய தேர்வு கொண்டு வந்து மாநில உரிமைகள் பறிக்கப்படுகிறது. 

மாநில அரசு என ஒன்று இருப் பதையே மத்திய அரசு அங்கீகரிக்காமல், இதுபோன்ற அதிகாரப் பறிப்புகளில் முனைப்புக் காட்டுவது, கூட்டாட்சித் தத்துவத்துக்கு விரோதமாக அமைந்து விடும். எனவே, உச்ச நீதிமன்றத்தில் மற்ற ஏழு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து இருப்பதைப் போல, நம்முடைய தமிழக அரசும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உடனடியாக அஃபிடவிட் தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டு, அதேநேரத்தில், இதுபற்றி சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று நான் தங்கள் மூலமாக, இந்த அரசையும்  முதல்வரையும் கேட்டு அமைகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அமித்ஷா வருவார் முன்னே கலவரம் வரும் பின்னே!


கோவாவில் மத வழிபாட்டுத் தளங்கள் இடிக்கப் படுவது தொடர்பாக சிபிஅய் விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
சனாதன் சான்ஸ்தா அமைப்பினர் உள்ளூர் இந்து அமைப்புகளுடன் சேர்ந்து புராதன கிறித்துவ சின்னங் களையும்,  தேவாலயங்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

இது தொடர்பாக கோவா காங்கிரஸ் கட்சி தலைவர் சாந்தராம் நாயக் தலைநகர் பனாஜியில் மாநில காவல்துறை ஆணையர் முக்தேஷ் சந்தரை சந்தித்து புகார் மனு கொடுத்தார். அதன் பிறகு. ஊடகவியலாளர்களிடம் பேசுகையில், "மத வழிபாட்டுத் தலங்கள் தொடர்ந்து இடிக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக சில அமைப்பினர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக சிபிஅய் விசாரணை நடத்த வேண்டும்.  

மாநில காவல்துறையில் புகார் அளித்தால் அவர்களுக்கு மாநில அரசின் சில முக்கியத் தலைவர்கள் அழுத்தம் கொடுத்து, அவர்களை செயல்படாமல் வைக்கின்றனர். ஆகையால் இவ்விவகாரம் தொடர்பாக சிபிஅய் விசா ரணையைக் கோரியிருக்கிறோம். அவர்கள் இந்த வழக்குகளை விசாரித்தால் தான் நன்றாக இருக்கும். மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் இது தொடர்பாக எவ்வித பதிலும் கூறாமல் அயல்நாடு சென்றுவிட்டார். 

தெற்கு கோவா மாவட்டத்தில் கிறித்துவ தேவால யத்தில் உள்ள பல கல்லறைகளை மர்ம நபர்கள் சேதப் படுத்தியுள்ளனர். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்களால் 9 சிலுவைகள் மற்றும் ஒரு தேவாலயமும் அழிக்கப்பட்டுள்ளன. இதனால் கோவா மாநிலத்தில் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளன. 

சென்ற வாரம் இங்கு அமித்ஷா வந்து சென்ற பிறகு இச்சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது குறிப்பிடத் தக்கது" என்று அவர் கூறியுள்ளார்.
அமித்ஷா சென்று வந்த இடங்களில் எல்லாம் தொடர்ச்சியாக மத வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. 

கடந்த மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதே சத்தில் மிசாப்பூரில் இந்து - முஸ்லிம் கலவரத்தை உருவாக்கி அதன் அரசியல் பலனை பா.ஜ.க.வுக்கு ஏற்படுத் திடவில்லையா?

திரிணாமூல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்கத் திலும் இதே நிலைதான்!
இந்து வாக்கு - முசுலிம் வாக்கு என்று பிளவு படுத்தி (Polarisation) வாக்குகளைக் கபளீகரம் செய்யவில்லையா? வாக்கு வங்கி  அரசியல் செய்வதில் கெட்டிக்காரர்கள் அவர்  ; அந்த யுக்தியை அரசியல் நடவடிக்கையாகவே செய் வதில் கொழுத்த அளவுக்கு அனுபவசாலிகள் இந்த சங்பரிவார்க் கும்பல்! அவ்வாறு செய்து வெற்றியும் பெற்று விடுவதால் மக்கள் நலனைப் பற்றிக் கவலைப்படாமல், தங்களுக்கு வேண்டியது வாக்குகள், அதிகாரம், அதிகாரத்தின் வழி, காவி வழி மனுதர்ம ஆட்சியை நடத்துவது என்ற நோக்கிலும், போக்கிலும் இந்த இந்துத்துவா பாசிஸ்டுகள் நடந்து வருகிறார்கள். எச்சரிக்கை! எச்சரிக்கை!!

குஜராத்தில் நரேந்திர மோடி முதல் அமைச்சராக இருந்தபோது, சிறுபான்மையினர்மீது நடத்தப் பட்ட மத வன்முறை வேட்டைக்குப் பின்புலமாக இருந்தவர் - அங்கு நடைபெற்ற போலி என் கவுன்ட்டர் கொலையில் சம்பந்தப்பட்டவர் அமித்ஷா.

சொரபுதீன் போலி என் கவுன்ட்டர் வழக்கில் கொலை, கடத்தல், உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 25.7.2010 முதல் 29.10.2010 வரை சிறையில் அடைக்கப்பட்டவர்.

குஜராத் வன்முறைத் தாண்டவத்துக்கு முதல் அமைச்சர் நரேந்திர மோடிக்குக் கை வாளாக இருந்தவர். இவர் வேலையே  கலவரங்களை உண்டாக்கி அதன் மூலம் அரசியல் இலாபத்தை பிஜேபிக்குக் கிடைக்கச்  செய்வதுதான்! அதனால் தான் தாம் பிரதமரானதும் - அமித்ஷாவை விடாமல் தன் கையோடு வைத்துக் கொண்டு தொடர்ந்து பிஜேபியின் தலைவராகத் தொடரச் செய்வதாகும். ஜாடிக்கு ஏற்ற மூடி என்பார்களே அது இதுதான்!

கோபால கிருஷ்ண காந்தி கலைஞரிடம் வாழ்த்து பெற்றார்




சென்னை, ஜூலை 13 இந்திய குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிடும் கோபால கிருஷ்ண காந்தி அவர்கள், நேற்று  (12-07-2017) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கலைஞர் அவர்களை கோபாலபுரம் இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றதுடன், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் தனக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொண்டார். தி.மு.கழக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் திரு. கோபால கிருஷ்ண காந்தி அவர்களை வரவேற்று, குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொண்டதுடன், மதச்சார்பற்றக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் திரு. கோபால கிருஷ்ண காந்தி அவர்களுக்கு, திமுகவின் சார்பில் தனது ஆதரவை தெரிவித்தார்.

துணைநிலை ஆளுநரைப் பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்குத் தொல்லைகள் கொடுப்பதா?


புதுவைக்குத் தேவை தனி மாநில அந்தஸ்தே!
புரட்சிக் கவிஞர் பிறந்த மண்ணில் காவிக்கு இடம் தராதீர்!


புதுச்சேரி மாநிலத்தில் துணைநிலை ஆளுநரைப் பயன்படுத்தி, மத்திய பிஜேபி ஆட்சி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்குத் தொடர்ந்து தொல்லைகளைக் கொடுத்து வருகிறது. இதற்கு ஒரே வழி புதுச்சேரி மாநிலத்துக்கு மாநில அந்தஸ்து பெறுவதே என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்  கி. வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். புரட்சிக் கவிஞர் பிறந்த புதுவை மண்ணிலே காவிகள் காலூன்ற இடம் அளிக்கக் கூடாது புதுவை மக்கள் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அறிக்கை வருமாறு:


பிரதமர் மோடி தலைமையில் கடந்த மூன்றாண்டுகளாக நடைபெறும் ஆட்சியில், மாநில ஆளுநர்களே - 'வேலியே பயிரை மேய்வதுபோல', மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசுகளைக் கலைப்பது, கவிழ்ப்பது போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள கடமைகளைக் காற்றில் பறக்க விட்டுக் கொண்டு வருகின்றது.


மாநில ஆட்சிகளைக் கலைப்பதா?

எடுத்துக்காட்டாக,  முன்பு, அருணாச்சலப்பிரதேசம், உத்திர காண்ட் மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் அங்கே நடைபெற்ற ஆட்சிகள் (காங்கிரஸ்)  கலைக்கப்பட்டன! இச்செயலை உச்சநீதிமன்றம் வன்மையாகக் கண்டித்தது நாடறிந்த செய்தியாகும்.
எதிர்க்கட்சி வசம் (ஆம் ஆத்மி கட்சி வசம்) இருக்கிறது என்பதால், டில்லியில் அவ்வாட்சியின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடப் படுகிறது - அங்குள்ள துணை நிலை ஆளுநர் மூலமாக!
கோவா, மணிப்பூர் - மாநிலங்களில் எக்கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை நடைபெற்ற தேர்தல்களில்.

எவை எண்ணிக்கையில் பெரிய கட்சிகளோ அவைகளை அழைத்து ஆட்சி அமைக்கக் கேட்டுக் கொள்வதே, ஆளுநர்கள் கடைப்பிடித்த முறை;  ஆனால் இவ்விரண்டு மாநிலங்களில் (துணை நிலை) ஆளுநர்களின் துணை கொண்டு, அதிக எண்ணிக்கை கொண்ட காங்கிரஸ் கட்சியை அழைக்காமல், பா.ஜ.க.வையே (அதன் உறுப்பினர்கள் குறைவாக இருந்த போதிலும்) ஆட்சி அமைக்க அழைத்து, கட்சித் தாவலை மறைமுகமாக ஊக்குவித்து, ஆட்சியை பா.ஜ.க. பறித்துக் கொண்டு விட்டது.

சுமுக உறவு வேண்டாமா?

கேரளா, திரிபுரா போன்ற மாநிலங்களில் இடதுசாரி அரசுகளுக்கு எவ்வளவு நெருக்கடி களைக் கொடுத்து வர முடியுமோ அதை லாவக மாகவே செய்து வருகின்றனர்.
மம்தாவின் மேற்கு வங்க மாநிலத்திலும் ஆளுநர் தன்னை மிரட்டியதாக அவர் அறிக்கை விடவில்லையா?
மாநில ஆளுநருக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்கும் இடையே சுமுக உறவு தானே இருக்க வேண்டும்.

ஆனால் பா.ஜ.க ஆட்சியில் இது தலைகீழாக அல்லவா உள்ளது. இது எவ்வளவு வேதனை, வெட்கக் கேடு!

தமிழ்நாட்டின் நிலைமை என்ன?

தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத ஆளுநர் ஆட்சி - அதுவும் இதற்கு முன் எப்பொழுதும் நடந்திராத அளவுக்கு ஏறத்தாழ 10 மாதங்களாக தனி ஆளுநனரே நியமிக்கப்படாமல், மகராஷ்டிர மாநில ஆளுநர் தமிழ்நாட்டிற்குக் கூடுதல் பொறுப்பு ஆளுநராகத் (Governer in charge - additional charge)  தொடருவது எவ்வகையில் ஏற்கத்தக்கது?

முக்கிய அரசியல் நெருக்கடிகள் தமிழ்நாட்டு அரசியலில் ஏற்பட்ட போதுகூட, இங்கே நிலைமையைத் துல்லியமாகக் கண்காணித்து மத்திய அரசுக்குக் கூற ஆளுநர் இங்கே இல்லை; தமிழ்நாட்டு மக்கள் பிரதிநிதிகள் ஆளுநரிடம் தங்கள் குறைகளை முறையிட வாய்ப்போ, கிடைக்காமல் இரண்டொரு தடவை மும்பைக்குப் பறந்து சென்று திரும்பும் அவலம் அல்லவா நிலவுகிறது!

தமிழ்நாட்டு ஆளுநர் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவிக்கு நேர்காணலை அவரே நடத்துகிறார்; பக்கத்தில் உயர் கல்வி அமைச்சர் பார்வையாளராக அல்லது உதவியாளர் போலவே அமர்ந்திருப்பது - பிறகு ஆணை பிறப்பிப்பது முன்பு எப்போதாவது மாநிலத்தில் நடந்ததுண்டா?

யார் இந்த கிரேண்பேடி?

புதுவையில் டில்லி பிரதேசத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து மாறிய ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரியான கிரேண்பேடியை பா.ஜக. நிற்க வைத்து அவர் தோல்வியுற்ற நிலையில், அவரைப் புதுச்சேரி துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்கச் செய்தது மத்திய பிஜேபி அரசு.

வந்த நாள் முதல் இந்த நாள் வரை இவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் - திமுக கூட்டணி கட்சியின் முதலமைச்சர் நாராயணசாமி அவர்களுடைய ஆட்சிக்குக் கொடுத்து வரும்  தொல்லைகள் கொஞ்ச நஞ்சமல்ல.

ஓராண்டும் சில மாதங்கள் ஆகியுள்ள நிலை யில், அதற்கு எதிராகவே ஒரு போட்டி அரசாங்கம் (Parallel Government) நடத்துவதுபோல ஆணைகளைப் பிறப்பித்து, ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கி  வருவது எவ்வகையில் சரியானது?

அம்மாநில துணை நிலை ஆளுநருக்கும், முதல் அமைச்சருக்கும் சுமூக அரசியல் உறவு இருப்பதின் மூலமே மக்கள் விரும்பும் நல்லாட்சியைத் தர முடியும்.
ஆனால் நடப்பது என்ன? அதிகாரிகளுக்குத் தர்ம சங்கடம்; இக்கட்டான நிலை! அவர்கள் "இருதலைக் கொள்ளி எறும்பு போல்" தவிக்கின்ற நிலை - தேவை தானா? நியாயம் தானா?

மூன்று நியமன உறுப்பினர்களை தன்னிச்சையாக நியமிப்பதா?

சட்டமன்றத்திற்கு மூன்று நியமன உறுப் பினர்களை முதல் அமைச்சருக்கே தெளியாமல், அதுவும் தேர்தலில் நின்று மக்களால் தோற்கடிக்கப்பட்ட மூன்று பிஜேபிகாரர்களை நியமிப்பது பச்சை ஜனநாயக விரோத செயல் அல்லவா?

அரசின் ஒத்துழைப்போ, கலந்து ஆலோசிப்போ இன்றி துணை நிலை ஆளுநர் மூவரை நியமிப்பது, பதவிப் பிரமாணம் செய்து வைப்பது எவ்வகையில் ஜனநாயக மாண்பு ஆகும்?

மத்திய அரசு குறுக்கு வழிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிகளை இப்படிக் அலைக்கழிப்பது, அதிகார பறிப்புக்கு உள்ளாக்குவது, அரசமைப்புச் சட்ட விரோதப் போக்கு - அதன் பீடிகையில் உள்ள ஜனநாயகக் குடியரசுத் தத்துவத்துக்கு (Democratic Republic)    முரண்பாடுதானே!

புதுவைக்குத் தேவை மாநில அந்தஸ்து!

எனவே புதுவைக்கு மாநில அந்தஸ்து (State hood)  வழங்குவதற்குரிய போராட்டத்தை அம்மக்கள் முன்னெடுப்பதைத் தவிர வேறு வழியில்லை.

ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும்.  இதில் கட்சி, ஜாதி, மதம் இல்லை - நியாயங்கள் நீதி மட்டுமே உண்டு!

புதுவை மக்களே,  காவி மண்ணை புரட்சிக் கவிஞர் பிறந்த பூமியில் தூவ அனுமதிக்காதீர்! ஜனநாயகம் காக்கப்பட  ஒன்று திரண்டு உரிமைக் குரல் எழுப்புங்கள்!

சென்னை   தலைவர்

13-7-2017   திராவிடர் கழகம்

'நீட்'டுக்கு விலக்கு கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் - தொடர்ந்து கொண்டே இருக்கும்!

மாநிலக் கல்வித் திட்டத்தை ஒழித்து விட்டு நாடெங்கும் சி.பி.எஸ்.இ. திட்டத்தை அமல்படுத்தும் சதி


சென்னை ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்து தமிழர் தலைவர் ஆசிரியர் போர் முழக்கம்!


சென்னை, ஜூலை 12, 'நீட்' தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குக் கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் - வெற்றி கிட்டும் வரை, தொடர்ந்து கொண்டே இருக்கும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

இன்று (12.7.2017) காலை 11 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர்  ஆற்றிய உரை வருமாறு:
மிகுந்த எழுச்சியோடும், கடந்த சில நாள்களுக்கு முன்பு இங்கு கூடியிருக்கக் கூடிய ஒத்தக் கருத்துள்ள அரசியல் கட்சி அமைப்புகளும், கல்வி அமைப்புகளும், மருத்துவ அமைப்புகளும் எல்லாம் இணைந்து எடுத்த முடிவுக்கேற்ப - இன்றைக்கு நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கை மத்திய அரசு அளிக்கவேண்டும் என்று வலியுறுத்தி இவ்வார்ப்பாட்டம்!
இது பிச்சையோ, சலுகையோ அல்ல -  கெஞ்சிக் கேட்டுப் பெறுவதும் அல்ல. மாறாக, நமக்கு உள்ள, நம்முடைய மாநிலத்திற்கு அரசியல் சட்டம் அளித்துள்ள உரிமை. அந்த உரிமை பறிக்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் நடைபெறக்கூடிய இந்த சிறப்பான ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் நடைபெறக்கூடிய இந்த பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு, எனக்கு முன் உரையாற்றிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உரையாற்றிய அமைப்புச் செயலாளர் அருமைச் சகோதரர்  மானமிகு ஆர்.எஸ்.பாரதி எம்.பி. அவர்களே,

தளபதி மு.க.ஸ்டாலின்  வராமைக்குக் காரணம்
இந்நேரத்தில் ஒன்றைக் குறிப்பிடவேண்டும். இன்று காலையில், நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாக இருக்கக் கூடிய அன்புச் சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், என்னிடம் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பேசினார்கள்.
கண் அறுவை சிகிச்சை செய்து சில நாள்கள் ஆகியிருக்கின்றன. இந்நிலையில், ஏராளமான கூட்டம் இருக்கின்ற இடத்தில் கலந்துகொள்ளக்கூடாது என்று மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதன் காரணமாகத்தான் அண்ணன் அவர்களே, நீங்கள் அறிவித்தபடி அந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள மனம் இருந்தாலும்; இதுபோன்ற சங்கடம் இருக்கிறது - நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டார்.
உங்கள் நலம்தான் முக்கியம்; உங்கள் நலத்தில்தான் தமிழ்நாட்டினுடைய நலன் இருக்கிறது. ஆகவே,   அருள்கூர்ந்து நீங்கள் வரவேண்டும் என்று நினைத்தாலும், வரவேண்டாம் என்று நாங்களே சொல்லுவோம். ஆகவே, உங்களுக்குப் பதிலாக பாரதி அவர்கள் வருகிறார்கள், பரவாயில்லை.
அதேபோல, உங்கள் பணியை மிகச் சிறப்பாக இங்கே இருந்து செய்வதற்கு கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செயல்வீரர் சேகர்பாபு அவர்கள் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்பது நன்றிக்குரிய ஒன்று என்று அவரிடத்தில் நான் சொன்னேன்.
ஆகவே, தளபதி அவர்கள் உளப்பூர்வமாக இப்பிரச்சினை குறித்து தமிழகம் முழுவதும் நடைபெறுகிற பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும் என்று அறிக்கை கொடுத்தார்.

எல்லா இடங்களிலும் திராவிட முன்னேற்றக் கழகம், மற்ற அமைப்புகள், ஒத்த கருத்துள்ளவர்கள் எல்லோரும், எங்களுக்குள் எந்தவிதமான மாறுபட்ட கருத்தும் இந்தப் பிரச்சினையைப் பொறுத்தவரையில், இதில் மட்டுமல்ல, இதுபோன்ற பல பிரச்சினைகளில் - செம்மொழி தமிழை - மீண்டும் அதற்குரிய பாதுகாப்போடு அமைக்கவேண்டும் என்பது  போன்ற அன்றாடம் தோன்றிக் கொண்டிருக்கிற அவலங்கள், ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பதில் ஒன்றாக இருப்போம் என்ற உணர்வோடு எல்லோரும் இங்கே வந்திருக்கிறார்கள்.
அதுபோலவே, நம்முடைய அன்பான அழைப்பினை ஏற்று இங்கே வருகை தந்து, சிறப்பாக உரையாற்றியுள்ள தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியின் தலைவர் அன்புச் சகோதரர் பொன்விழா காணும்  தீரர் திருநாவுக்கரசர் அவர்களே,
இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பாக அருமையான கருத்துகளை சுருக்கமாக எடுத்து வைத்து அமர்ந்திருக்கக்கூடிய நம்முடைய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பின் தேசியத் தலைவர் பேராசிரியர் காதர்மொய்தீன் அவர்களே,
எனது அருமைச் சகோதரரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களே,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் அருமைத் தோழர் முத்தரசன் அவர்களே,
இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் செல்வசிங் அவர்களே,
மனிதநேய மக்கள் கட்சியின் நிறுவனர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களே,
திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களே,

பேராயர் எஸ்றா.சற்குணம் அவர்களே, பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொறுப்பாளர் பேராசிரியர் பிரின்சு கஜேந்திர பாபு அவர்களே,
எஸ்.பி.டி.அய்.யைச் சார்ந்த அப்துல் அமீது அவர்களே,
மற்றும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பாக ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கக்கூடிய திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,
அனைத்து இயக்கங்களைச் சார்ந்த, தோழமைக் கட்சிகளைச் சார்ந்த அருமைத் தோழர்களே, தாய்மார்களே, செய்தியாளர்களே, ஊடகவியலாளர்களே உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.

ஒரே ஒரு செய்தி - பல பிரச்சினைகளை இங்கே சொன்னதுபோல, நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் போராட்டங்கள் தமிழ்நாட்டில் வெடித்துக்கொண்டே இருக்கின்றன.
போராடவேண்டும் என்று நினைப்பவர்களுக்குக்கூட ஓய்வு கிடையாது என்று நினைக்கவேண்டிய அளவிற்கு, மோடி அரசு ஒவ்வொரு நாளும், குறிப்பாக தமிழர்களை, திராவிடர்களை, திராவிட இயக்கத்தை, தமிழ்நாட்டினுடைய நலனை கெடுக்கக்கூடிய பல்வேறு செய்திகளை அவ்வப்பொழுது அறிவித்து, மீண்டும் மீண்டும் நம்மை வம்புக்கு இழுக்கக்கூடிய செய்திகளை நடத்திக் கொண்டே இருக்கிறார்கள்.


கீழடியில் கீழறுப்பு

கீழடியில் ஒரு ஆய்வா? உடனே அந்த அதிகாரியை மாற்றுகிறார்கள். 
அதுபோல, நீண்ட காலம் பாடுபட்டு, நம்முடைய தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தைப் பெற்றுத்தந்தவர் நம்முடைய ஒப்பற்ற தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களாவார்கள்.
அந்த செம்மொழி நிறுவனம் என்பது, இன்றைக்கு மிகப்பெரிய அளவில் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. சட்டமன்றத்தில் இதுபற்றி கேள்வி கேட்டபொழுது அங்கே சொல்லியிருக்கிறார், நம்முடைய முதல்வராக காட்சியளித்துக் கொண்டிருக்கின்ற ஒருவர்.
அவர் சொல்கிறார், நான்தான் அதற்குத் தலைவர், எனக்கே அது தெரியாது என்று. தலைவருக்கே தெரியாமல், நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
எண்ணூர் துறைமுகம் கல்வி வள்ளல் காமராசர் பெயரில் இருக்கிறதே, அதனை விற்கவேண்டும் என்பதற்கு முயற்சி செய்கிறார்களே, லாபத்தில் நடக்கக்கூடிய அந்தத் துறைமுகத்தை எதற்காக விற்கவேண்டும் என்று, நம்முடைய எம்.எல்.ஏ.,க்கள் இங்கே நிற்கக்கூடிய சகோதரர்கள் கேட்கிறார்கள். அதற்கு அவர் சொல்கிறார், இதுவரையில் எந்தத் தகவலும் எனக்கு வரவில்லை என்று சொல்கிறார்.
தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்று - மத்திய அரசின் நடவடிக்கைகள் - தமிழக அரசுக்கே தெரியவில்லை என்றால், இதைவிட வெட்கக்கேடு வேறு கிடையவே கிடையாது.
எப்படிப்பட்ட சூழ்நிலையில், நம்முடைய இளைஞர்கள், வெறும் நீட் தேர்வுக்காக மட்டுமல்ல, ஒவ்வொன்றுக்காகவும், இந்த ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு தொடர்ந்து போராடியாக வேண்டும்.


மிஸ்டுகால் கட்சி காலூன்ற முடியாது
இந்த ஒற்றுமையைக் கட்டுகின்ற மோடிக்கு எங்களுடைய நன்றி. அதுதான் மிக முக்கியம். அடிக்கடி நீங்கள் சீண்டிக்கொண்டே இருங்கள்; அடிக்கடி நீங்கள் பதம் பார்த்துக் கொண்டே இருங்கள். உங்கள் காலில் விழுவதற்கு இருக்கிற கூட்டமல்ல - உங்கள் கால்களை இந்தத் தமிழ்நாட்டில் ஒருபோதும் - மிஸ்டு காலைத் தவிர ஊன்ற முடியாது - ஊன்ற விடமாட்டோம் என்று சொல்வதற்குத்தான் ஒற்றுமையாக இந்த அணி திரண்டு இருக்கிறது.
ஏன் நீட் தேர்வுக்கு ஒருமனதாக தமிழகத்தில் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரசு கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்பட அனைவரும் மிகச் சிறப்பான வகையில் சட்டமன்றத்தில் வாக்களித்தார்கள். ஒருமனதாக நிறைவேற்றி அய்ந்தரை மாதங்களாகின்றன.
தமிழ்நாடு சட்டமன்றம் ஒரு மனதாக நிறைவேற்றிய மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்புகின்ற வேலை அவர்களுடைய வேலை. தடுக்கக் கூடிய உரிமை மத்திய அரசுக்கு இல்லை, அரசமைப்புச் சட்டப்படி.
இங்கே வழக்குரைஞர்கள் நிறைய பேர் இருக்கிறோம். தயவு செய்து யாராவது சொல்லட்டும். நாங்கள் கேட்பது, ஆரம்பத்தில் நான் சொன்னதுபோல, பிச்சையோ, சலுகையோ அல்லது ஏதோ ஒரு வகையில் நீங்கள் எங்களுக்குக் கருணை காட்டுங்கள் என்பதல்ல - எங்கள் பிள்ளைகளுக்காக கருணை காட்டுங்கள் என்பதற்காக அல்ல. எங்களுக்குள்ள உரிமையை நிலைநாட்டுவதற்காக நாங்கள் இங்கே கூடியிருக்கிறோம்.

இந்திய அரசமைப்புச் சட்டப்படி பதவி பிரமாணம் எடுத்திருக்கிறார்கள். அந்த அரசியல் சட்டத்தையே மோசடி ஆக்கியிருக்கிறார்கள் - குற்றம் சுமத்துகிறோம் இந்த அரங்கத்தில். இது அறிவார்ந்த அரங்கம் -  மக்கள் அரங்கம்.
பொதுப் போட்டி என்பது என்ன?
மோசடி 1:
பொதுப் பட்டியல் என்று சொன்னால், கல்வி மத்திய அரசும் சட்டம் செய்யலாம்; மாநில அரசும் சட்டம் செய்யலாம் என்று சொன்னாலும்கூட, பொதுப்பட்டியல் என்று நாம் தமிழில் மொழி பெயர்க்கிறோமே தவிர, ஆங்கிலத்தில் ‘கன்கரண்ட் லிஸ்ட்' 'ஒப்புமை' கொடுத்தால்தான் சட்டம் இயற்ற முடியும்.
மாநில அரசை கலந்தாலோசித்தார்களா? மாநில அரசு மசோதா இயற்றி அனுப்பியதே, அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பவேண்டாமா? குடியரசுத் தலைவருக்கே அனுப்பாமல் இவர்களே வைத்துக்கொண்டு, மத்திய  கல்வி அமைச்சராக இருக்கக்கூடிய ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த ஒருவரும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருக்கக்கூடிய  இன்னொருவரும் சொல்கிறார்கள்,
தமிழ்நாடு அரசு தங்கள் காலடியில் இருக்கிறது; தமிழ்நாடு அரசு பேசா அரசு; கேளாக் காது. ஆகவே, நாங்கள் என்ன சொன்னாலும் ஆடுவார்கள் என்பதை அவர்கள் மனதில் வைத்துக்கொண்டு சொல்கிறார்கள்-
‘‘நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க முடியாது'' என்று.
இதனை சொல்வதற்கு நீங்கள் யார்? அரசியல் சட்டப்படி எங்களுடைய சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்புங்கள் - குடியரசுத் தலைவர் சொல்லட்டும் இதில் சட்ட சிக்கல் இருக்கிறது என்று. நாங்கள் அதற்குப் பதிலளிக்கிறோம், விளக்கமளிக்கிறோம். அதனையல்லவா மத்திய அரசு செய்திருக்கவேண்டும். குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமலேயே நீங்கள் நீட் தேர்வை தமிழ்நாட்டில் நடத்தியிருக்கிறீர்கள்.
குழி பறிக்குன் குதிரைஒரு பழமொழி உண்டு, ‘‘குதிரை கீழே தள்ளியது மட்டுமல்லாமல், குழியையும் பறித்ததுபோல'' என்று. அதுபோல, என்ன நடந்தது - நீட் தேர்வை நடத்துகின்ற நேரத்தில், அதில் ஆயிரத்தெட்டு குளறுபடிகள்.
மொழியாக்கம் செய்வோம் என்று சொன்னீர்களே - இது இன்னொரு மோசடி. மொழியாக்கம் செய்தார்களா கேள்விகளை?
இந்தியா முழுவதும் தகுதி திறமையை அளக்க ஒரே சீரமைப்பு என்று சொன்னீர்களே, எல்லோருக்கும் ஒரே கேள்வியா? அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., தேர்வுகளில் ஒரே வினாத்தாள் கொடுக்கப்படுகிறதே, அதுபோல் நீட் தேர்வுக்குக் கொடுக்கப்பட்டதா? இந்தக் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்லியாகவேண்டும்.
இல்லை. குஜராத்திற்கு சுலபமான கேள்வித்தாள் - தென்மாநிலங்களான தமிழ்நாட்டிற்கு, கேரளாவிற்கு எல்லாம் கடினமான கேள்வித்தாள்கள். இது எவ்வளவு பெரிய மோசடி.!
நீட் தேர்வு முடிவில் 25 இடத்தில், தமிழ்நாட்டில் உள்ளவர்கள் ஒருவர்கூட வர முடியவில்லை. சரி, தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் படித்தவர்களாவது 25 இடத்தில், ஒரு இடத்தையாவது பெற முடிந்ததா? அதற்கு என்ன அர்த்தம்? நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.
அருமையாக சொன்னார், நம்முடைய சகோதரர் திருமா அவர்கள். அப்படி அப்படியே வைத்து, 5 சதவிகிதமாக இருக்கிற சி.பி.எஸ்.இ.,-யை, சமஸ்கிருதம் சொல்லிக் கொடுப்பதை, இந்தி சொல்லிக் கொடுப்பதை - மத்திய அரசினுடைய ஆதிக்கத்தில் இருப்பதை அந்தத் திட்டத்திலேயே வைத்துவிட்டு, தமிழ்நாட்டு திட்டத்திற்கு விடை கொடுத்து புறந்தள்ளி விடுவார்கள். எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
மோசடி 2:
நம்முடைய பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்கள் மிக அழகாகச் சொன்னார்கள். ரிசல்ட் போட்டிருக்கிறார்கள். இட ஒதுக்கீட்டுப்படி நாங்கள் பின்பற்றுவோம் என்று சொல்லிவிட்டு,
பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகிதம்,
தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்கு 22.5 சதவிகிதம் என்று சொன்னால், 49.5 சதவிகிதம்.
மற்றவைகளையெல்லாம் இங்கே சுட்டிக்காட்டினார்கள். நான் விளக்கவேண்டிய அவசியமில்லை. இந்த அரங்கம் அதனைப் புரிந்துகொண்டிருக்கிறது.
Open Competition திறந்தபோட்டி - தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், மலைவாழ் மக்கள், முன்னேறிய ஜாதியினர் யாராக இருந்தாலும் அனைவரும் போட்டி போடலாம். அதில் அவர்களுடைய தகுதிக்கேற்ப,  மதிப்பெண்களுக்கு ஏற்ப இடத்தைப் பிரித்துக் கொள்ளலாம் என்று இருக்கும் அந்த இடத்தை - Others  என்ற ஒரு வார்த்தையைப் போட்டு, 50.5 அந்த இடத்தை நாங்களே கபளீகரம் செய்வோம் என்று, 10 சதவிகிதம் உள்ள பார்ப்பனர்களும், மேல்ஜாதிக்காரர்களும் செய்திருக்கிறார்கள் என்றால், இந்தியா முழுவதும் இந்த மோசடியை மோடி அரசாங்கம், மோடி வித்தையாக அரங்கேற்றி இருக்கிறது. இது பெரியார் கண்ணாடிக்கு மட்டும்தான் தெரியும். உடனடியாக இதனை எடுத்துச்சொன்னதின் விளைவாகத்தான் நண்பர்களே, இப்போது திணறியிருக்கிறார்கள்.
இது அரசியல் சட்டத்திற்கு விரோதம்; நீதிமன்ற ஆணைகளுக்கு விரோதம் - உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு விரோதம். இதனை அத்தணையும் எடுத்துச் சுட்டிக்காட்ட வேண்டியது நம்முடைய அனைத்துக் கட்சிகளுடைய கடமையாகும்.


திண்ணைப் பிரச்சாரம் செய்க
இங்கே நண்பர்கள் அனைவரும் சொன்னார்கள், நான் அதனை தொகுத்து உங்கள் நினைவிற்காக சொல்கிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் இதைத் திண்ணைப் பிரச்சாரம், தெருப் பிரச்சாரம், போராட்டம் இவை அத்தனையும் செய்தாகவேண்டும்.
அதில் ஒரே ஒரு செய்தியை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.  தமிழ்நாட்டில்தான், அதுவும் திராவிட இயக்க ஆட்சியினால்தான், அதிலும் கலைஞர் அவர்கள் நீண்ட காலம் ஆட்சியில் இருந்த காரணத்தினால்தான், தமிழ்நாட்டில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற நிலை இல்லை.
கழகமே இல்லாத ஆட்சியா?
கழகமே இல்லாத ஆட்சியை நாங்கள் கொண்டு வரப்போகிறோம் என்று காலே இல்லாதவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கழகமே இல்லாத ஆட்சியை உங்களால் கொண்டு வர முடியுமா? அப்படி வந்தால் என்னாகும்? கலகங்களே உள்ள தமிழ்நாட்டைத்தான் உங்களால் உருவாக்க முடியும்.
இந்தக் கூட்டம் இருக்கின்ற வரையில், இங்கே அணி திரண்டு வந்திருக்கிறோமே, கைகோர்த்து கொண்டிருக்கிறோமே - இவர்களுடைய உடலில் கடைசி ஒரு சொட்டு ரத்தம் இருக்கின்ற வரையில் உங்களால் அதனை சாதிக்க முடியாது. இது பெரியார் பிறந்த பூமி. அம்பேத்கர் அவர்கள் உணர்வுகள் பரந்த பூமி. அண்ணா ஆண்ட பூமி. பச்சைத் தமிழர் கல்வி வள்ளல் காமராசர் ஆண்ட பூமி. இந்த பூமி சாதாரண பூமியல்ல - கலைஞர் அவர்கள் ஆண்ட பூமி - அடுத்து தளபதி ஸ்டாலின் அவர்கள் ஆள இருக்கிற பூமி. நீங்கள் நினைப்பதைப்போல இங்கே நடக்காது.  
இங்கே அடிமை அரசியல் முடிந்துவிட்டதா? என்று கேட்டார் சுப.வீ. அவர்கள். முடியவில்லை என்று அழகாகச் சொன்னார்கள்.
நீட் தேர்வை ஒழிக்கின்ற வரையில் நாங்கள் போராடுவோம். நுழைவுத் தேர்வை எம்.ஜி.ஆர். கொண்டு வந்தார். அதனை எதிர்த்து 21 ஆண்டுகள் தொடர்ந்து போராடினோம் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும். ஒழிந்தது. ஜெயலலிதா அம்மையார் அவர்கள் எங்களுடைய கருத்தை ஏற்று, ஆனால், அவருக்கே உரிய ஒரு முறையில், நிபுணர்கள் குழுவை அமைக்காமல், சட்டமன்றத்திலேயே நிறைவேற்றினார்கள் - 2005 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன், உடனே நீதிமன்றத்தில் தோற்றது.
நாங்கள் அப்போதே சொன்னோம், ஒரு நிபுணர் குழுவை அமையுங்கள் - அதற்குப் பிறகு அதனை சட்டமாக்குங்கள். சரியாக இருக்கும், நீதிமன்றமும் அதனை செல்லாது என்று சொல்லாது என்றோம்; அதனை அவர்கள் செய்யவில்லை.

அடுத்ததாக கலைஞர் அவர்கள் முதலமைச்சராக வந்தார், அதனை செய்தார், அதன் காரணமாகத்தான் இத்தனை ஆண்டுகளாக நம்முடைய பிள்ளைகள், கிராமத்துப் பிள்ளைகள் மருத்துவர்களாக வந்தார்கள், மிகப்பெரிய அளவில்.
ஆகவே, நண்பர்களே! இப்பொழுது நாம் செய்யவேண்டிய பணிகள் ஏராளமாக இருக்கின்றன. எனவே, நீட் தேர்வுக்காக மட்டுமல்ல இந்த ஜனநாயக உரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்பு என்பது.
உண்ணும் உரிமைக்குக் கூட ஆபத்தா?
சமூகநீதிக்கு ஆபத்து ஏற்படும்பொழுது, மதச்சார்பின்மைக்கு  ஆபத்து ஏற்படும்பொழுது, ஏன் மாநில உரிமைகளுக்கு ஆபத்து ஏற்படும்பொழுது, நம்முடைய மொழிக்கு ஆபத்து ஏற்படும்பொழுது, நம்முடைய கலாச்சாரத்திற்கு ஆபத்து ஏற்படும்பொழுது, உண்ணும் உரிமைக்கு ஆபத்து ஏற்படும்   பொழுது இன்றைக்கு உச்சநீதிமன்றம் தடை போட்டிருக்கிறது என்பது வேறு; நீதிமன்றங்களைவிட, நாங்கள் நம்புவது வீதிமன்றங்களைத்தான், மக்கள் மன்றங்களைத்தான்.
பத்திரிகைகளில் என்ன எழுதினார்கள் தெரியுமா? மாட்டுக்கு வந்தது - அடுத்ததாக கோழிக்கு வரப் போகிறது என்று.
அடுத்தது என்ன சொல்வார்கள்? வெங்காயத்தை சாப்பிடக்கூடாது என்று. ஏனென்றால், வைஷ்ணவர்கள் என்ன சொல்வார்கள் என்றால், வெங்காயத்தை வெட்டினால் ஒரு பக்கம் சங்கு; இன்னொரு பக்கம் சக்கரம் இருக்கிறது என்று சொல்லி அவர்கள் வெங்காயத்தை சாப்பிடமாட்டார்கள்.


பனிப்பாறையின் ஒரு முனை!
உங்கள் காலில் விழ ஒரு ஆட்சி இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு, அதுதான் தமிழகத்தின் நிலை என்று நினைக்காதீர்கள். இந்த ஆட்சியை அசைப்போம் - இல்லையானால், வேறு ஆட்சியை, திராவிட இயக்க ஆட்சியை நாங்கள் தேவையான நேரத்தில், இந்த மக்கள் அமைப்பார்கள், அமைப்பார்கள். அதுதான் ஒரே வழி! மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்கமாட்டோம். நீட் தேர்வு என்பது இருக்கிறதே, அது ஒரே ஒரு பனிப்பாறையின் முனை. அவ்வளவுதான் வராது. அதற்கு அடியிலே எத்தனையோ  செய்திகள் - மாநில  உரிமைகள் இருக்கின்றன.
எனவே, நண்பர்களே, நீங்கள் அத்துணைப் பேரும், மேடையில் இருக்கின்ற கட்சிகள் பெருகுமே தவிர, சுருங்காது. ஏனென்றால், பல பேரை நம்மோடு சேர்த்துக் கொண்டே இருக்கிறார் மோடி அவர்கள். ஆகவே, அவருக்கு நன்றி!


ஒலிமுழக்கங்கள்
எனவேதான், தொடர்ந்து நாம் போராட்டக் களத்தில் வெல்வோம்! வெற்றி பெறும் வரை போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும். இங்கே வந்திருக்கின்ற அத்துணைப் பேருக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!


போராடுவோம் போராடுவோம்!
நீட்டை ஒழிக்கின்ற வரையில் போராடுவோம்!
மாநில உரிமைகளைப் பாதுகாக்கப் போராடுவோம்!
சமூகநீதியைப் பாதுகாக்கப் போராடுவோம்!
மக்கள் அரசை உருவாக்கவோம்!
உண்மையான சுயமரியாதை அரசை உருவாக்குவோம்!
நன்றி, வணக்கம்!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.




குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...