‘‘மனிதனை விண் வெளிக்கு அனுப்பும்
ககன்யான் திட்டத் தின் முதல் கட்டமாக ஆளில்லா விண்க லத்தை அனுப்பும் சோதனை
வரும் டிசம்பரில் நடத்தப்படும்’’ என இஸ்ரோ தலைவர் கே.சிவன்
தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறியதாவது:
ககன்யான் திட்டம் மனிதனை விண்வெளிக்கு
அனுப்பும் இந்தியாவின் முதல் திட்டம் மட்டுமல்ல, புதிய விண்வெளி ஆய்வு
மய்யத்தை அமைத்து அங்கு தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற் கொள்வதை
சாத்தியமாக்கும் முயற்சியும் கூட. ககன்யான் திட்டத்தில் 2 முறை ஆளில்லா
விண்கலத்தை அனுப்பி சோதனை மேற்கொள்ளப்படும். இதில் முதல் சோதனை வரும்
டிசம்பர் மாத மும், அடுத்த சோதனை 2021 ஜூனிலும் நடத்தப்படும். அதைத்
தொடர்ந்து, 2021 டிசம்பரில் விண்வெளிக்கு மனிதனை அனுப்பி வைப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில்,
‘‘விண்வெளிக்கு அனுப்ப 4 விண்வெளி வீரர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இந்த மாத இறுதிக்குள் ரஷ்யா சென்று பயிற்சி பெற உள்ளனர். ககன் யான்
விண்கலம் வடிவமைப்பு பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது. இந்த
ஆண்டில் பல்வேறு பரிசோதனை முயற்சிகள் சோதித்து பார்க்கப்பட உள்ளது,’’
என்றார்.
ககன்யான் திட்டத்தின் மூலம் விண் வெளிக்கு
செல்லும் 4 பேரும் இந்திய விமானப்படை வீரர்கள் ஆவர். இத்திட் டத்தில்
பெண்கள் இல்லை என்பது சிறிய குறையாக இருந்தது. அது தற் போது நிவர்த்தி
செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் மனிதர்களுக்கு உதவ, மனிதனைப் போலவே ரோபோ
ஒன்று வடிவமைக்கப்பட்டு உள்ளது. ‘வியோம் மித்ரா’ என்ற அந்த ரோபோ ஒரு பெண்.
இந்த பெண் ரோபோ விண்கலத்தில் வீரர்களுக்கு உதவிகரமாக பல்வேறு பணிகளை
செய்யும் வகையில் வடிவ மைக்கப்பட்டு உள்ளது. இது, 2 மொழி கள் பேசக்கூடியது.
மேலும், விண் வெளிக்கு வீரர்களுடன் செல்வது மட்டு மின்றி, ஆளில்லா
விண்கலம் அனுப்பப் படும் சோதனைகளிலும் ‘வியோம்மித்ரா’ இடம் பெற்றிருக்கும்
என கே.சிவன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment