பள்ளிகளுக்கு
வரும் மாணவர்கள் கைகளில் வண்ண வண்ண
கயிறுகட்டும் போக்கு தென் மாவட்டங்களில்
பெருகி வருகிறது. ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு
வண்ணம் என்று அடையாளப்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்
மானமிகு கி. வீரமணி அவர்கள்
கல்வித்துறை செயலாளருக்குக் கடிதம் எழுதித் தடுக்கச்
சொல்லியிருந்தார். இப்பொழுது தமிழ்நாடு அரசே கைகளில் கயிறு
கட்டக் கூடாது என்று சுற்றறிக்கை
ஒன்றை அனுப்பியுள்ளது.
இதனை வரவேற்பதற்கு
பதிலாக ஆர்.எஸ்.எஸ்.,
இந்துமுன்னணி வகையறாக்கள் மதவிடயத்தில் அரசு தலையிடுவதா என்று
கூப்பாடு போடுகிறார்கள். காரணம் அவர்கள் ஜாதி
காப்பாற்றப்பட வேண்டும் என்ற வஞ்சகக் கருத்தினை
கொண்டவர்கள்.
மனித உரிமை ஆணையம்
கீழ்க்கண்ட தாக்கீதைத் தமிழ்நாடு அரசுக்கு அனுப்பியுள்ளது.
திருநெல்வேலி
மாவட்டத்தில், ஜாதி வேறுபாடுகளை குறிக்கும்
வகையில் பள்ளி மாணவர்களின் கைகளில்
கட்டப்படும் வண்ணவண்ண கயிறுகள் குறித்து விளக்கமளிக்குமாறு தமிழக அரசுக்கு தேசிய
மனித உரிமை ஆணையம் தாக்கீது
அனுப்பியுள்ளது.
திருநெல்வேலி
மாவட்டத்தில், பள்ளி மாணவர்கள் சிலர்
தங்கள் ஜாதியை குறிக்கும் வகையில்
சிவப்பு, மஞ்சள், பச்சை மற்றும்
ஆரஞ்ச் நிற கயிறுகளை கைகளில்
கட்டிய நிலையில் பள்ளிக்கு வருவதாக ஊடகங்களில் செய்தி
வெளியானது. மேலும் மாணவர்களின் நெற்றியிலிடும்
திலகங்களிலும், ஜாதிக்கு ஏற்றவாறு வேறுபாடு காணப்படுவதாகவும் கூறப்பட்டது.
திருநெல்வேலி
நகரத்தில் உள்ள ஒரு பள்ளியில்
தாழ்த்தப்பட்ட சமுகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர்
வேறு ஒரு ஜாதிக்குரிய வண்ண
திலகத்தை வைத்து வந்ததால், மாணவர்களிடையே
தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து,
மாணவர்கள் வண்ண கயிறுகளைக் கட்டி
வருவதற்குத் தடை விதிக்குமாறு கல்வி
அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
எனினும், எழுத்துபூர்வமாக எவ்வித அறிவிக்கையும் வெளியிடவில்லை
எனத் தெரிகிறது.
மாணவர்களிடையே
பிரிவினையை ஏற்படுத்தும் இச்சம்பவங்கள் குறித்து தமிழக அரசின் முதன்மை
செயலர், சமுகநல அலுவலகம் மற்றும்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆகியோர்
இரண்டு வாரத்துக்குள் விளக்கம் அளிக்குமாறு மனித உரிமை ஆணையத்தின்
உறுப்பினர் நீதிபதி டி. முருகேசன்
தாக்கீது அனுப்பியுள்ளார். இது இந்திய நாட்டை
ஒருங்கிணைக்கும் கயிறு என்று சங்பரிவார்க் கும்பல் ஏமாற்றுகின்றனர். கையில்
கயிறு கட்டுவதால் எப்படி ஒருங்கிணைப்பு வரும்?
ஒவ்வொரு
ஜாதி மாணவருக்கும் ஒரு வண்ணக் கயிற்றை
கையில் கட்டும் செயல் தென்மாவட்டங்களில்
வழக்கில் வந்து, ஜாதிப் பிரிவினையை
வலுப்படுத்தி, மக்களிடையே பிரிவினையை வளர்க்கும் கொடுமையை மறைத்து இக்கயிறு கட்டும்
முறை ஒருமைப்பாட்டை உருவாக்குகிறது என்று கூறுவது பித்தாலாட்டம்
அல்லவா?
கோவணம்
கட்டும் முறை மாறி கால்சட்டையும்,
ஜட்டியும் போடும் வழக்கம் வந்ததால்
இடுப்புக் கயிறு கட்டுவது தற்போது
வழக்கொழிந்து விட்டது.
அப்படியிருக்க,
காரணமே இன்றி கையில் கயிற்றைக்
கட்டிக்கொண்டு, அதுவும் பல சுற்று
சுற்றிக்கொண்டு அலைவது அறிவுக்கு அழகா
என்பதைச் சிந்திக்க வேண்டும்.
தொடர்ந்து
கையில் கயிற்றைக் கட்டிக் கொண்டிருப்பதால், நாள்தோறும்
அதில் அழுக்கும், கிருமியும் சேர்ந்து உடல்நலத்தைக் கெடுக்கிறது என்ற உண்மை சோதனை
மூலம் தெரிய வந்துள்ளது. வேண்டுமானால்
சோதித்துப் பாருங்கள். அதில் எவ்வளவு கிருமிகள்
உள்ளன என்பது தெரியும். இது
பற்றிய ஒரு தகவலைத் தருகிறோம்.
மூடநம்பிக்கையாக
கையில் கட்டும் கயிறை சோதனைக்
கூடத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது எண்ணற்ற கிருமிகள் இருப்பதைக்
கண்டறிந்தோம்.
பெரியார்
மருந்தியல் கல்லூரி மாணவர்கள் சேர்க்கையின்போது
முதல்வர் கொடுத்த அறிவுரையின்படி, மருத்துவ
ஆய்வுக்கூட மாணவர்கள் தாமாகவே ஆர்வமாக முன்வந்து
தங்கள் கைகளில் இருக்கும் கயிற்றினை
அறுத்து, ஆராய்ச்சி செய்தபோது எண்ணற்ற கிருமிகள் இருந்ததைக்
கண்டறிந்தனர். அந்த கிருமிகள் எவ்வாறு
தம் கையில் வந்தன என்று
வினவும்பொழுது அவை தாம் மலம்
கழித்த பின் கைக்கழுவிய நீரின்
மூலமாகவும், சில கிருமிகள் காற்றின்
மூலமாக அல்லது தூசி, அழுக்கு
போன்றவை நம் கையில் படும்போதும்,
சில கிருமிகள் அந்த மாணவரின் தோலில்
இருந்தும் வந்திருக்கும் எனத் தெரிந்தபோது உடனே
அவர்கள் கயிற்றினைக் கழற்றி எறிந்தனர்.
இந்த நோய்க் கிருமிகளால் வயிற்றுப்போக்கு,
சிறுநீரக கோளாறு, தோலில் கட்டிகள்
போன்றவை வரக்கூடும் என்று தெரிந்ததும் மற்றெல்லா
மருத்துவ ஆய்வுக்கூட மாணவர்களும் அவரவர் அணிந்திருந்த கயிறுகளை
கழற்றி எறிந்துவிட்டனர்.
கண்டறியப்பட்ட
நோய்க்கிருமிகளின் பெயர்கள்:
1. ஸ்டெப்பைலோகாக்கஸ்
ஆரியஸ் (Staphylococcus
aweus)
2. ஸ்டெப்பைலோகாக்கஸ்
ஆல்பஸ் (Staphylococcus
albus)
3. எஸ்செரிச்சியா கோலி (Escherichia coli)
நாம் செய்யும் எந்த ஒன்றுக்கும் ஒரு
காரணம் வேண்டும். காரணமில்லாமல் செயல் செய்கின்றவர்களை பைத்தியக்
காரர்கள் என்று அழைக்கிறோம். அப்படியென்றால்
காரணமின்றி கண் மூடித்தனமாய் கையில்
கயிற்றைக் கட்டிக்கொண்டு திரிவது பைத்தியக்காரச் செயல்
அல்லவா?
அறிவியல்
கற்கும் இன்றைய இளைய தலைமுறை
மூட நம்பிக்கைகளால் அறிவுக்கு ஒவ்வாதவற்றைச் செய்வது சரியா என்பதை
சிந்தித்துப் பார்க்க வேண்டும். கற்றவர்கள்தான்
மற்றவர் களுக்கு விழிப்பூட்டி, அறிவார்ந்த
வாழ்க்கை வாழ வழிகாட்ட வேண்டும்.
அப்படியிருக்க அறிவியல் கற்று, சிந்திக்கும் திறன்
பெற்றவர்களே அறிவிற்குப் புறம்பானவற்றைச் செய்வது சரியா? ஆழ்ந்து
சிந்திக்க வேண்டும்.
கயிறு கட்டுவதும் தவறு - கயிறு திரிப்பதும்
தவறே!
No comments:
Post a Comment