Thursday, February 6, 2020

துபாய்க்கு சென்ற பயணியரில் இந்தியாவுக்கு முதலிடம்

துபாய் பன்னாட்டு விமான நிலையத்திற்கு, 2019ஆம் ஆண்டில், வந்து சென்ற பயணியரில், இந்தியர்களின் எண்ணிக்கை, அதிக அளவில் இருந்தது தெரியவந்துள்ளது.
மேற்காசிய நாடான, அய்க்கிய அரபு எமிரேட்சின், துபாய் நகரில் உள்ள பன்னாட்டு விமான நிலையம், பரபரப்பாக இயங்கும் விமான நிலையம். இங்கே, கடந்த ஆண்டு பயணித்த வெளிநாட்டு பயணி யரின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக் கையில் கூறியிருப்பதாவது:கடந்த, ஆண்டு, இந்தியாவில் இருந்து, துபாய் பன்னாட்டு விமான நிலையத்திற்கு, 1.19 கோடி பேர் வந்துஉள்ளனர்.
அதைத்தொடர்ந்து, சவுதி அரேபியாவில் இருந்து, 63 லட்சம் பேரும், பிரிட்டனில் இருந்து, 62 லட்சம் பேரும் வந்துள்ளனர். 2018ஆம் ஆண்டிலும், இந்தியா முதலிடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், துபாய் விமான நிலையத் திற்கு வந்து சென்ற பயணியர், நகரங்கள் வாரியாகவும் பிரிக்கப்பட்டனர். அதன்படி, லண்டனில் இருந்து, 36 லட்சம் பேரும், மும் பையில் இருந்து, 23 லட்சம் பேரும், ரியாத் நகரில் இருந்து, 22 லட்சம் பேரும் இங்கு வந்தனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...