Thursday, February 6, 2020

முஸ்லிம்கள் மட்டுமல்ல, இந்துக்களும் பாதிக்கப்படுவர் மகாராட்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கருத்து

என்ஆர்சி இந்துக்களையும் பாதிக்கும் என்று மகாராட்டிர முதல மைச்சர் உத்தவ் தாக்கரே கூறி இருக் கிறார்.
இது குறித்து ‘சாம்னா'வுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்ப தாவது:
குடியுரிமை சட்டம் அனைத்து மத மக்களையும் பாதிக்கும் என்பதால் உத்தேச தேசிய குடிமக்களின் பதி வேட்டை செயல்படுத்த எமது அர சாங்கம் அனுமதிக்காது.
வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் இருந்து வந்து குடியேறியவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவது சிவசேனாவின் பழைய கோரிக்கை யாகும்.  குடியுரிமை சட்டம் இந்திய குடிமக்களை நாட்டிலிருந்து வெளி யேற்றுவதற்காக அல்ல என்று நான் நம்பிக்கையுடன் சொல்ல முடியும். ஆனால், தேசிய குடிமக்களின் பதிவான என்ஆர்சி இந்துக்களையும் பாதிக்கும்.
சொந்த நாடுகளில் துன்புறுத்தப் பட்ட பின்னர் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பித்த அண்டை நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மையினரின் எண் ணிக்கையை அறிய இந்தியாவுக்கு உரிமை உள்ளது.
பல காஷ்மீர் பண்டிட் குடும்பங்கள் தங்கள் சொந்த நாட்டில் அகதிகளைப் போல தங்கியிருக்கின்றன. சிஏஏ என்று அந்த குடிமக்களை நாட்டிலிருந்து வெளியேற்றக்கூடாது.
என்ஆர்சியின் கீழ், அனைத்து குடி மக்களும் தங்கள் குடியுரிமையை நிரூ பிக்கவேண்டும். அசாமில், 19 லட்சம் பேர் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க முடியவில்லை. அவர்களில் 14 லட்சம் இந்துக்கள்.
அநீதியை அனுமதிக்க மாட்டேன்
என்ஆர்சியின் கீழ், இந்துக்கள் கூட தங்கள் குடியுரிமையை நிரூபிக்க வேண் டியிருக்கும். நான் சட்டத்தை நடை முறைப்படுத்த அனுமதிக்க மாட்டேன். நான் முதலமைச்சராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், யாருக்கும் அநீதியை அனுமதிக்க மாட்டேன் என்றார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...