Thursday, February 6, 2020

அதிக கார்பன் வெளியேற்றம்: இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது அய்.நா. புகார்

'ஜி - 20' நாடுகள்  குறித்து, அய்.நா., எனப்படும், அய்க்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரஸ் நேற்று கூறியதாவது:பாரிஸ் காலநிலை மாற்றம் மாநாட்டில், எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு மதிப்பு அளிக்காமல், பல நாடுகள் நடந்து கொள்கின்றன. இந்த நாடுகள், அதிக அளவிலான கார்பனை வெளியேற்றி வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா, சீனா, இந்தியா, ஜப்பான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள், அதிக அளவில் கார்பனை வெளியேற்றி வருகின்றன. 80 சதவீத கார்பன் வெளியேற்றத்திற்கு, 'ஜி - 20' நாடுகளே முக்கிய காரணம்.
இதனால், உலக நாடுகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பிரதான நாடுகள், கார்பன் வெளியேற்றத்தை கட்டுக்குள் கொண்டு வந்து, 2050ஆம் ஆண்டுக்குள், 'ஜீரோ கார்பன்' என்ற நிலையை எட்ட வேண்டும். இந்த நாடுகள், அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தால் தான், இந்த இலக்கை நம்மால் எளிதில் அடைய முடியும். அவை முயற்சி எடுக்காவிட்டால், இதர நாடுகள் முயற்சித்தாலும், எந்த பயனும் இருக்காது.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...