Thursday, February 6, 2020

அரசின் முடிவை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய எல்அய்சி ஊழியர்கள்!

எல்அய்சி நிறுவனப் பங்குகளை பகுதியளவிற்கு விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து, எல்அய்சி தொழிற்சங்கங்கள் நாடெங்கிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றன. நாட்டின் மிகப்பெரிய மற்றும் லாபகரமான காப்பீடு நிறுவனம்தான் எல்அய்சி. ஆனால், அரசின் சொத்துக்களை தனியாருக்கு தாரை வார்க்கும் தாராளமயக் கொள்கையின் ஒரு பகுதியாக, எல்அய்சி நிறுவனத்தின் ஒரு பகுதி பங்குகள் விற்பனை செய் யப்படுமென, மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள்ளது பாரதீய ஜனதா அரசு.
தொடக்கநிலை பொது வழங்கல் மூலமாக இந்த விற்பனை, அடுத்த நிதியாண்டில் துவங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நாடெங்கிலும் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. எனவே, இந்தப் பகுதியளவு பங்குகள் விற்பனையை எதிர்த்து, எல்அய்சி நிறுவனத்தின் 3 தொழிலாளர் யூனியன்கள் நாடெங்கிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
நாடெங்கிலும் உள்ள 2048 கிளை அலுவலகங்கள், 114 கோட்ட அலுவலகங்கள் மற்றும் 8 பிராந்திய அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள், தங்களது மதிய உணவு இடைவேளையின்போது திரண்டு, அரசின் முடிவை எதிர்த்து ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...