சர்க்கரை நோயாளிகளில் சிலர், இடுப்பில்
இன்சுலின் பம்பு கருவியை அணிய வேண்டியிருக்கும். அந்தக் கருவியில்
இருக்கும் இன்சுலின் திரவம் ஓரிரு நாட்களில் கெட்டி தட்டி, பம்பு அடைத்துக்
கொள்ளும் அபாயம் உண்டு.
இதை தடுக்க, அறை வெப்பத்தில் இரண்டு
நாட்களுக்கு மேல் தாக்குப் பிடிக்கும் இன்சுலின் திரவத்தை தயாரிக்க
கிளம்பினர், ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பானிய விஞ்ஞானிகள். கூடவே ஒரு போனசாக,
அத்தகைய இன்சுலினை கோழி முட்டையிலிருந்தே தயாரிக்க முடியும் என்பதையும்
அவர்கள் கண்டறிந்து உள்ளனர்.
மெல்போனிலுள்ள புளோரி இன்ஸ் டிடியூட்
மற்றும் ஓசாகா பல்கலைக் கழக விஞ்ஞானிகள், முட்டையிலிருந்து தயா ரித்த
இன்சுலின், ஆறு நாட்கள் வரை கெட்டி தட்டாமல் தாக்குப் பிடிக்கிறது.
'கிளைகோ இன்சுலின்' என்று பெயரி
டப்பட்டுள்ள இந்த மருந்தால், பல கோடி ரூபாய் விரயம் தவிர்க்கப்படும்.
மேலும், தீவிர சர்க்கரை நோயாளிகளுக்கு, பம்பு அடைத்துக் கொள்ளாமல், அதிக
நாட்கள் இன்சுலினை பயன்படுத்தவும் முடியும்.
தற்போது வெற்றிகரமாக சோத னையை முடித்துள்ள
விஞ்ஞானிகள், விரைவில் பெரிய அளவில் கோழி முட் டை இன்சுலினை தயாரிக்க,
ஏற்பாடு களை செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment