Friday, May 10, 2019

44 வாக்குச்சாவடிகளின் ஒப்புகைச்சீட்டுகளை எண்ண தேர்தல் ஆணையம் உத்தரவு: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

 தமிழகத்தில் 12 மக்களவைத் தொகுதிகளுக்குள்பட்ட 44 வாக்குச்சாவடிகளின் ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களில் உள்ள சீட்டுகளை எண்ணுவதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருப்பதாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு கூறினார்.
இந்த 44 வாக்குச் சாவடிகளில் மட்டும் ஒப்புகைச்சீட்டுகளில் உள்ள சின்னங்களை எண்ணிய பிறகே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் சத்யபிரத சாகு வியாழக் கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறை யாகச் செயல்படுகிறதா என்பதைப் பரிசோதிப்பதற்காக தேர்தல் அதிகாரிகள் மாதிரி வாக்குப்பதிவு நடத்தினர். அதில் 44 வாக்குச்சாவடிகளில் மாதிரி வாக் குப்பதிவு நடத்தியதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் அந்த வாக்குகளை அழிக்காமல், ஒப் புகைச்சீட்டு இயந்திரங்களில் விழுந்த சீட்டுகளை மட்டும் எடுத்து விட்டனர். இந்த 44 வாக்குச்சாவடிகளில் மட்டும் ஒப்புகைச்சீட்டு இயந்திரங் களில் உள்ள சீட்டுகளை  எண்ணுவ தற்குத் தேர்தல் ஆணையம் உத்தர விட்டுள்ளது.
பொதுவாக, ஒரு மக்களவைத் தொகுதியில் உள்ள ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் 5 வாக்குச்சாவடிகளில் ஒப்புகைச் சீட்டு களை எண்ண வேண்டும் என்பதுதான் விதி. ஆனால், இந்த 44 வாக்குச் சாவடிகளிலும் ஒப்புகைச் சீட்டுகளை மட்டும்தான் எண்ண வேண்டும். இதிலும் ஏதேனும் அரசியல் கட்சிகள்  சந்தேகம் எழுப்பினால், தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவித்து, அதற்கேற்ப அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் சத்யபிரத சாகு.
மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. மறுவாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளிலும் மே 23-ஆம் தேதியே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார். அதேபோல்,  44 வாக்குச்சாவடிகளிலும்  ஒப்புகைச்சீட்டுகள் மே 23-ஆம் தேதியே எண்ணப்பட உள்ளன.
44 வாக்குச்சாவடிகள்:  வடசென்னை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சேலம், பெரம்பலூர்,  கடலூர்,  தஞ்சாவூர்,  தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகப் பட்டினம், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 12 மக்களவைத் தொகுதிகளுக்குள் பட்ட 44 வாக்குச்சாவடிகளில் ஒப் புகைச்சீட்டுகளின் எண்ணிக்கை மூலம் தேர்வு முடிவுகள் தீர்மானிக்கப்பட உள்ளன.

ஜாதி பெயரில் குடியிருப்பா?

வேலூரில் சாதி பெயரில் உள்ள குடியிருப்புப் பகுதியின் பெயரை மாற்றாத விவகாரத்தில் விளக்கம் அளிக்குமாறு உள்ளாட்சித் துறை முதன்மைச் செயலருக்கும், வேலூர் மாநகராட்சி ஆணையருக்கும் மாநில மனித உரிமை ஆணையம் வியாழக்கிழமை தாக்கீது அனுப்பி உள்ளது.
வேலூர் மாநகராட்சியில் தோட்டி லைன் என்ற குடி யிருப்பு பகுதி உள்ளது. இங்கு 1,500-க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் வசிக்கின்றனர். அவர்களின் ஜாதியை அடிப்படையாகக் கொண்டு வைக்கப்பட்டுள்ள தோட்டி லைன் என்ற பெயரை மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் வைத்த தொடர் கோரிக்கையின் விளைவாக, மாநக ராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுவரை குடியிருப்பின் பெயர் மாற்றப்படவில்லை. இதுகுறித்த செய்தி பத்திரிகை ஒன்றில் அண்மையில் வெளியானது.
இந்த செய்தியின் அடிப்படையில், மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தார். மேலும் உள்ளாட்சித் துறை முதன்மைச் செயலர், வேலூர் மாநக ராட்சி ஆணையர் ஆகியோர் 4 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு தாக்கீது அனுப்ப உத்தரவிட்டார்.

Thursday, May 9, 2019

பிஜேபி அதிகார பீடத்தில் ஏறியதால் ஏற்பட்ட தீய விளைவு

மத்தியில் பிஜேபி அரசு நரேந்திர மோடி தலைமையில் 2014இல் வந்தாலும் வந்தது. நாடெங் கும் ஜாதிய வாதங்களும், மதவாதங்களும் நிர்வாண கோலத்தில் தலை விரித்து ஆடித் தீர்க்க ஆரம்பித்து விட்டன.
பொதுவாக பிஜேபி என்றாலே மதவாத ஆட்சி என்பது நிலை நிறுத்தப்பட்ட கெட்டியான உண்மையாகிவிட்டது. 1992இல் பாபர் மசூதியை பிஜேபி கும்பல் பட்டப் பகலில்  இடித்துத் துவம்சம் செய்தது. ஏதோ வெறிபிடித்த அடி மட்டத் தொண் டர்கள்தான் இந்தக் கேவலத்தை நடத்தினார்கள் என்று சொல்ல முடியாது.
அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, அசோக் சிங்கால் போன்ற உயர் மட்டத் தலைவர்களே முன்னின்று வழிகாட்டி இந்த அநாகரிகக் காட்டு விலங்காண்டித்தனத்தை அரங்கேற்றி முடித்தனர்.
நியாயமாக அந்த நிகழ்வுக்குப் பிறகு பிஜேபி உள்ளிட்ட, சங்பரிவார் கும்பல் முற்றிலும் தடை செய்யப்பட்டு இருக்க வேண்டும். பிஜேபி தேர்தலில் போட்டியிடும் உரிமையையும் இழக்கச் செய்திருக்க வேண்டும். இதில் வெட்கக் கேடு என்னவென்றால், அந்தக் குற்றத்தில் முதன்மைக் குற்றவாளிகளாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட அத்வானி துணை பிரதமராகவும், முரளி மனோகர் ஜோஷி மனித வள மேம்பாட்டுத் துறை (கல்வி) அமைச்சராகவும் ஆக முடிந்தது என்றால் இந்த வெட்கக் கேட்டை என்னவென்று சொல்லுவது?
அதுவும் நரேந்திரமோடி பிரதமரான பிறகு பிஜேபி  - சங்பரிவார்த் தலைவர்களும், மத்திய அமைச்சர்களும் பேசுகின்ற பேச்சு கேவலத்தின் உச்சமாகும்.
தாமரைக்கு வாக்கு அளித்தால் இராமனுக்குப் பிறந்தவர்கள் என்றும்,  அப்படி வாக்களிக்காவிட்டால் முறை தவறிப் பிறந்தவர்கள் என்றும் ஒரு மத்திய அமைச்சர்  பேசுவதை என்ன சொல்ல!
பசுவதைத் தடுப்பு என்ற பெயரால் நாடு முழு வதும் தாழ்த்தப்பட்டவர்கள் படுகொலை செய்யப் படவில்லையா? ஒரு காரின் பின்னால் அந்தத் தோழர்களைக் கட்டி இழுத்துச் செல்லுவதும், சந்தைக்கு மாடுகளை  ஏற்றிச் செல்லும் வியாபாரி களை வழிமறித்து அவர்களின் கால்களில் இலாடம்  அடிப்பதும் உலகில் வேறு எங்காவது நடந்ததாகக் கேள்விப்பட்டதுண்டா?
மீசை வைத்திருந்ததற்காகவும், குதிரையில் ஏறி வந்ததற்காகவும், கோயில் திருவிழாவை வேடிக்கை பார்க்க வந்தார் என்பதற்காகவும் தாழ்த்தப்பட்ட வர்கள் அடித்துக் கொல்லப்பட்டதானது - இந்தியா காட்டுவிலங்காண்டித் தன்மையது என்பதற்கான எடுத்துக் காட்டாகும்.
இராமராஜ்ஜியத்தை உண்டாக்க இருப்பதாகக் கூறும் உ.பி. முதல் அமைச்சர் அனுமனை மலைவாழ் தலித் என்கிறார். இன்னொரு வகையில் இதே இந்து மதம்தான் அனுமனைக் கோயில் கட்டிக் கும்பிடுகிறது.
கடவுள்களில்கூட உயர் ஜாதி - தாழ்ந்த ஜாதி என்று வகை பிரிப்பதுதான் அவர்கள் போற்றும் இந்து மதத்தின் யோக்கியதை!
உத்தரகாண்டில் ஒரு செய்தி வெளி வந்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் தெக்ரி மாவட்டம் நைன்பர்க் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஜிதேந்திர தாஸ் என்ற 23 வயது தாழ்த்தப்பட்ட சமுக இளைஞர் ஒரு திருமண வீட்டில் உயர் ஜாதியினர் என்று சொல்லப் பட்டவர்களுடன் சமமாக அமர்ந்து உணவு உண்ட தால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.
இப்பொழுது ஏற்பட்டுள்ள இன்னொரு அபாயம் - ஜாதி, மதவெறி என்றால் என்னவென்று தெரியாத சில மாநிலங்களில்கூட மதவெறி, ஜாதி வெறி அபாயம் தலைதூக்கி நிற்கிறது.
பிஜேபி மத்தியில் அதிகாரத்திற்கு வந்ததால் ஏற்பட்ட  தாக்கம்தான் இதற்குக் காரணம் என்று சொல்ல வேண்டும். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதச் சார்பின்மை (Secular) என்ற அடிப்படைக் கோட்பாட்டையே ஏற்காத ஓர் அரசு மத்தியில் அதி கார பீடத்தில் உள்ளதால் ஏற்பட்ட தீய விளைவே இது.
நடந்து முடிந்த - நடக்க இருக்கிற தேர்தலில் நாட்டு மக்கள் நல்லதோர் தீர்ப்பை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு எதிரான மனு தள்ளுபடி ஆளுநரே முடிவெடுக்கலாம்: உச்ச நீதிமன்றம்


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், நளினி உள் ளிட்ட 7 பேரையும் விடுவிப்ப தற்கு எதிராக தாக்கல் செய் யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநரே முடிவெடுப் பார் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர்களை விடுதலை செய்ய பரிந்துரை செய்து தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறை வேற்றியது.உடனடியாக அந்த தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்பிவிட்டதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டது.
ஆளுநர் அந்த தீர்மானத்தில் கையெழுத்திடாததால், எழுவர் விடுதலை காலதாமதமாவதாக விமர்சனம் எழுந்தது. மேலும், தமிழக அரசின் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பி ஆளுநர் கருத்து கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதை ஆளுநர் மாளிகை தரப்பு மறுத்தது. மேலும், இந்த விவகாரத்தில் தெளிவாகவும், வெளிப்படையாகவும் முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப் பட்டது.
இதனிடையே, ராஜீவ்காந்தி கொலையின்போது உயிரிழந் தவர்களின் உறவினர்களான எஸ்.அப்பாஸ், ஜான் ஜோசப் உள்ளிட்டோர் பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 7 பேர் விடுதலைக்கு எதிராக காங் கிரஸைச் சேர்ந்த அமெரிக்கை நாராயணனும் மனு தாக்கல் செய்தார். குற்றவாளிகளை விடுதலை செய்யும் முடிவு அரசியல் நோக்கம் கொண்ட தோடு, அரசியல் சாசனத்துக்கும் எதிரானது எனவும் அந்த மனு வில் தெரிவித்து இருந்தனர்.
ராஜீவ்காந்தி கொலையின்போது உயிரிழந்த 15 பேரின் உறவினர்கள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை காத் திருக் குமாறு வலியுறுத்தி மனு அளித்தனர்.  இதன் காரண மாகவும்  ஆளுநர் முடிவெடுக் காமல் இருப்பதாகவும் கூறப் பட்டது.
இந்தநிலையில் 7 பேர் விடு தலைக்கு எதிராக தொடரப் பட்ட மனுக்கள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா, கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக் களை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இந்த விவகாரம், தமிழக ஆளுநரின் பரிசீலனையில் இருப்பதால் அவரே முடிவு எடுப்பார் எனவும், இது போன்ற விஷயங்களில் ஆளுநர், குடி யரசு தலைவர் களின் தனிப் பட்ட அதிகார வரம்புக்குட் பட்டது எனவும், இதனால் அதற்குள் நீதிமன்றம் தலையிட  தேவையில்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின சிறார்களுக்கு ரத்த அணு குறைபாடு பரிசோதனை


மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த சிறார்களுக்கு ரத்த அணுக்கள் குறைபாடு தொடர்பான மருத்துவப் பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. அதில் ஏறத்தாழ 9 சதவீதம் பேருக்கு தலசீமியா, ரத்த சோகை உள்ளிட்ட பிரச்சினைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து அச்சிறார்கள் அனைவ ருக்கும் மாவட்ட மருத்துவமனைகள்
வாயிலாக உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மரபணு குறைபாடுகள் காரணமாக ரத்த அணுக்களில் சில பாதிப்புகள் ஏற்படும். அவை நாளடைவில் தலசீமியா, ரத்த சோகை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். நெருங்கிய உறவினர்களுக்கு இடையே திருமணம் புரிந்தாலோ அல்லது ஊட்டச்சத்து குறைபாடு இருந்தாலோ இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
இந்த வகை பாதிப்புகள் அதிக அளவில் மலை வாழ் மக்களிடையே காணப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும், குறிப்பாக வளர் இளம் பருவத்தினருக்கு ரத்த சோகை பிரச்சினை அதிக அளவில் ஏற்படுவதாகத் தெரிகிறது. அதனை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக தேசிய நல் வாழ்வுக் குழுமம் சார்பில் மாவட்டந் தோறும் பழங்குடியின சிறார்களை மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தும் திட்டம் செயல்படுத்தப் பட்டது. கடந்த இரு ஆண்டுகளாக அத்திட்டத்தின் கீழ் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறார்களுக்கு ரத்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டன. இதற்காக தன்னார்வ அமைப்புகள் மூலம் நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு அத்திட்டம் செயல் படுத்தப்பட்டது. அதற்கென இதுவரை ரூ.3.3 கோடியை தேசிய நல்வாழ்வு குழுமம் செலவிட்டிருப்பதாகத் தெரிகிறது.
இந்நிலையில், பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட சிறார்களில் 9 சதவீதம் பேருக்கு ரத்த அணுக்கள் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. குறிப்பாக, வேலூர் மாவட்டத்தில் பாதிப்பு சதவிகிதம் அதிகமாக இருப்பது தெரியவந்தது. அங்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட மொத்த சிறார்களில் 21.5 சதவீதம் பேருக்கு தலசீமியா, ரத்த சோகை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய நல்வாழ்வு குழும இயக்குநர் தாரேஸ் அகமது கூறியதாவது:
அனைத்து மக்களுக்கும் சுகாதார வசதி சென்றடைய வேண்டும்; ஆரோக்கியமான சூழல் நிலவ வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு திட்டங்களை நாங்கள் முன் னெடுத்து வருகிறோம். அவற்றில் இத் திட்டமும் ஒன்று.
ரத்த அணுக்கள் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவ ருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டி ருக்கிறது. அவர்களில் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலா னோர் குணமடைந்து விட்டனர்.
போலியோ, பெரியம்மை போன்ற நோய்களை முழுமையாக ஒழித்ததைப் போல ரத்த சோகை, தலசீமியா நோய் களையும் ஒழிக்க முடியும். அடுத்த சில ஆண்டுகளில் அதை சாத்தியமாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரு கிறோம் என்றார் அவர்.

Friday, May 3, 2019

4 தொகுதி இடைத் தேர்தல்..... இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு 137 பேர் போட்டி

தமிழகத்தில் வருகிற 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளில் 137 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இடைத்தேர்தல் நடைபெறும் 4 சட்டமன்ற தொகுதியிலும் மொத்தம் 256 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மனுக்கள் மீது பரிசீலனை நடைபெற்றது.
வேட்புமனு பரிசீலனையின் முடிவில் முறையான ஆவணங்கள் இல்லாததால் 104 பேர் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 152 பேரது மனுக்கள் ஏற்றுக்கொள்ளப் பட்டது. இந்நிலையில் வேட்புமனுவை திரும்பப் பெற நேற்று கடைசி நாள் என்பதால் 15 பேர் தங்களது வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுக்கொண்டனர். இதன்மூலம் 4 தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 137 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

அரவக்குறிச்சி: 63 பேர் போட்டி
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 63 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அரவக்குறிச்சியில் வேட்புமனு தாக்கல் செய்த 68 பேரில் 5 சுயேட்சைகள் மனுவை திரும்ப பெற்றுக் கொண்டனர்.

ஒட்டப்பிடாரம்: 15 பேர் போட்டி
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் 15 வேட் பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 41 வேட்புமனுக்களில் 23 நிராகரிக்கப்பட்டது; 3 வேட்புமனுக்கள் திரும்பப் பெறப்பட்டது.

திருப்பரங்குன்றம்: 37 பேர் போட்டி
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் 37 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். திருப்பரங்குன்றத்தில் வேட்புமனு தாக்கல் செய்த 44 பேரில் 7 பேர் மனுவை திரும்ப பெற்றுக்கொண்டனர்.

சூலூர்: 22 பேர் போட்டி
சூலூர் சட்டமன்ற தொகுதியில் 22 வேட்பாளர்கள் போட் டியிடுகின்றனர். இத்தொகுதியில் வேட்பாளர்கள் யாரும் வேட்பு மனுவை திரும்பப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

'நாங்களும் துல்லிய தாக்குதல் நடத்தினோம்' ஓட்டுக்காக பயன்படுத்தவில்லை!

முந்தைய காங்கிரஸ் ஆட்சியிலும், பல முறை துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், பா.ஜ.க. போல, அவற்றை நாங்கள் ஓட்டுக்காக பயன்படுத்தியதில்லை என, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
அவர், ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டி யில் கூறியிருப்பதாவது: கடந்த 2016இல் பாக்.ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும், சமீபத்தில் பாகிஸ்தானின் பால்காட்டிலும் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது நம் விமானப் படையினர் நிகழ்த்திய துல்லியத் தாக்குதல்களை பிரதமர் மோடி ஓட்டுக்காக பயன்படுத்துவது வெட்கக்கேடானது. இது போல, எத்தனையோ துல்லியத் தாக்குதல்களை, முந்தைய அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிகழ்த் தியுள்ளது. ஆனால், அதுகுறித்து ஒருபோதும் விளம் பரப்படுத்தியதில்லை. ஓட்டுக்காக பயன்படுத்தியதும் இல்லை.
ராணுவ நடவடிக்கையை ஓட்டு வங்கிக்காக பயன்படுத்துவதைவிட இந்தியாவுக்கு எதிரான சக்திகளுக்கு தகுந்த பதிலடி கொடுப்பது முக்கியம் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. ஆனால், மோடி ராணுவத்தினரின் வீரத்தை தங்கள் கட்சிக்கு கிடைக்கும் ஓட்டுக்காக பயன்படுத்துகிறார். கடந்த 70 ஆண்டுகளில் எந்த அரசும் நம் ராணுவத்தினரின் வீரத்தில் ஒளிந்து கொண்டு ஓட்டு கேட்கவில்லை. ராணுவத்தை அரசியலுக்கு இழுப்பது வெட்கக்கேடு. ஏற்க முடியாதது. இது நாட்டின் பொருளாதாரம், வேலைவாய்ப்பு, விவசாயிகளின் வறுமை ஆகியவற்றில் இந்த அரசு சந்தித்த மன்னிக்க முடியாத தோல்விகளை திசை திருப்பும் நடவடிக்கை. மோடி அரசு தேசப் பாதுகாப்பு என்ற ஒரேஅம்சத்தை கையிலெடுத்து வெற்றுக் கூச்சல் போடுகிறது.
புவிசார் அரசிய லில் அந்தந்த சூழ லுக்கு ஏற்பவே, நடவடிக்கைகளை மேற்கொள்ள முடி யும். வரலாற்றை திரும்பிப் பார்த்தால் இது புரியும். பாகிஸ் தானை ஒரு பயங் கரவாத மய்யமாக தனிமைப்படுத்தி பயங்கர வாதத்திற்கு எதிரான தீர்க்கமான நடவடிக்கைகளுக்கு சர்வதேச சமுகத்தை அணிதிரட்டுவதுதான் எங்கள் நோக்கம். அதில் நாங்கள் வெற்றியும் பெற்றோம். இவ்வாறு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...