Thursday, August 15, 2019

ராமரின் வம்சாவளியாம்! பாஜக எம்.பி.,யைத் தொடர்ந்து மேவார் அரச குடும்ப உறுப்பினர் போட்டி



அயோத்தி,ஆக.15, அயோத்தியி லுள்ள உள்ள நிலம் யாருக்கு சொந்தமானது என்பது தொடர் பான வழக்கில் உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்வியை அடுத்து ராமரின் வம்சாவளிக்கு உரிமை கோருவதில் போட்டி நிலவுகிறது.

முன்னதாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அரச குடும்பத்தை சேர்ந்த பாஜக பெண் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகுமாரி, தாம் ராமரின் வம்சாவளி என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். தற் போது மேவார் உதய்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த மகேந்திர சிங்கும் உரிமை கோரியுள்ளார்.

அயோத்தியில் உள்ள சர்ச்சைக் குரிய நிலம், யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ராமரின் வம்சாவளிகள் இன்னமும் அயோத்தியில் வசிக்கின் றனரா என்று நீதிபதிகள் கேட்டனர்.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜெய்ப்பூரில் உள்ள அரச குடும்பத்தைச் சேர்ந்தவரும் பாஜக பெண் நாடாளுமன்ற உறுப் பினருமான தியாகுமாரி, தான் ராமரின் வாரிசு என்று கூறினார். மேலும், தான் ராமரின் வம்சா வளி என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், தேவைப்பட்டால் அதனை சமர்பிக்கவும் தயார் எனவும் தெரிவித்தார்.

இது சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் தற்போது மேவார் - உதய்ப்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த மகேந்திர சிங் என்பவர் தாம்தான் ராமரின் வம்சாவளியைச் சேர்ந்தவர் எனக் கூறியுள்ளார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...