குடியுரிமை திருத்தச் சட்டத் துக்கு எதிராக கேரளா சட்ட சபையில் முதன் முத லாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரசியல் சாசனத்துக்கு எதிரான குடியுரிமை திருத் தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற அந்த தீர் மானம் வலியுறுத்தியது. இதனைத் தொடர்ந்து பஞ்சாப் சட்டசபையிலும் குடி யுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறை வேறியது.
இந்நிலையில் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநில சட்டசபையிலும் குடியு ரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான தீர்மானம் (25.1.2020) அன்று நிறைவேற்றப்பட்டது.
குடியுரிமை சட்டம் குறித்த மனுக்களுக்கு பதில ளிக்க மத்திய அரசுக்கு நான்கு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலை யில், மூன்றாவது மாநிலமாக காங்கிரஸ் ஆளும் ராஜஸ் தான் மாநிலத்திலும் குடியு ரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது குறிப் பிடத்தக்கது.
No comments:
Post a Comment