சென்னை,
ஏப். 1 நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை
எட்டியுள்ளது. அனைத்துக் கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில்
ஈடுபட்டுள்ளனர். முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர் தல் நடை பெறும்
தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் முடிந்துவிட்டது. மற்ற இடங்களுக்கான
வேட்பாளர்கள் தேர்வும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள், மீண்டும் மோடியை
ஆட்சி யில் அமரவைப்பார்களா அல்லது ராகுலுக்கு ஒரு வாய்ப்பு வழங்கு வார்களா
என விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில்,
இந்தியாவின் பல் வேறு பகுதிகளில் இருந்து, சுமார் 100 திரைப்பட
இயக்குநர்கள் ஒன்றாக நாட்டு மக்களுக்கு ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
அவர்களின் கோரிக்கை, ஆளும் பா.ஜ.க கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள் ளது. அந்தக் கூட்டறிக்கையில், பா.ஜ.க-. வை ஆட்சியில்
இருந்து அகற்றும்படி கோரிக்கை விடுத்துள்ள னர். இந்த இயக்குநர்கள்
பட்டியலில், வெற்றி மாறன், கோபி நயினார், திவ்யா பாரதி, சனல்குமார், ஆனந்த்
பட்வர்தன் உள்ளிட்டவர்கள் உள்ளனர்.
நாட்டு மக்களுக்கு
ஒரு கோரிக்கை
இது
தொடர்பாக அவர்கள் இணையத்தில், `நாட்டு மக்களுக்கு ஒரு கோரிக்கை என்ற
தலைப்பில் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், ``நமது நாடு தற்போது சோதனையான
காலகட்டத்தில் இருக்கிறது. கலாச்சார ரீதியாகவும், புவியியல் ரீதியாகவும்
நாம் பிரிந்திருந்தாலும், ஒரு நாடாக நாம் இணைந்து இருக்கிறோம். அதுவே இந்த
நாட்டின் குடிமகன் களான நமக்கு நல்ல உணர்வைத் தருகிறது.
பாசிசம் கடுமையாக தாக்கும்
ஆனால்,
தற்போது அவையெல் லாம் வெறும் வார்த்தையாகத்தான் இருக்கிறது. வருகின்ற
நாடாளுமன்றத் தேர்தலில், நாம் சரியாக செயல் படாமல் போனால், பாசிசம் நம்மை
கடுமையாகத் தாக்கும். மதரீதியாக நாடு செல்வது என்பது நாம் கேட் டிராத
இந்தியா. பா.ஜ.க தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
அவர்கள் கும் பல் மற்றும் மாட்டு அரசியல் மூல மாகவும் நாட்டில் பிரிவினையை
ஏற்படுத்துகிறார்கள். இவர்களின் ஆட்டத்தில் தலித்துகள் மற்றும் இசு
லாமியர்கள் ஓரங்கப்பட்டுகிறார்கள். இணையதளம் மற்றும் சமூகவலை தளம் மூலம்
தங்களின் வெறுப்பு அரசியலை அவர்கள் பரப்புகிறார்கள்.
தேசபக்தி
என்பதுதான் அவர்களின் துருப்புச் சீட்டு. யாராவது அவர் களுக்கு எதிராகச்
செயல்பட்டால், அவர்களை தேசத் துரோகிகள் என்பார்கள். தேசபக்தி என்ற ஒன்றைச்
சொல்லி, அவர்கள் வாக்குவங்கியை ஏற்படுத்தியுள்ளனர். இவர்களின்
அதிருப்தியால், நாம் சில எழுத்தாளர் களையும், படைப்பாளர்களையும்,
ஊடகவியலாளர்களையும் இழந்திருக் கிறோம். அதனை நாம் மறந்துவிடக் கூடாது.
ராணுவத்தைப்
பயன்படுத்துவதும் அவர்களின் திட்டங்களில் ஒன்று. தேவையில்லாத போர்மூலம்
நாட்டை ஆபத்தில் வைப்பார்கள். தேசிய நிறு வனங்களில், அந்த நிறுவனத்துக்குத்
தொடர்பில்லாத நபர்களைத் தலை மையிடத்தில் அமரவைத்து, உலகமே நம்மைப்
பார்த்து சிரிக்கும்படி செய் கிறார்கள். திரைப்படங்கள் மற்றும்
புத்தகங்களுக்குத் தடை விதிப்பது மற்றும் தணிக்கை செய்தல் போன்ற நடவடிக்
கைகள்மூலம் மக்களுக்கு உண்மை தெரியாதபடி பார்த்துக் கொள்கிறார்கள்.
இதுவே உங்களுக்கு கிடைத்த கடைசி வாய்ப்பு
விவசாயிகளை
மறந்தே விட்டார்கள். பா.ஜ.க, இந்தியாவின் வளங்களை, சொத்துகளைத் தொழி
லதிபர்களுக்கு வசதியாக வழங்கி யுள்ளது. இவர்களின் மோசமான பொருளாதார
கொள்கையினால் ஏற்பட்ட பெரும் பேரழிவுகளை, மூடிமறைத்து, வெற்றிபெற்றதுபோல
ஜோடிக்கிறார்கள். பொய்யான பரப் புரைகள் மூலம், இதனை அவர்கள்
சாத்தியமாக்குகிறார்கள். இதன்மூலம் அவர்கள், நாட்டில் பொய்யான அல் லது
தவறான நம்பிக்கையை ஏற் படுத்தியிருக்கிறார்கள்.
வரலாறு
மற்றும் புள்ளியியல் களை அவர்களுக்குத் தேவையானது போல மாற்றுவார்கள்.
இன்னும் ஒருமுறை அவர்களுக்கு அதிகாரம் வழங்கினால், அது மிகப்பெரிய தவ றாக
அமைந்துவிடும். உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்தை சவப்பெட்டி யில் வைத்து
அடிக்கும் கடைசி ஆணியாக அது இருக்கும்.
இந்த
ஆபத்தான ஆட்சி மீண்டும் அதிகாரத்துக்கு வராமல் இருக்க, உங்களால்
முடிந்ததைச் செய்யுங்கள்'' என்று கேட்டுக்கொள்கிறோம். இந் திய
அரசியலமைப்பின்படி, உங் களின் அரசாங்கத்தைத் தேர்வு செய் யுங்கள். அந்த
அரசாங்கம், நமது பேச் சுரிமையை, கருத்துரிமையை வழங்கு வதாக இருக்க
வேண்டும். ஆம்... இதுவே உங்களின் கடைசி வாய்ப்பு! என
குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் கீழ் 103 இயக்குநர்கள் கையொப்ப மிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment