ஹைட்ரோகார்பன் திட்டம்பற்றி மக்கள் கருத்து கேட்கக் கூடாது என்பதா?
மயிலாடுதுறை, ஜன.27, சுற்றுச்சூழல் துறை
அனுமதி பெறாமல், கருத்து கேட்காமல் எண்ணெய் கிணறுகளை காவிரி படுகையில்
அமைக்க லாம் என்று 2016இல் சுற்றுச்சூழல் அறிவிக்கையில் திருத்தம்
செய்துள்ளது.
இப்போது தமிழக அரசு இந்த அபாயகர திட்டம்
வேண்டாம் என்று கடிதம் எழுதுவதற்கு பதிலாக இப் போது நீங்கள் செய்த
திருத்தத்தில் இருந்து விலக்கு கொடுங்கள் என்று முதல்வர் எடப்பாடி
பழனிச்சாமி கடி தம் எழுதியுள்ளார். கருத்து கேட்பு எடுக்க வேண்டாம் என்று
மட்டுமே கூறியுள்ளார்.
காவிரி படுகை காணாமல் போனால் ஒரு உருண்டை
சோற்றுக்கு கையேந்தும் நிலை வரும் என்று எச்சரிக்கை செய்யும் வகையில்
இன்று மயிலாடுதுறையில் போராட் டம் நடைபெறுகிறது.
மத்திய அரசு தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன்
திட் டத்தை கைவிடு, தமிழக அரசிடம் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டத்தை
ஒட்டுமொத்தமாக நிராகரி என்று கோரிக்கை வைக்கி றோம். காவிரிப் படுகையை
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். ஏனென்றால்,
தமிழகத்தின் உணவுப் பாது காப்பை அது தான் காப் பாற்றும். படுகை அழிந்தால்
தமிழகம் காணாமல் போகும். 5ஆவது சுற்று ஏலம் முடிந்து கடலில் கிணறு
அமைத்தால் மீனவர்கள் மீன்பிடி தொழிலை கைவிட வேண்டிய நிலை ஏற் படும்.
ஏனென்றால் மீன்கள் இறந்து போகும், இல்லை யெனில் மீன்கள் இடம் பெயர்ந்து
விடும். காவிரிப் படுகையை வேளாண் மண்ட லமாக அறிவிக்க கோரி நாங்கள் கடந்த
2013 முதல் வலியுறுத்தி வருகி றோம். உலகம் முழுவதும் பாதுகாப்பு வேளாண்
மண்டலம் இருக் கிறது. ஆனால், அரசுக்கு என்ன தயக்கம் இருக்கிறது என்று
தெரியவில்லை.
தடைமீறி போராட்டம்
மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு
சார்பில் ஹைட் ரோகார்பன் திட்டத்தை கைவிட வலி யுறுத்தி இன்று முதல் தொடர்
போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப் பட்டது.
இதையொட்டி மயிலாடு துறை சின்னக் கடைவீதியில் இன்று மாலை கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடக் கிறது.
இதற்கான துண்ட றிக்கை பொது மக்களிடம் நேற்று விநியோகித்தனர்.
ஆர்ப்பாட்டம் நடத்து வதற்கு
காவல்துறையினரிடம் அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் நேற்று இரவு வரை அனுமதி
தரப்படவில்லை. காவல்துறையினர் அனுமதிக் காவிட்டால் தடையை மீறி ஆர்ப்பாட்டம்
நடத் தப்படும் என்று கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment