Thursday, April 4, 2019

15 ஆண்டுகால ஒப்பந்தத்தால் தமிழக மின்வாரியத்துக்கு ரூ.65 ஆயிரம் கோடி இழப்பு ஏப்.10 வரை முடிவு எடுக்க உயர்நீதிமன்றம் தடை



தமிழக மின்வாரியத்துக்கு  2014இல் இருந்து 15 ஆண்டுகளுக்கு சில ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. இதனால் ரூ.65 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என தொடரப் பட்ட வழக்கில், மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம் ஏப். 10 வரை எந்த முடிவும் எடுக் கக்கூடாது என உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.
மதுரை சம்பக்குளத்தை சேர்ந்த வழக்குரைஞர் நிர்மல் குமார், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழ்நாடு மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தில் 3 உறுப்பினர்கள் இருக்க வேண் டும். இந்த ஆணையம் மின்சாரம் உற்பத்தி, விநியோகம், கொள் முதல் தொடர்பான பிரச்சினை களை தீர்த்து வைக்கிறது. இந்த ஆணையத்தில் 3 உறுப்பினர்களில் ஒருவர் உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியாக இருக்க வேண்டும் என 12.4.2014இல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால் தமிழக மின்வாரிய ஒழுங்குமுறை ஆணைய உறுப்பி னராக ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிப்பதில்லை. மின்வாரியத் தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அதிகாரிகளையே உறுப்பினர் களாக நியமிக்கின்றனர். இது உச்சநீதிமன்ற உத்தரவுக்கு விரோ தமானது. தமிழ்நாடு மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒரு உறுப்பினர் ஓய்வு பெற்ற நிலையில், அவரது இடத்துக்கு புதிய உறுப்பினரை தேர்வு செய்வது தொடர்பாக மின் வாரியம் 5.2.2019இல் அரசாணை பிறப்பித்துள்ளது.
இந்த அரசாணையை ரத்து செய்து, அந்த காலியிடத்துக்கு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதி பதி ஒருவரை நியமிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இதேபோல், மின்வாரிய ஒழுங்குமுறை ஆணைய முன்னாள் உறுப்பினரான சென் னையை சேர்ந்த நாகல்சாமி என்பவரும், தன்னை வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்கள்  நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசார ணைக்கு வந்தது. அப்போது நாகல்சாமி, “2014இல் ஒழுங்கு முறை ஆணையம் எடுத்த சில ஒப் பந்தங்கள், தமிழக மின் வாரியத்திற்கு  2014இல் இருந்து 15 ஆண்டுகளுக்கு  போடப்பட் டுள்ளது.
அதனடிப்படையில் தமிழக மின்வாரியத்திற்கு ரூ.65 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும். நான் அதை ஏற்றுக் கொள்ள வில்லை. ஆனால் என்னுடைய ஒப்புதலின்றி மற்ற இரு உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்ததன் பேரில் அந்த ஒப்பந்தங்கள் போடப்பட் டுள் ளனஎன்றார்.
இதனையடுத்து நீதிபதிகள், தமிழக மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம் வரும் ஏப்ரல் 10 வரை எவ்விதமான முடிவு களையும் எடுக்கக்கூடாது என் றும், மனுதாரர் நாகல்சாமிக்கு உரிய பாதுகாப்பு வழங்க, தமிழக காவல்துறை தலைவருக்கு உத்தரவிட்டும் விசாரணையை ஏப்ரல் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.


தேர்தல் ஆணையத்துக்கு நெருக்கடியே!

வாக்குக்கு பணம் கொடுப்பது, வாக்குச் சாவடியை கைப்பற்றுவது நிரூபணமானால், தேர்தலை ரத்து செய்யவோ, தள்ளிவைக்கவோ தங்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விடுத்த வேண்டுகோளை மோடி அரசு 4 முறை நிராகரித்துள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணை யத்திடம் இருந்து ஏராளமான ஆவணங்கள் பெறப்பட்டன.
இதில்தான் வாக்குக்குப் பணம் கொடுத்தாலோ, வாக்குச் சாவடியைக் கைப்பற்றினாலோ அந்த தொகுதியில் வாக்குப் பதிவை ரத்து செய்யவோ, தள்ளிவைக்கவோ தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் வேண்டும் என 4 முறை மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டு நிராகரிக்கப் பட்டுள்ளது தெரிய வந்தது.
கடந்த 2016ஆம் ஆண்டு இது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கருக்கு அப் போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் நஸீம் ஜெய்தி கடிதம் எழுதினார். அதே ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சகத்துக்குக் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கைகளை மத்திய அரசும், சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாதும் நிராகரித்து விட்டனர்.
இதுதவிர, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா மற்றும் புதுச்சேரி, அசாமில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 175.53 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் 52 லட்சம் லிட்டர் அளவுள்ள ரூ. 24 கோடி மதிப்புள்ள சாராயமும்,ரூ.12 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதும், தகவல் அறியும் உ.ரிமை சட்டத்தில் கிடைத்த ஆவணங்களில் இருந்து தெரியவந்துள்ளது. இந்தியாவின் அனைத்து சுதந்திர அமைப் பையும் விழுங்கிவிட்ட பிரதமர் மோடிக்கு இறுதியாக தேர்தல் ஆணையம் மட்டும் எம் மாத்திரம்!
பிஜேபியைச் சேர்ந்த கோவா முதல் அமைச்சர் மனோகர் பாரிக்கர் மரணம் அடைந்த நிலையில் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல், நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலோடு நடப்பதாக உடனடியாக தேர்தல் ஆணையம் அறிவித்தது எப்படி? தமிழ்நாட்டில் இடைத் தேர்தல், நடத்த வேண்டிய தொகுதிகளில் பல மாதங்களைக் கடந்தும், இதுவரை அவற்றிற்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படவில்லையே ஏன்?
இதன்மூலம் மக்களின் நம்பகத்தன்மையை தேர்தல் ஆணையம் இழந்துவிடவில்லையா? இதன் பின்னணியில் மோடி தலைமையிலான மத்திய ஆட்சியின் அரசியல் 'திருவிளையாடல்' ஒளிந்திருக்கிறது என்று சாதாரணகுடிமகன் கூட தேநீர்க்கடைகளிலும், பேருந்து நிலையங்களிலும் பேசும் பொருள் ஆகிவிட்டதே!
இந்த நிலை ஏற்பட தேர்தல் ஆணையம் இடம் கொடுக்கலாமா?
ஜனநாயகம் என்ற முகமூடியோடு, ஒரு பாசிச ஆட்சி கால் பதிக்க ஆரம்பித்துவிட்டது. இந்தத் தேர்தலில் இந்த ஆட்சியை ஒழிக்காவிட்டால், அனுபவம் முதிர்ந்த தலைவர்கள் சொல்வது போல இதுதான் கடைசித் தேர்தலாக இருக்கும் - எச்சரிக்கை!

Tuesday, April 2, 2019

தாங்காதப்பா தாங்காது!


அரசியல் சாசன அமைப்புகள், தன்னாட்சி நிறுவனங்கள், நரேந்திர மோடி என்ற பாசிச மன்னராட்சியில்' காயடிக்கப்பட்டு வருகின்றன.
நான் நான்' என்னும் தன்னகங்காரம் தலைக்கு ஏறிய நிலையில், இவ்வமைப்புகள் ஒவ்வொன்றையும் தன் கட்டை விரலுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று  கருதியதால், சுயமரி யாதை உள்ள அந்த நிபுணர்கள் எல்லாம் ஒரு கால் கடுதாசியில் விலகல் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு விலகி ஓடினார்கள்.
பண மதிப்பிழப்பு அறிவிப்புக்கூட ரிசர்வ் வங்கியின் ஆளுநருக்குத் தெரிவிக்கப்படவில்லை.
ஆட்சியின் ஆர்.எஸ்.எஸ். கரம் ரிசர்வ் வங்கிக்குள் இருக்க வேண்டும் என்பதற்காக திருவாளர் குருமூர்த்தி அய்யர் இயக்குநராக ரிசர்வ் வங்கிக்குள் நுழைக்கப்பட்டார்.
ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த ரகுராம் ராஜன், உம்மிடம் யார் பணியாற்றுவார்கள்?' என்று கூறி, பதவியைத் தூக்கி எறிந்து அமெரிக்கா பறந்துவிட்டார்.
அடுத்து தனக்கு மிகவும் வேண்டிய சகாவான - ரிலையன்ஸ் நிறுவனத்தில் உயர் பதவியிலிருந்த உர்ஜித் பட்டேலை அந்த இடத்தில் அமர்த்தினார். ரிசர்வ் வங்கியிலிருந்து ஈவுத் தொகை கேட்ட விவகாரத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
பார்த்தார் அவர், இவர் சரிப்பட்டு வரமாட்டார் என்று முடிவு செய்து பதவி நாற்காலியைக் காலி செய்தார்.
இந்திய அரசின் தலைமைப்  பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்பிரமணியமோ  மோடியின் அணுகுமுறையின் அவலத்தைக் கண்டு நடையைக் கட்டினார். நிதி ஆயோக்கின் தலைவர் அரவிந்த் பனகாரியா பாய்' சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
இந்தியப் புள்ளியியல் ஆணையத்திலும் தன் நாட்டாண் மையைக் காட்டினார் மோடி என்னும் ஹிட்லர். அவ்வளவுதான், ஆணையத்தின் செயல் தலைவர் பி.சி.மோகனன், உறுப்பினர் ஜே.வி.மீனாட்சி இருவரும் டாட்டா' காட்டி வெளியேறினர்.
எந்தக் காலத்திலும் நிகழாத ஒரு நிகழ்வு - உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் நால்வர் (18.1.2018) நீதிபதி செலமேஷ்வர் தலைமையில், நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், மதன்பிலோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்து மத்திய அரசின் தலையீட்டை அம்பலப்படுத்தினர்.
சி.பி.அய். இயக்குநர்கள் மோடியின் தர்பாரில் அசிங்கப் பட்டதுதான் மிச்சம்.
இந்தியாவின் மரியாதை மோடி ஆட்சியில் கப்பலேறி விட்டது.
இந்த ஆட்சி மீண்டுமா? 
தாங்காதப்பா தாங்காது! உஷார்! உஷார்!!

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

விரும்பாத மாநிலங்களில் 'நீட்' ஒழிக்கப்படும் 
மாநிலப் பட்டியலில் கல்வி!
புதுடில்லி, ஏப்.2 'நீட்' தேர்வு விரும்பாத மாநிலங்களில் 'நீட்' தேர்வு ஒழிக்கப்படும் என்பது உட்பட பல முக்கிய அம்சங்களைக் கொண்ட தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டில்லியில் இன்று (2.4.2019) வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:
*ஓராண்டாக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்றது. மக்களின் கருத்தை கேட்டு அறிந்து தேர்தல் அறிக்கை தயாரிக்க கூறியிருந்தேன் .
*ஒரு பொய் கூட தேர்தல் அறிக்கையில் இருக்க கூடாது என்றும் அறிவுறுத்தினேன். தினமும் பிரதமர் பல பொய்களை பேசி வருகிறார், நாங்களும் பொய் சொல்ல விரும்பவில்லை.
*5 பெரிய திட்டங்களை கொண்டு காங். தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது
*நியாய் (NYAY) திட்டத்தின் கீழ் ஏழைக்குடும்பங்களுக்கு  மாதந்தோறும் ரூ. 6000.  இந்த தொகையானது குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
*2030க்குள் நாட்டில் இருந்து வறுமை முழுமையாக நீக்கப்படும்
*விவசாயத்திற்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்
*100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த் தப்படும்
*தீவிரவாதத்தை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்
*இளைஞர்கள் தொழில் தொடங்கும் போது 3 ஆண்டு களுக்கு லைசென்ஸ் பெற தேவையில்லை
*மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள 22 லட்சம் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்
*விவசாயிகள்  அவர்கள் வாங்கிய கடனை திரும்ப செலுத்தவில்லை என்றால் அது கிரிமினல் குற்றமாக கருதப்படாது.
*நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்
*தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து. தமிழகத்தில் மட்டுமில்லை எந்தெந்த மாநிலங்களில் நீட் தேர்வு எதிர்க்கப்படுகிறதோ அந்த மாநிலங்களில் நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும். அதற்கு மாற்றாக மாநில அளவில் தேர்வுகள் நடத்தப்படும். கல்வி மாநிலப் பட்டியலுக்கு வரும்.
*ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசல் விலை கொண்டு வரப்படும். புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்
*தென் இந்தியா மக்களுடன் நாங்கள் உள்ளோம் என காண்பிக்கவே வயநாட்டில் போட்டியிட உள்ளேன்.

Monday, April 1, 2019

மதச்சார்பின்மை சகிப்புத்தன்மை அழிந்து போகும் திரைப்பட இயக்குநர்கள் கூட்டறிக்கை


சென்னை, ஏப். 1 நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அனைத்துக் கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர் தல் நடை பெறும் தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் முடிந்துவிட்டது. மற்ற இடங்களுக்கான வேட்பாளர்கள் தேர்வும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள், மீண்டும் மோடியை ஆட்சி யில் அமரவைப்பார்களா அல்லது ராகுலுக்கு ஒரு வாய்ப்பு வழங்கு வார்களா என விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், இந்தியாவின் பல் வேறு பகுதிகளில் இருந்து, சுமார் 100 திரைப்பட இயக்குநர்கள் ஒன்றாக நாட்டு மக்களுக்கு ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அவர்களின் கோரிக்கை, ஆளும் பா.ஜ.க கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது. அந்தக் கூட்டறிக்கையில், பா.ஜ.க-. வை ஆட்சியில் இருந்து அகற்றும்படி கோரிக்கை விடுத்துள்ள னர். இந்த இயக்குநர்கள் பட்டியலில், வெற்றி மாறன், கோபி நயினார், திவ்யா பாரதி, சனல்குமார், ஆனந்த் பட்வர்தன் உள்ளிட்டவர்கள் உள்ளனர்.
நாட்டு மக்களுக்கு

ஒரு கோரிக்கை
இது தொடர்பாக அவர்கள் இணையத்தில், `நாட்டு மக்களுக்கு ஒரு கோரிக்கை என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், ``நமது நாடு தற்போது சோதனையான காலகட்டத்தில் இருக்கிறது. கலாச்சார ரீதியாகவும், புவியியல் ரீதியாகவும் நாம் பிரிந்திருந்தாலும், ஒரு நாடாக நாம் இணைந்து இருக்கிறோம். அதுவே இந்த நாட்டின் குடிமகன் களான நமக்கு நல்ல உணர்வைத் தருகிறது.
பாசிசம் கடுமையாக தாக்கும்
ஆனால், தற்போது அவையெல் லாம் வெறும் வார்த்தையாகத்தான் இருக்கிறது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில், நாம் சரியாக செயல் படாமல் போனால், பாசிசம் நம்மை கடுமையாகத் தாக்கும். மதரீதியாக நாடு செல்வது என்பது நாம் கேட் டிராத இந்தியா. பா.ஜ.க தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அவர்கள் கும் பல் மற்றும் மாட்டு அரசியல் மூல மாகவும் நாட்டில் பிரிவினையை ஏற்படுத்துகிறார்கள். இவர்களின் ஆட்டத்தில் தலித்துகள் மற்றும் இசு லாமியர்கள்  ஓரங்கப்பட்டுகிறார்கள். இணையதளம் மற்றும் சமூகவலை தளம் மூலம் தங்களின் வெறுப்பு அரசியலை அவர்கள் பரப்புகிறார்கள்.
தேசபக்தி என்பதுதான் அவர்களின் துருப்புச் சீட்டு. யாராவது அவர் களுக்கு எதிராகச் செயல்பட்டால், அவர்களை தேசத் துரோகிகள் என்பார்கள். தேசபக்தி என்ற ஒன்றைச் சொல்லி, அவர்கள் வாக்குவங்கியை ஏற்படுத்தியுள்ளனர். இவர்களின் அதிருப்தியால், நாம் சில எழுத்தாளர் களையும், படைப்பாளர்களையும்,  ஊடகவியலாளர்களையும் இழந்திருக் கிறோம். அதனை நாம் மறந்துவிடக் கூடாது.
ராணுவத்தைப் பயன்படுத்துவதும் அவர்களின் திட்டங்களில் ஒன்று. தேவையில்லாத போர்மூலம் நாட்டை ஆபத்தில் வைப்பார்கள். தேசிய நிறு வனங்களில், அந்த நிறுவனத்துக்குத் தொடர்பில்லாத நபர்களைத் தலை மையிடத்தில் அமரவைத்து, உலகமே நம்மைப் பார்த்து சிரிக்கும்படி செய் கிறார்கள். திரைப்படங்கள் மற்றும் புத்தகங்களுக்குத் தடை விதிப்பது மற்றும் தணிக்கை செய்தல் போன்ற நடவடிக் கைகள்மூலம் மக்களுக்கு உண்மை தெரியாதபடி பார்த்துக் கொள்கிறார்கள்.
இதுவே உங்களுக்கு கிடைத்த கடைசி வாய்ப்பு
விவசாயிகளை மறந்தே விட்டார்கள். பா.ஜ.க, இந்தியாவின் வளங்களை, சொத்துகளைத் தொழி லதிபர்களுக்கு வசதியாக வழங்கி யுள்ளது. இவர்களின் மோசமான பொருளாதார கொள்கையினால் ஏற்பட்ட பெரும் பேரழிவுகளை, மூடிமறைத்து, வெற்றிபெற்றதுபோல ஜோடிக்கிறார்கள். பொய்யான பரப் புரைகள் மூலம், இதனை அவர்கள் சாத்தியமாக்குகிறார்கள். இதன்மூலம் அவர்கள், நாட்டில் பொய்யான அல் லது தவறான நம்பிக்கையை ஏற் படுத்தியிருக்கிறார்கள்.
வரலாறு மற்றும் புள்ளியியல் களை அவர்களுக்குத் தேவையானது போல மாற்றுவார்கள். இன்னும் ஒருமுறை அவர்களுக்கு அதிகாரம் வழங்கினால், அது மிகப்பெரிய தவ றாக அமைந்துவிடும். உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்தை சவப்பெட்டி யில் வைத்து அடிக்கும் கடைசி ஆணியாக அது இருக்கும்.
இந்த ஆபத்தான ஆட்சி மீண்டும் அதிகாரத்துக்கு வராமல் இருக்க, உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்'' என்று கேட்டுக்கொள்கிறோம். இந் திய அரசியலமைப்பின்படி, உங் களின் அரசாங்கத்தைத் தேர்வு செய் யுங்கள். அந்த அரசாங்கம், நமது பேச் சுரிமையை, கருத்துரிமையை வழங்கு வதாக இருக்க வேண்டும். ஆம்... இதுவே உங்களின் கடைசி வாய்ப்பு! என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் கீழ் 103 இயக்குநர்கள் கையொப்ப மிட்டுள்ளனர்.



இது மட்டும் மொழி நக்சலிசம் இல்லையா?

பாஜக ஆட்சிக்காலம் முடியும் இறுதிக்காலத்தில் நாடெங்கும் பல ஊர்களின் பெயர்கள் மாற்றப் பட்டு வருகின்றன. இவ்வாறு நகரங்கள் மற்றும் கிராமங்களின் பெயர்களை மாற்ற அந்தந்த மாநில அரசுகள் பரிந்துரை அளிக்க வேண்டும். பெயர் மாற்றத்துக்கு ரயில்வே, அஞ்சல்துறை, மக்கள் கணக்கெடுப்புத் துறை ஆட்சேபம் தெரிவிக்கவில்லை எனில் மத்திய அரசு அனுமதி அளிக்கிறது. மாநிலங்களின் பெயரை மாற்ற நாடாளுமன்ற தீர்மானத்தின்மீது வாக்கெடுப்பு நடத்தி, அரசியல் சாசன திருத்தம் செய்து மாற்றப்படுகிறது. இந்த நிலையில் எந்த ஒரு ஆலோசனை மற்றும் முன் அறிவிப்பு இன்றி கடந்த ஓராண்டில் மட்டும் 25 ஊர்களுக்குப் பெயர் மாற்றம் செய்ய மத்திய மோடி அரசு அனுமதித்துள்ளது.
இப்பெயர் மாற்றம் குறித்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர், "நாடு முழுவதும் கடந்த ஓராண்டில் மட்டும் 25 ஊர்களின் பெயர் மாற்றத்துக்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது. நகரங்களில் ராஜமுந்திரியை ராஜ மகேந்திரபுரம் எனவும், அவுட்டர் வீலர் தீவை அப்துல் கலாம் தீவு எனவும் மாற்ற அனுமதி அளித்துள்ளோம்.
குறிப்பாக கேரளா, அரியானா, நாகாலாந்து உள்ளிட்ட பல மாநிலங்களில் பெயர் மாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்ட அலகாபாத் நகரை பிரயாக் ராஜ் என மாற்றவும், ஃபைசாபாத் மாவட்டத்தை அயோத்யா மாவட்டம் எனவும் மாற்ற இன்னும் உ.பி. அரசு பரிந்துரை அனுப்பவில்லை -ஆனாலும் பெயர் மாற்றம் நடந்துள்ளது.
தற்போது மேற்கு வங்க மாநிலத்தில் பங்களா என மாற்றும் பரிந்துரை நிலுவையில் உள்ளது. அண்டை நாடான வங்க தேசத்துக்கு பங்களா என பெயர் உள்ளதால் இதற்கு அனுமதி வழங்கு வதில் சிக்கல் உள்ளது. நாகாலாந்தில் உள்ள திம்மபூர் மாவட்டத்தில் உள்ள ஊரான கசாரிகயான் என்னும் ஊரை பீவிமா என மாற்ற அனுமதி அளிக்கப் படவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் அகமதாபாத்தை கர்னாவதி என மாற்ற அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.  வட இந்தியாவில் மட்டும் தான் இதுபோன்று செய்வீர்களா எனக் கிளம்பி, தெலங்கானா மாநிலத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அய்த ராபாத் என்னும் பெயரை பாக்யாநகர் என மாற்று வோம் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராஜாசிங்  பேசியுள்ளார்.
இந்த விவகாரம் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இஸ்லாமிய பெயர்கள் இந்து பெயர்களாக மாற்றப்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்த நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரபல வரலாற்று ஆய்வாளர் இர்ஃபான் ஹபீப், "அமித்ஷா என்பதே இந்துப் பெயரோ சமஸ்கிருதப் பெயரோ இல்லை. அதை முதலில் மாற்ற வேண்டும்" எனக் கருத்துத் தெரிவித்துள்ளார். மேலும் அவர்,  "நகரங்களுக்குப் பெயர் மாற்றும் பாஜகவின் இந்த செயல் ஆர்எஸ்எஸின் கொள்கை. அதன்படி பார்த்தால் இஸ்லாமிய பெயர்களுக்கு இங்கு இடமில்லை.
ஷா என்பது பெர்சிய இஸ்லாமிய பெயராகும். பார்சி மக்கள் இஸ்லாத்தை விட்டு பார்சி என்ற புதிய மதத்தை ஏற்றுக்கொண்டாலும் அந்த மொழியில் அவர்கள் பெயர் வைப்பதை மாற்றவில்லை. அது தங்களின் கலாச்சாரம் என்று கூறிவருகின்றனர். அப்படிப் பார்த்தால் அமித் ஷா என்பதே பெர்சிய மொழிப் பெயர் தான். அது சமஸ்கிருதப் பெயர் இல்லை. நகரங்களின் பெயரை மாற்றும் அவர்கள் முதலில் அமித் ஷா பெயரை மாற்ற வேண்டும்" என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வணிக நிறுவனங்களில் விளம்பரப் பலகைகளில் தமிழ் இடம் பெற வேண்டும் என்று சொன்னால், அதற்காக சென்னைப் பெரு நகர மேயர் முயற்சி செய்தால், மொழி நக்சலிசம் என்று எழுதிய பார்ப்பனத் 'துக்ளக்' வகையறாக்கள் இப்பொழுது பிஜேபி ராஜ்ஜியத்தில் சகட்டுமேனிக்கு மதப் பின்னணியோடு - சமஸ்கிருத மயமாக்கும் நோக்கத்தோடும் பெயர்கள் மாற்றப்படுகின்றனவே - இதற்குப் பதில் என்ன?
இது மொழி நக்சலிசம் இல்லையா?

பதில் சொல்லுமா பா.ஜ.க. ஆட்சி?


* 2017 பிப்ரவரி முதல் விவசாயிகளின் தற்கொலை விவரங்களை மத்திய அரசு வெளியிடாதது - ஏன்?
* ஆண்டுக்கு 2 கோடி பேர்களுக்கு வேலை என்ற மோடியின் உத்தரவாதம் செயல்படுத்தப்படாதது - ஏன்?
* உற்பத்தி செலவுக்கு மேல் 150 விழுக்காடு ஆதார விலை நிர்ணயிக்கப்படும் என்ற மோடி அரசின் அறிவிப்பு என்னாயிற்று?
* தேசிய விவசாயச் சந்தை உருவாக்கப்படும் என்ற 2014 - பி.ஜே.பி. தேர்தல் அறிக்கையில் கொடுத்த உறுதிமொழி என்னாயிற்று?
* ஜி.எஸ்.டி. வரியால் வர்த்தகங்களில் 43 சதவிகிதம் சரிந்திருக்கிறதா இல்லையா? தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் 32 விழுக்காடு வேலை வாய்ப்பு பறிபோயிருக்கிறதா இல்லையா?
சிறுதொழில்களில் 35 விழுக்காடு, குறுந்தொழில்களில் 24 விழுக்காடு வேலை வாய்ப்புகள் இழப்பு ஏற்பட்டுள்ளதா? இல்லையா?
* மோடி ஆட்சியில் 53 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வங்கிக் கடன்களை அடைக்காமல் வெளிநாடுகளுக்குச் சென்ற 23 பேர்கள் சொகுசாக வாழ்கிறார்களா? இல்லையா?
* மோடி ஆட்சியில் கடந்த அய்ந்து ஆண்டுகளில் வங்கிக் கடன் ஊழல்கள் ரூ.61,620 கோடி என்பது எதைக் காட்டுகிறது?
* ரூ.2.38 இலட்சம் கோடி வாராக் கடன் - மோடியின் 5 ஆண்டு ஆட்சியில் ரூ.12 இலட்சம் கோடியாக வளர்ந்திருக்கிறதே - ஒருக்கால் இதைத்தான் நரேந்திர தாமோதரதாஸ் மோடி வளர்ச்சி என்கிறாரோ?
* தேசிய மயமாக்கப்பட்ட 21 பொதுத் துறை வங்கிகளில் 19 வங்கிகள் நட்டக் கணக்குக் காட்டியுள்ளனவே - இதுதான் மோடி ஆட்சியின் நிர்வாக இலட்சணமா? (குறிப்பு: இந்த நட்டத்தை ஈடுகட்ட மத்திய அரசு ரூ.2.70 லட்சம் கொடுத்து உதவியுள்ளது).
* பசு பாதுகாப்பு என்ற பெயரால் 118 இஸ்லாமியர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் கொல்லப்பட்டது தான் மோடி அரசின் மனித உரிமைப் பாதுகாப்பா?
* குஜராத்தில் வல்லபாய் பட்டேலுக்கு ரூ.2,989 கோடி செலவில் 182 மீட்டர் சிலையை அரசு செலவில் நிறுவியதால், மக்களுக்கு என்ன லாபம்?

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...