பாஜக
ஆட்சிக்காலம் முடியும் இறுதிக்காலத்தில் நாடெங்கும் பல ஊர்களின் பெயர்கள்
மாற்றப் பட்டு வருகின்றன. இவ்வாறு நகரங்கள் மற்றும் கிராமங்களின் பெயர்களை
மாற்ற அந்தந்த மாநில அரசுகள் பரிந்துரை அளிக்க வேண்டும். பெயர்
மாற்றத்துக்கு ரயில்வே, அஞ்சல்துறை, மக்கள் கணக்கெடுப்புத் துறை ஆட்சேபம்
தெரிவிக்கவில்லை எனில் மத்திய அரசு அனுமதி அளிக்கிறது. மாநிலங்களின் பெயரை
மாற்ற நாடாளுமன்ற தீர்மானத்தின்மீது வாக்கெடுப்பு நடத்தி, அரசியல் சாசன
திருத்தம் செய்து மாற்றப்படுகிறது. இந்த நிலையில் எந்த ஒரு ஆலோசனை மற்றும்
முன் அறிவிப்பு இன்றி கடந்த ஓராண்டில் மட்டும் 25 ஊர்களுக்குப் பெயர்
மாற்றம் செய்ய மத்திய மோடி அரசு அனுமதித்துள்ளது.
இப்பெயர்
மாற்றம் குறித்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர், "நாடு
முழுவதும் கடந்த ஓராண்டில் மட்டும் 25 ஊர்களின் பெயர் மாற்றத்துக்கு
மத்திய அரசு அனுமதித்துள்ளது. நகரங்களில் ராஜமுந்திரியை ராஜ மகேந்திரபுரம்
எனவும், அவுட்டர் வீலர் தீவை அப்துல் கலாம் தீவு எனவும் மாற்ற அனுமதி
அளித்துள்ளோம்.
குறிப்பாக
கேரளா, அரியானா, நாகாலாந்து உள்ளிட்ட பல மாநிலங்களில் பெயர் மாற்ற அனுமதி
அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்ட அலகாபாத் நகரை பிரயாக் ராஜ்
என மாற்றவும், ஃபைசாபாத் மாவட்டத்தை அயோத்யா மாவட்டம் எனவும் மாற்ற
இன்னும் உ.பி. அரசு பரிந்துரை அனுப்பவில்லை -ஆனாலும் பெயர் மாற்றம்
நடந்துள்ளது.
தற்போது
மேற்கு வங்க மாநிலத்தில் பங்களா என மாற்றும் பரிந்துரை நிலுவையில்
உள்ளது. அண்டை நாடான வங்க தேசத்துக்கு பங்களா என பெயர் உள்ளதால் இதற்கு
அனுமதி வழங்கு வதில் சிக்கல் உள்ளது. நாகாலாந்தில் உள்ள திம்மபூர்
மாவட்டத்தில் உள்ள ஊரான கசாரிகயான் என்னும் ஊரை பீவிமா என மாற்ற அனுமதி
அளிக்கப் படவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
குஜராத்தின்
அகமதாபாத்தை கர்னாவதி என மாற்ற அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. வட
இந்தியாவில் மட்டும் தான் இதுபோன்று செய்வீர்களா எனக் கிளம்பி, தெலங்கானா
மாநிலத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அய்த ராபாத் என்னும் பெயரை
பாக்யாநகர் என மாற்று வோம் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராஜாசிங்
பேசியுள்ளார்.
இந்த
விவகாரம் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக
இஸ்லாமிய பெயர்கள் இந்து பெயர்களாக மாற்றப்படுவதாக
குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்த நிலையில், இது குறித்து கருத்து
தெரிவித்துள்ள பிரபல வரலாற்று ஆய்வாளர் இர்ஃபான் ஹபீப், "அமித்ஷா என்பதே
இந்துப் பெயரோ சமஸ்கிருதப் பெயரோ இல்லை. அதை முதலில் மாற்ற வேண்டும்" எனக்
கருத்துத் தெரிவித்துள்ளார். மேலும் அவர், "நகரங்களுக்குப் பெயர்
மாற்றும் பாஜகவின் இந்த செயல் ஆர்எஸ்எஸின் கொள்கை. அதன்படி பார்த்தால்
இஸ்லாமிய பெயர்களுக்கு இங்கு இடமில்லை.
ஷா
என்பது பெர்சிய இஸ்லாமிய பெயராகும். பார்சி மக்கள் இஸ்லாத்தை விட்டு
பார்சி என்ற புதிய மதத்தை ஏற்றுக்கொண்டாலும் அந்த மொழியில் அவர்கள் பெயர்
வைப்பதை மாற்றவில்லை. அது தங்களின் கலாச்சாரம் என்று கூறிவருகின்றனர்.
அப்படிப் பார்த்தால் அமித் ஷா என்பதே பெர்சிய மொழிப் பெயர் தான். அது
சமஸ்கிருதப் பெயர் இல்லை. நகரங்களின் பெயரை மாற்றும் அவர்கள் முதலில்
அமித் ஷா பெயரை மாற்ற வேண்டும்" என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில்
வணிக நிறுவனங்களில் விளம்பரப் பலகைகளில் தமிழ் இடம் பெற வேண்டும் என்று
சொன்னால், அதற்காக சென்னைப் பெரு நகர மேயர் முயற்சி செய்தால், மொழி
நக்சலிசம் என்று எழுதிய பார்ப்பனத் 'துக்ளக்' வகையறாக்கள் இப்பொழுது
பிஜேபி ராஜ்ஜியத்தில் சகட்டுமேனிக்கு மதப் பின்னணியோடு - சமஸ்கிருத
மயமாக்கும் நோக்கத்தோடும் பெயர்கள் மாற்றப்படுகின்றனவே - இதற்குப் பதில்
என்ன?
இது மொழி நக்சலிசம் இல்லையா?
No comments:
Post a Comment