ஆண்டின் துவக்கத்தில் நடைபெறும் அமெரிக்க,
பார்லி.,யின் கூட்டுக் கூட் டத்தில் அதிபர் உரையாற் றுவது மரபு. அதன்படி,
மூன் றாவது முறையாக, பார்லி.,யில், டொனால்டு டிரம்ப் நேற்று உரையாற்றினார்.
அப்போது அவர் கூறிய தாவது:ஆசிய நாடான ஆப்
கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்த, அமெரிக்க படைகள் அனுப்பப்பட்டன. ஆனால்,
நீண்ட காலமாக நம் படைகள் அங்கு நிறுத்தப் பட்டுள்ளன.
அவர்கள் போர் வீரர்கள். ஒன்று போரில்
ஈடுபட வேண்டும் அல்லது போர் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்பதே, அவர்களுடைய
முக் கியமான பணி.மற்றொரு நாட்டின் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் வேலையில்
அவர்களை ஈடுபடுத்தக் கூடாது.தலிபான் அமைப் புடன் மீண்டும் பேச்சு வார்த் தை
துவங்கியுள்ளது.
தற்போது, ஆப்கானிஸ் தானில், 14 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் உள்ளனர்.
மிக விரை வில், 8,600 ஆக குறைக்கப்படும். அதன்பின், முழுமையாக திரும்ப பெறப்படும்.
அதேபோல், அய்.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு
எதிராக, ஆசிய நாடுகளான, சிரியா, ஈராக்கில், நம் படைகள் போரிட்டன.
அவர்களிடம் இருந்து, 100 சதவீத நிலம் மீட்கப்பட்டுள்ளது. அய்.எஸ்., தலைவர்
அபுபக்கர் அல்பகாதி கொல்லப்பட்டார். அங்கிருந் தும் நம் படைகள் முழுமையாக
திரும்பப் பெறப்படும்.
'கொரோனா' வைரசால் பாதிக்கப்பட்டுள்ள
சீனாவுக்கு தேவையான அனைத்து உதவி களையும் செய்து வருகிறோம். இந்த ஆட்கொல்லி
வைர சிடமிருந்து, நம் நாட்டு மக் களை காப்பாற்ற, அனைத்து நடவடிக்கைகளும்
எடுக்கப் படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment