Thursday, May 9, 2019

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு எதிரான மனு தள்ளுபடி ஆளுநரே முடிவெடுக்கலாம்: உச்ச நீதிமன்றம்


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், நளினி உள் ளிட்ட 7 பேரையும் விடுவிப்ப தற்கு எதிராக தாக்கல் செய் யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநரே முடிவெடுப் பார் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர்களை விடுதலை செய்ய பரிந்துரை செய்து தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறை வேற்றியது.உடனடியாக அந்த தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்பிவிட்டதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டது.
ஆளுநர் அந்த தீர்மானத்தில் கையெழுத்திடாததால், எழுவர் விடுதலை காலதாமதமாவதாக விமர்சனம் எழுந்தது. மேலும், தமிழக அரசின் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பி ஆளுநர் கருத்து கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதை ஆளுநர் மாளிகை தரப்பு மறுத்தது. மேலும், இந்த விவகாரத்தில் தெளிவாகவும், வெளிப்படையாகவும் முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப் பட்டது.
இதனிடையே, ராஜீவ்காந்தி கொலையின்போது உயிரிழந் தவர்களின் உறவினர்களான எஸ்.அப்பாஸ், ஜான் ஜோசப் உள்ளிட்டோர் பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 7 பேர் விடுதலைக்கு எதிராக காங் கிரஸைச் சேர்ந்த அமெரிக்கை நாராயணனும் மனு தாக்கல் செய்தார். குற்றவாளிகளை விடுதலை செய்யும் முடிவு அரசியல் நோக்கம் கொண்ட தோடு, அரசியல் சாசனத்துக்கும் எதிரானது எனவும் அந்த மனு வில் தெரிவித்து இருந்தனர்.
ராஜீவ்காந்தி கொலையின்போது உயிரிழந்த 15 பேரின் உறவினர்கள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை காத் திருக் குமாறு வலியுறுத்தி மனு அளித்தனர்.  இதன் காரண மாகவும்  ஆளுநர் முடிவெடுக் காமல் இருப்பதாகவும் கூறப் பட்டது.
இந்தநிலையில் 7 பேர் விடு தலைக்கு எதிராக தொடரப் பட்ட மனுக்கள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா, கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக் களை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இந்த விவகாரம், தமிழக ஆளுநரின் பரிசீலனையில் இருப்பதால் அவரே முடிவு எடுப்பார் எனவும், இது போன்ற விஷயங்களில் ஆளுநர், குடி யரசு தலைவர் களின் தனிப் பட்ட அதிகார வரம்புக்குட் பட்டது எனவும், இதனால் அதற்குள் நீதிமன்றம் தலையிட  தேவையில்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...