மாணவிகள், இல்லத்தரசிகள், வேலைக்குச்
செல்கிறவர்கள் என அனைத்துத் தரப்புப் பெண்களின் மாதவிடாய் நாட்களின் சுகாதா
ரத்துக்கு சானிட்டரி நாப்கின்கள் ஓரளவுக்குக் கைகொடுக்கின்றன. இந்தியாவில்
இன்னும் ஏராளமான பெண்களுக்கு சானிட்டரி நாப்கின் பயன்பாடு சென்று
சேரவில்லை என்ற குரல் ஒலித்துக்கொண்டிருக்கும் வேளையில் சானிட்டரி
நாப்கின்கள் ஏற்படுத்தும் சூழலியல் கேட்டுக்கு எதிரான குரலும் ஒலிக்கிறது.
சானிட்டரி நாப்கின்களின் தயாரிப்பின் போது
பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் ஒரு பக்கம் என்றால் பயன்படுத்திய நாப்கின்
களால் ஏற்படும் சூழலியல் கேடு இன்னொரு பக்கம் அச்சுறுத்துவதாக இருக்கிறது.
நாப்கின் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ரசாயனப் பொருட்களால் சிலருக்கு ஒவ்
வாமையில் தொடங்கி பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளும் வரக்கூடும்.
சானிட்டரி நாப்கின்களை நீண்ட நேரம்
பயன்படுத்துவதாலும் தரமற்ற நாப்கின் களாலும் பல்வேறு உடல்நலப் பாதிப்புகள்
ஏற்படக்கூடும். இதைத் தவிர்ப்பதற்காகத் துணியால் செய்யப்படும்
நாப்கின்களைப் பலர் தயாரித்து வருகின்றனர். சானிட்டரி நாப்கின்களில்
செயற்கைப் பொருட் களுக்குப் பதிலாகப் பருத்தியையும் மூலிகைப் பொருட்
களையும் சேர்த்து மூலிகை நாப்கின்களையும் சிலர் தயாரித்து வருகின்றனர்.
திருச்சி சிறீரங்கத்தைச் சேர்ந்த ரேணுகாதேவியும் மூலிகை நாப்கின்
தயாரிப்பைக் கையிலெடுத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
திருமணம் ஆன புதிதில் தன் கணவருக்குப்
பொருளாதார ரீதியாக உதவும் எண்ணத் துடன் அழகு நிலையத்தைத் தொடங்கினார்
ரேணுகாதேவி. அதுதான் மூலிகை நாப்கின் தயாரிப்புக்கு அடித்தளம்
இட்டுத்தந்தது. பார்லருக்கு வரும் பெண்களில் பலருக்கும் தோல் சம்பந்தப்பட்ட
பாதிப்பு இருந்தது. அவர்களில் சிலர் கருப்பை நீர்க்கட்டி இருப் பதாக
சொன்னார்கள். அவர்களுடைய பிரச் சினை ஏதோவொரு வகையில சானிட் டரி நாப்கின்கள்
சம்பந்தப்பட்டதாக இருந்தது.
மூலிகைப் பொருட்களால் தயாரிக்கப் பட்ட
நாப்கினைப் பயன்படுத்தினால் நோய்த் தொற்று வராது என்று முசிறியைச் சேர்ந்த
வள்ளி அக்கா சொன்னார்கள். கர்ப்பப் பைக்கும் எந்தப் பாதிப்பும் இருக்காது
என்று சொன்னார்கள். மூலிகை நாப்கின் தயாரிப்பதை மற்றவர்களுக்குப்
பயிற்சியும் தந்தார்கள். அந்த அனுபவத்துலதான் அவங்க இப்படிச் சொன்னாங்க
என்கிறார் ரேணுகாதேவி.
அவரும் தனிப்பட்ட முறையில் இது போன்ற
பாதிப்புகளைச் சந்தித்ததால் மூலிகை நாப்கின் தயாரிக்கும் பயிற்சியை
வள்ளியிடம் பெற்றார் ரேணுகாதேவி. அவரி டமே தொழில் தொடங்கும் ஆலோசனையைப்
பெற்று, குறைந்த முதலீட்டில் வீட்டிலேயே ஒரு தையல் இயந்திரத்துடன் தொழிலைத்
தொடங்கினார். துளசி, வேப்பிலை, கற்றாழை ஆகிய மூன்று பொடிகளோடு முதல் ரக
சுத்தமான பஞ்சைப் பயன்படுத்துகிறோம். இந்த மூலிகைப் பொடிகளோட தாக்கம்
கர்ப்பப்பை வரை செல்லும். அதனால் எந்தக் கெடுதியும் இல்லை. உடலும் மனமும்
ஆரோக்கியமாக இருக்கும் என்கிறார் ரேணுகாதேவி.
முதலில் தன் வீட்டுக்கு அருகே வசிப்பவர்
களுக்கும் தோழிகளுக்கும் மூலிகை நாப் கினைக் கொடுத்திருக்கிறார். அனைவரும்
நன்றாக இருப்பதாகச் சொல்லித் தொடர்ந்து ஆதரவு தர, சிறியது, பெரியது என
இரண்டு அளவுகளில் தற்போது தயாரித்து வருகிறார். சுற்றுச்சூழல் தொடர்பான
கருத்தரங்கு, விழிப்புணர்வுக் கண்காட்சி, மகளிர் சுய உதவிக்குழுக்
கூட்டங்கள், அரசு சித்த மருத் துவப் பிரிவு, பெண்கள் கல்லூரி, பள்ளிகள் என
வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் அரங்கு அமைத்து மூலிகை நாப்கின்
குறித்து எடுத்துச் சொல்வதுடன் விற்பனையும் செய்துவருகிறார்.
வள்ளி அக்காள் மாதிரியே தானும் மூலிகை
நாப்கின் தயாரிக்க பயிற்சி தருவதாக கூறினார். நாப்கின் தயாரிப்பது ஒன்றும்
பெரியது இல்லை. வீட்டில் தையல் மிஷினும் மனசுல ஆர்வமும் இருந்தால் போதும்.
நமக்குத் தேவை யான நாப்கினை நாமே தயாரிக்கலாம் என்று நம்பிக்கை தருகிறார்
ரேணுகாதேவி.
No comments:
Post a Comment