முன்னாள் குடியரசுத் தலைவர் பக்ருதீன்
அலியின் குடும்பத்தினர் பெயர் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இருந்து விடு
பட்டு அவர்கள் முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். முன்னாள் அசாம் முதல் பெண்
முதல்வர் அன்வரா தைமூர் பெயரே தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இல்லை.
கார்கில் போரில் வெற்றிவாகை சூடி குடியர சுத் தலைவர் பதக்கம் பெற்ற முகமது
சனாலுல்லா பெயர் பதிவேட்டில் விடுபட்டு முகாமில் அடைக்கப்பட் டார். ஓய்வு
பெற்ற மாவட்ட ஆட்சியாளர் ஒருவர் பெயர் விடுபட்டு முகாமில் அடைக்
கப்பட்டார். மொத்தம் 47 பேர் முகாமில் மரணம டைந்துள்ளனர்.
மகராட்டிராவில் மும் பைக்கு அருகே
வனப்பகுதி யில் 40 ஏக்கர் நிலத்தில் முன்னாள் பாஜக அரசால் பாதிக்கட்டப்பட்ட
தடுப்பு முகாம் உத்தவ் தாக்கரே அரசால் ரத்து செய்யப்பட் டது. கருநாடகாவில்
70 கோடி ரூபாய் செலவு செய்து முகாம் கட்டப்பட்டுக் கொண்டு இருக்கிறது, அசா
மில் மட்டும் 25 முகாம்கள் கட்டும் பணி தொடர்ந்து நடந்துகொண்டு
இருக்கிறது.
2015 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில்
முகாம் கள் கட்ட ரூ.400 கோடி ஒதுக்கப்படுவதாக அப் போதைய உள்துறை இணை
அமைச்சர் கிரன் ரிஜ்ஜூ கூறியுள்ளார்.
அனைவரும் சான்றிதழ் களை எடுத்துத் தயாராக
வைத்திருங்கள். உங்கள் கதவு களை அதிகாரிகள் தட்டு வார்கள் என்று அமித்ஷா
நேரடியாகவே மிரட்டல் விடுகிறார்.
இது எல்லாம் ரஜினிக்கு தெரியாதா??
No comments:
Post a Comment