Thursday, April 4, 2019

15 ஆண்டுகால ஒப்பந்தத்தால் தமிழக மின்வாரியத்துக்கு ரூ.65 ஆயிரம் கோடி இழப்பு ஏப்.10 வரை முடிவு எடுக்க உயர்நீதிமன்றம் தடை



தமிழக மின்வாரியத்துக்கு  2014இல் இருந்து 15 ஆண்டுகளுக்கு சில ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. இதனால் ரூ.65 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என தொடரப் பட்ட வழக்கில், மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம் ஏப். 10 வரை எந்த முடிவும் எடுக் கக்கூடாது என உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.
மதுரை சம்பக்குளத்தை சேர்ந்த வழக்குரைஞர் நிர்மல் குமார், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழ்நாடு மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தில் 3 உறுப்பினர்கள் இருக்க வேண் டும். இந்த ஆணையம் மின்சாரம் உற்பத்தி, விநியோகம், கொள் முதல் தொடர்பான பிரச்சினை களை தீர்த்து வைக்கிறது. இந்த ஆணையத்தில் 3 உறுப்பினர்களில் ஒருவர் உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியாக இருக்க வேண்டும் என 12.4.2014இல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால் தமிழக மின்வாரிய ஒழுங்குமுறை ஆணைய உறுப்பி னராக ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிப்பதில்லை. மின்வாரியத் தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அதிகாரிகளையே உறுப்பினர் களாக நியமிக்கின்றனர். இது உச்சநீதிமன்ற உத்தரவுக்கு விரோ தமானது. தமிழ்நாடு மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒரு உறுப்பினர் ஓய்வு பெற்ற நிலையில், அவரது இடத்துக்கு புதிய உறுப்பினரை தேர்வு செய்வது தொடர்பாக மின் வாரியம் 5.2.2019இல் அரசாணை பிறப்பித்துள்ளது.
இந்த அரசாணையை ரத்து செய்து, அந்த காலியிடத்துக்கு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதி பதி ஒருவரை நியமிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இதேபோல், மின்வாரிய ஒழுங்குமுறை ஆணைய முன்னாள் உறுப்பினரான சென் னையை சேர்ந்த நாகல்சாமி என்பவரும், தன்னை வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்கள்  நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசார ணைக்கு வந்தது. அப்போது நாகல்சாமி, “2014இல் ஒழுங்கு முறை ஆணையம் எடுத்த சில ஒப் பந்தங்கள், தமிழக மின் வாரியத்திற்கு  2014இல் இருந்து 15 ஆண்டுகளுக்கு  போடப்பட் டுள்ளது.
அதனடிப்படையில் தமிழக மின்வாரியத்திற்கு ரூ.65 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும். நான் அதை ஏற்றுக் கொள்ள வில்லை. ஆனால் என்னுடைய ஒப்புதலின்றி மற்ற இரு உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்ததன் பேரில் அந்த ஒப்பந்தங்கள் போடப்பட் டுள் ளனஎன்றார்.
இதனையடுத்து நீதிபதிகள், தமிழக மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம் வரும் ஏப்ரல் 10 வரை எவ்விதமான முடிவு களையும் எடுக்கக்கூடாது என் றும், மனுதாரர் நாகல்சாமிக்கு உரிய பாதுகாப்பு வழங்க, தமிழக காவல்துறை தலைவருக்கு உத்தரவிட்டும் விசாரணையை ஏப்ரல் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...