Thursday, February 6, 2020

இராணுவத்தினருக்கும் பாதுகாப்பு இல்லை!

சியாச்சின் உள்ளிட்ட அபாயம் மிகுந்த பகுதிகளில் பணியாற்றும் இந்திய ராணுவ வீரர்களுக்கு, அத்தியாவசியமான மற்றும் தகுதியான உபகரணங்கள் வழங்கப்படவில்லை என்று சிஏஜி அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.
சிறப்பு ஆடைகள், உணவுப் பொருட்கள், தகுதியான மற்றும் பாதுகாப்பான தங்குமிடங்கள் உள்ளிட்டவை களில் கவனம் செலுத்தப்படவில்லை என்று கூறப்படு கிறது. ஆபத்தான பகுதிகளில் நாட்டிற்காகப் பணி புரியும் ராணுவ வீரர்களுக்குத் தேவையான உபகரணங் களை வாங்குவது குறித்து பரிந்துரைக்கப்பட்டும், தேவையற்ற தாமதம் நிலவுகிறது. திட்டச்செலவு ரூ.395 கோடி என்பதிலிருந்து ரூ.4007.22 கோடி என்பதாக மதிப்பிடப்பட்டது.
உயரமான பகுதிகளுக்கான உடைகள் மற்றும் உப கரணங்கள், பனியில் அணியும் கண்ணாடி, பல்வகைப் பயன்பாடு கொண்ட காலணிகள் உள்ளிட்டவை அவற் றுள் அடக்கம். தற்போதைய நிலையில், பழைய மாதிரியிலான உபகரணங்களே பயன்படுத்தப்படுவதால், வீரர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் மற்றும் அவர்களுக்கான சூழலும் சவாலானதாக மாறுகிறது.
எப்போதும் தேசியவாதம் மற்றும் பயங்கரவாத முழக்கத்தில் குளிர்காயும் பாரதீய ஜனதா, ராணுவ வீரர்கள் விசயத்தில் இவ்வளவு மோசமாக நடந்து கொள்வது  ஏன்? என்ற கேள்வியை எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...