விரும்பாத மாநிலங்களில் 'நீட்' ஒழிக்கப்படும்
மாநிலப் பட்டியலில் கல்வி!
மாநிலப் பட்டியலில் கல்வி!
புதுடில்லி, ஏப்.2 'நீட்' தேர்வு விரும்பாத மாநிலங்களில் 'நீட்' தேர்வு ஒழிக்கப்படும் என்பது உட்பட பல முக்கிய அம்சங்களைக் கொண்ட தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டில்லியில் இன்று (2.4.2019) வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:
*ஓராண்டாக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்றது. மக்களின் கருத்தை கேட்டு அறிந்து தேர்தல் அறிக்கை தயாரிக்க கூறியிருந்தேன் .
*ஒரு பொய் கூட தேர்தல் அறிக்கையில் இருக்க கூடாது என்றும் அறிவுறுத்தினேன். தினமும் பிரதமர் பல பொய்களை பேசி வருகிறார், நாங்களும் பொய் சொல்ல விரும்பவில்லை.
*5 பெரிய திட்டங்களை கொண்டு காங். தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது
*நியாய் (NYAY) திட்டத்தின் கீழ் ஏழைக்குடும்பங்களுக்கு மாதந்தோறும் ரூ. 6000. இந்த தொகையானது குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
*2030க்குள் நாட்டில் இருந்து வறுமை முழுமையாக நீக்கப்படும்
*விவசாயத்திற்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்
*100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த் தப்படும்
*தீவிரவாதத்தை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்
*இளைஞர்கள் தொழில் தொடங்கும் போது 3 ஆண்டு களுக்கு லைசென்ஸ் பெற தேவையில்லை
*மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள 22 லட்சம் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்
*விவசாயிகள் அவர்கள் வாங்கிய கடனை திரும்ப செலுத்தவில்லை என்றால் அது கிரிமினல் குற்றமாக கருதப்படாது.
*நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்
*தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து. தமிழகத்தில் மட்டுமில்லை எந்தெந்த மாநிலங்களில் நீட் தேர்வு எதிர்க்கப்படுகிறதோ அந்த மாநிலங்களில் நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும். அதற்கு மாற்றாக மாநில அளவில் தேர்வுகள் நடத்தப்படும். கல்வி மாநிலப் பட்டியலுக்கு வரும்.
*ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசல் விலை கொண்டு வரப்படும். புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்
*தென் இந்தியா மக்களுடன் நாங்கள் உள்ளோம் என காண்பிக்கவே வயநாட்டில் போட்டியிட உள்ளேன்.
No comments:
Post a Comment