தமிழகத்தில் 12 மக்களவைத்
தொகுதிகளுக்குள்பட்ட 44 வாக்குச்சாவடிகளின் ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களில்
உள்ள சீட்டுகளை எண்ணுவதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருப்பதாக தமிழகத்
தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு கூறினார்.
இந்த 44 வாக்குச் சாவடிகளில் மட்டும்
ஒப்புகைச்சீட்டுகளில் உள்ள சின்னங்களை எண்ணிய பிறகே தேர்தல் முடிவுகள்
அறிவிக்கப்பட உள்ளன. இது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் சத்யபிரத சாகு
வியாழக் கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறை யாகச்
செயல்படுகிறதா என்பதைப் பரிசோதிப்பதற்காக தேர்தல் அதிகாரிகள் மாதிரி
வாக்குப்பதிவு நடத்தினர். அதில் 44 வாக்குச்சாவடிகளில் மாதிரி வாக்
குப்பதிவு நடத்தியதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் அந்த
வாக்குகளை அழிக்காமல், ஒப் புகைச்சீட்டு இயந்திரங்களில் விழுந்த சீட்டுகளை
மட்டும் எடுத்து விட்டனர். இந்த 44 வாக்குச்சாவடிகளில் மட்டும்
ஒப்புகைச்சீட்டு இயந்திரங் களில் உள்ள சீட்டுகளை எண்ணுவ தற்குத் தேர்தல்
ஆணையம் உத்தர விட்டுள்ளது.
பொதுவாக, ஒரு மக்களவைத் தொகுதியில் உள்ள
ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் 5 வாக்குச்சாவடிகளில் ஒப்புகைச் சீட்டு
களை எண்ண வேண்டும் என்பதுதான் விதி. ஆனால், இந்த 44 வாக்குச் சாவடிகளிலும்
ஒப்புகைச் சீட்டுகளை மட்டும்தான் எண்ண வேண்டும். இதிலும் ஏதேனும் அரசியல்
கட்சிகள் சந்தேகம் எழுப்பினால், தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவித்து,
அதற்கேற்ப அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் சத்யபிரத சாகு.
மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை
இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 23-ஆம் தேதி நடைபெற உள்ளது.
மறுவாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளிலும் மே 23-ஆம் தேதியே
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு
கூறினார். அதேபோல், 44 வாக்குச்சாவடிகளிலும் ஒப்புகைச்சீட்டுகள் மே
23-ஆம் தேதியே எண்ணப்பட உள்ளன.
44 வாக்குச்சாவடிகள்: வடசென்னை,
காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சேலம், பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர்,
தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகப் பட்டினம், திருநெல்வேலி, தென்காசி ஆகிய
12 மக்களவைத் தொகுதிகளுக்குள் பட்ட 44 வாக்குச்சாவடிகளில் ஒப்
புகைச்சீட்டுகளின் எண்ணிக்கை மூலம் தேர்வு முடிவுகள் தீர்மானிக்கப்பட
உள்ளன.
No comments:
Post a Comment