Friday, May 3, 2019

'நாங்களும் துல்லிய தாக்குதல் நடத்தினோம்' ஓட்டுக்காக பயன்படுத்தவில்லை!

முந்தைய காங்கிரஸ் ஆட்சியிலும், பல முறை துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், பா.ஜ.க. போல, அவற்றை நாங்கள் ஓட்டுக்காக பயன்படுத்தியதில்லை என, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
அவர், ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டி யில் கூறியிருப்பதாவது: கடந்த 2016இல் பாக்.ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும், சமீபத்தில் பாகிஸ்தானின் பால்காட்டிலும் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது நம் விமானப் படையினர் நிகழ்த்திய துல்லியத் தாக்குதல்களை பிரதமர் மோடி ஓட்டுக்காக பயன்படுத்துவது வெட்கக்கேடானது. இது போல, எத்தனையோ துல்லியத் தாக்குதல்களை, முந்தைய அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிகழ்த் தியுள்ளது. ஆனால், அதுகுறித்து ஒருபோதும் விளம் பரப்படுத்தியதில்லை. ஓட்டுக்காக பயன்படுத்தியதும் இல்லை.
ராணுவ நடவடிக்கையை ஓட்டு வங்கிக்காக பயன்படுத்துவதைவிட இந்தியாவுக்கு எதிரான சக்திகளுக்கு தகுந்த பதிலடி கொடுப்பது முக்கியம் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. ஆனால், மோடி ராணுவத்தினரின் வீரத்தை தங்கள் கட்சிக்கு கிடைக்கும் ஓட்டுக்காக பயன்படுத்துகிறார். கடந்த 70 ஆண்டுகளில் எந்த அரசும் நம் ராணுவத்தினரின் வீரத்தில் ஒளிந்து கொண்டு ஓட்டு கேட்கவில்லை. ராணுவத்தை அரசியலுக்கு இழுப்பது வெட்கக்கேடு. ஏற்க முடியாதது. இது நாட்டின் பொருளாதாரம், வேலைவாய்ப்பு, விவசாயிகளின் வறுமை ஆகியவற்றில் இந்த அரசு சந்தித்த மன்னிக்க முடியாத தோல்விகளை திசை திருப்பும் நடவடிக்கை. மோடி அரசு தேசப் பாதுகாப்பு என்ற ஒரேஅம்சத்தை கையிலெடுத்து வெற்றுக் கூச்சல் போடுகிறது.
புவிசார் அரசிய லில் அந்தந்த சூழ லுக்கு ஏற்பவே, நடவடிக்கைகளை மேற்கொள்ள முடி யும். வரலாற்றை திரும்பிப் பார்த்தால் இது புரியும். பாகிஸ் தானை ஒரு பயங் கரவாத மய்யமாக தனிமைப்படுத்தி பயங்கர வாதத்திற்கு எதிரான தீர்க்கமான நடவடிக்கைகளுக்கு சர்வதேச சமுகத்தை அணிதிரட்டுவதுதான் எங்கள் நோக்கம். அதில் நாங்கள் வெற்றியும் பெற்றோம். இவ்வாறு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...