நம் அண்டை நாடான சீனாவில், கரோனா வைரஸ் பாதிப்பு மிகவும் வேகமாக பரவி வருகிறது.
இன்றைய நிலவரப்படி, 563 பேர் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்து உள்ளனர்.
புதிதாக, 3,887 பேருக்கு வைரஸ் பாதிப்பு
உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், இதுவரை, 30 ஆயிரம் பேருக்கு வைரஸ்
பாதிப்பு இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது.
இதில், 3,219 பேர் அபாய கட்டத்தில் உள்ளனர். நாட்டில் உள்ள, 34 மாகாணங்களில், 31 மாகாணங்களில் இந்த வைரஸ் பாதிப்பு உள்ளது.
குறிப்பாக, ஹூபய் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் பாதிப்பு உள்ளவர்கள் மற்றும்
பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்துடன் உள்ளவர்களுடைய உறவினர்கள்,
நண்பர்கள் என, 2.52 லட்சம் பேர் அடையாளம் காணப் பட்டு உள்ளனர்.
அதில், 1.85 லட்சம் பேர் மருத்துவக்
கண்காணிப்பில் உள்ளனர். இந்த வைரஸ், சீனாவைத் தவிர, 20க்கும் மேற்பட்ட
நாடுகளுக்கும் பரவியுள்ளது. சீனாவுக்கு சென்று திரும்பியவர்கள் மூலமே, இந்த
வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில், கேரளாவைச் சேர்ந்த, சீனாவின்
வூஹானில் மருத்துவம் படித்து வரும் மூன்று மாணவர்களுக்கு வைரஸ் பாதிப்பு
உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த, 2003இல், சீனாவில் இருந்து உருவான சார்ஸ் வைரஸ்பாதிப்பால், சீனாவில் மட்டும், 349 பேர் பலியாகினர்.
உலகெங்கும், 800க்கும் மேற்பட்டோர்
உயிரிழந்தனர். தற்போது கொரோனா வைர சால், சீனாவில், 563 பேர் பலியாகி
உள்ளனர். மற்ற நாடுகளில், இரண்டு பேர் உயிரிழந் துள்ளனர்.
வைரஸ் பாதிப்பு பரவாமல் இருப்பதற்காக,
ஹூபய் உள்ளிட்ட மாகாணங் களில் இருந்து வெளியேறுவதற்கு, சீனா தடை
விதித்துள்ளது. பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் மூடப்பட்டு உள்ளன. பொது
போக்குவரத்தும் நிறுத்தப்பட் டுள்ளது.
'சீனாவுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம்' என, பல நாடுகள் மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளன.
சீனாவுக்கான விமானப் போக்குவரத்தையும் பல
நாடுகள் நிறுத்தி உள்ளன. சீனாவைச் சேர்ந்தவர்கள் மற்றும் சீனாவுக்கு சென்ற
வெளிநாட்டவர் வருகைக்கும், இந்தியா உட்பட பல நாடுகள் தடை விதித்துள்ளன.
No comments:
Post a Comment