அரசியல் சாசன அமைப்புகள், தன்னாட்சி நிறுவனங்கள், நரேந்திர மோடி என்ற பாசிச மன்னராட்சியில்' காயடிக்கப்பட்டு வருகின்றன.
நான் நான்' என்னும் தன்னகங்காரம் தலைக்கு ஏறிய நிலையில், இவ்வமைப்புகள் ஒவ்வொன்றையும் தன் கட்டை விரலுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று கருதியதால், சுயமரி யாதை உள்ள அந்த நிபுணர்கள் எல்லாம் ஒரு கால் கடுதாசியில் விலகல் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு விலகி ஓடினார்கள்.
பண மதிப்பிழப்பு அறிவிப்புக்கூட ரிசர்வ் வங்கியின் ஆளுநருக்குத் தெரிவிக்கப்படவில்லை.
ஆட்சியின் ஆர்.எஸ்.எஸ். கரம் ரிசர்வ் வங்கிக்குள் இருக்க வேண்டும் என்பதற்காக திருவாளர் குருமூர்த்தி அய்யர் இயக்குநராக ரிசர்வ் வங்கிக்குள் நுழைக்கப்பட்டார்.
ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த ரகுராம் ராஜன், உம்மிடம் யார் பணியாற்றுவார்கள்?' என்று கூறி, பதவியைத் தூக்கி எறிந்து அமெரிக்கா பறந்துவிட்டார்.
அடுத்து தனக்கு மிகவும் வேண்டிய சகாவான - ரிலையன்ஸ் நிறுவனத்தில் உயர் பதவியிலிருந்த உர்ஜித் பட்டேலை அந்த இடத்தில் அமர்த்தினார். ரிசர்வ் வங்கியிலிருந்து ஈவுத் தொகை கேட்ட விவகாரத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
பார்த்தார் அவர், இவர் சரிப்பட்டு வரமாட்டார் என்று முடிவு செய்து பதவி நாற்காலியைக் காலி செய்தார்.
இந்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்பிரமணியமோ மோடியின் அணுகுமுறையின் அவலத்தைக் கண்டு நடையைக் கட்டினார். நிதி ஆயோக்கின் தலைவர் அரவிந்த் பனகாரியா பாய்' சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
இந்தியப் புள்ளியியல் ஆணையத்திலும் தன் நாட்டாண் மையைக் காட்டினார் மோடி என்னும் ஹிட்லர். அவ்வளவுதான், ஆணையத்தின் செயல் தலைவர் பி.சி.மோகனன், உறுப்பினர் ஜே.வி.மீனாட்சி இருவரும் டாட்டா' காட்டி வெளியேறினர்.
எந்தக் காலத்திலும் நிகழாத ஒரு நிகழ்வு - உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் நால்வர் (18.1.2018) நீதிபதி செலமேஷ்வர் தலைமையில், நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், மதன்பிலோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்து மத்திய அரசின் தலையீட்டை அம்பலப்படுத்தினர்.
சி.பி.அய். இயக்குநர்கள் மோடியின் தர்பாரில் அசிங்கப் பட்டதுதான் மிச்சம்.
இந்தியாவின் மரியாதை மோடி ஆட்சியில் கப்பலேறி விட்டது.
இந்த ஆட்சி மீண்டுமா?
தாங்காதப்பா தாங்காது! உஷார்! உஷார்!!
No comments:
Post a Comment