அசாம் மாநிலத்தில் 2017- ஆம் ஆண்டில் ‘‘மாட்டிறைச்சி உண்பது எனது உரிமை'' என்று எழுதிய மாணவி அதற்காக தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தி
பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் முதுகலை பயின்றுவரும் ரேஹனா சுல்தானா. இவர்
2017- ஆம் ஆண்டில் ராஜஸ்தானில் மாட்டிறைச்சி வதந்தி தொடர்பாக பலர்
கொல்லப்படுவது தொடர்பாக முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், ‘‘மாட்டிறைச்சி உண்பது என்பது
ஒருவரது தனிப்பட்ட உணவு உரிமை ஆகும். இதில் ஒரு சில மத அமைப்புகள் தலையிட
எந்த ஒரு அதிகாரமும் இல்லை. நான் மாட்டிறைச்சி சாப்பிடுகிறேன் என்றால் அது
எனது உரிமை ஆகும். ஒருவர் சுவாசிப்பது அவரது உரிமை, அதே போல்
சாப்பிடுவதும் அவரது உரிமை ஆகும். ஆகவே, மாட்டிறைச்சி சாப்பிடுவது பெரும்
குற்றம் அல்ல. அதற்காக மனிதர்களைக் கொலை செய்வது காட்டுமிராண்டித்தனம்''
என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், ‘‘மாட்டிறைச்சி என்ற வாசகத்தைப்
பார்த்து யாரும் பயப்படவேண்டாம். மாட்டிறைச்சி சாப்பிட்டவர்கள்
பாகிஸ்தானில் மகிழ்ச்சியாக வாழலாம் என்று கூறினால், மாட்டிறைச்சி சாப்பிட்ட
நானும் இந்தியாவில் மகிழ்ச்சியாக இருப்பேன். இதைப் பார்த்துவிட்டு
என்மீது வன்முறையை ஏவாதீர்கள்; இது என்னுடைய தாழ்மையான வேண் டுதல்'' எனவும்
அசாமி மொழியில் பதிவிட்டு பின்னர் அவர் அதை அகற்றிவிட்டார்.
ஆனால், அவரது பதிவை அப்பல் கலைக்கழகத்தில்
உள்ள ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான ஏபிவிபியினர் ஸ்கீர்ன் சாட் மூலம்
பிரதி எடுத்து காவல்துறைக்குப் புகார் அளித்தனர். இது குறித்து விசாரணை
செய்த காவல் துறை ‘‘அவர் அதை அழித்துவிட்டார். எனவே, அவர் மீது வழக்குப்
பதிவு செய்ய அவசியம் இல்லை'' என்று கூறிவிட்டது.
இந்த நிலையில் கவுகாத்தி கிழக்குப் பகுதி
காவல் துறை ஆணையராக கே.கே.சவுத்திரி பொறுப்பேற்றார். அவரிடம் மீண்டும்
ஏபிவிபி அமைப்பினர் 2017-ஆம் ஆண்டு சுல்தானா வெளியிட்ட பழைய பதிவைக்
காண்பித்து இது இந்துக்களின் மன உணர்வை பாதிப் பதாக உள்ளது, இவர் மீது
நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறினர். இதனை அடுத்து காவல்துறையினர்
153 ஏ மதம் தொடர்பான விரோத உணர்ச்சி களைத்
தூண்டி விட முயற்சி செய்வது மற்றும் ஆஸ்ஸாம் காவல் சட்டம் 67-ன்படி
இருபிரிவினர் இடையே கலவரத்தை தூண்ட முயற் சித்தல் பிரிவுகளின் கீழ்
வழக்குப் பதிவு செய்து அவரை கைதுசெய்தனர்.
மாணவி சுல்தானா தன்னை காவல்துறையினர் கைது
செய்தது தொடர்பாக ஊடகவியலாளரிடம் பேசும்போது, “பக்ரீத் கொண்டாட்டம்
தொடர்பாக ஒரு பதிவில், மாட்டிறைச்சி குறித்து நடந்த கொலைகளைக் கண்டு
வேதனையில் எழுதினேன். பின்னர் இது தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் வரும்
என்ற அச்சத்தில் அப்பதிவை நீக்கிவிட்டேன். இருப்பினும் இப்பதிவை சிலர்
ஸ்கீரீன் சாட் எடுத்து வைத்து என்னை மிரட்டினர், நான் அவர்களிடம்
மன்னிப்பும் கேட்டுவிட்டேன்.
காவல்துறையிடமும் 2017-ஆம் ஆண்டு புகார்
தெரிவித்ததேன். நான் காவல்துறையினரிடமும் இது குறித்து விளக்கம் கொடுத்து
விட்டேன். இந்த விவகாரம் அப்போதே முடிந்து போனது. இந்த நிலையில் புதிய
காவல்துறை ஆணையர் பதவி ஏற்றதும் மீண்டும் என் மீது புகார் கொடுக்கப்
பட்டது, இதனை அடுத்து புதிய ஆணையர் என் மீது நடவடிக்கை எடுக்க
உத்தரவிட்டுள்ளார். எனது குடும்பம் இதுவரை இது போன்ற ஒரு சூழலைச்
சந்தித்தில்லை'' என்று கூறினார்.
No comments:
Post a Comment