Sunday, August 18, 2019

சந்திரயான்-2 விண்கலம் செப்.7இல் நிலவில் தரையிறங்குகிறது


நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-2 விண்கலம் கால் பதிக்கவுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலம் இந்தியாவின் அதிக திறன்கொண்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 22-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. புவி சுற்றுவட்டப் பாதையில் வலம் வந்து கொண்டிருந்த விண்கலம், ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 6-ஆம் தேதி வரை
5 முறை படிப்படியாக நிலை உயர்த்தப் பட்டது. விண்கலம் தொடர்ந்து புவி சுற்றுவட்டப் பாதையில் சுற்றிவந்த நிலையில், இறுதிக்கட்ட நிலை உயர் வையும், நிலவை நோக்கிய நகர்வையும் விஞ்ஞானிகள் கடந்த புதன்கிழமை அதிகாலை 2.21 மணியளவில் 20.05 நிமிடங்கள் இயக்கப்பட்டு, புவியின் சுற்றுவட்டப் பாதையில் இறுதிக்கட்ட நிலை உயர்வுக்கு நகர்த்தப்பட்டது.
வெற்றிகரமாக நிலவை நோக்கி தொடர்ந்து பயணிக்கும் விண்கலம், ஆகஸ்ட் 20-ஆம் தேதி நிலவைச் சென்ற டையும். அன்றைய தினம் விண்கலத்தில் உள்ள திரவ என்ஜின் பற்ற வைக்கப் பட்டு நிலவின் சுற்றுவட்டப் பாதைக் குள் நுழைக்கப்படும். அதன் மூலம் நிலவின் பரப்பிலிருந்து குறைந்தபட்சம் 118 கி.மீ. தொலைவையும், அதிகபட்சம் 18,078 கி.மீ. தொலைவையும் கொண்ட நீள்வட்டப் பாதையில் விண்கலம் சுற்றி வரும்.
அதைத் தொடர்ந்து, நிலவின் சுற்றுவட்டப் பாதையிலேயே வலம் வரும் விண்கலம் செப்டம்பர் 1-ஆம் தேதி வரை படிப்படியாக 4 முறை சுற்றுவட்டப் பாதை அளவு குறைக் கப்பட்டு இறுதியாக நிலவின் பரப்பி லிருந்து 100 கி.மீ. தொலைவிலான சுற்றுப் பாதையில் சுற்றி வரும் வகையில் விண்கலம் நிறுத்தப்படும்.
பின்னர் செப்டம்பர் 2-ஆம் தேதி விண்கலம் ஆர்பிட்டரிலிருந்து லேண் டர் (விக்ரம்) பிரிக்கப்படும். அவ்வாறு பிரிக்கப்படும் லேண்டர் அமைப்பு தொடர்ந்து 4 நாள்கள் நிலவைச் சுற்றி வரும். அப்போது இரண்டு முறை அதன் சுற்றுவட்டப் பாதை அளவு குறைக்கப்பட்டு, இறுதியாக செப் டம்பர் 7-ஆம் தேதியன்று நிலவின் தென் துருவத்தில் மெதுவாக தரையிறக்கப்படும் என இஸ்ரோ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இஸ்ரோ சுட்டுரைப் பக்க பதிவில், வணக்கம்! இதுவொரு சிறப்பு புதுப்பிப்புடன் கூடிய சந்திரா யான் 2 ஆகும். எனக்கு இதுவொரு அற்புதமான பயணமாக இருந்தது என்பதை அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன், செப்டம்பர் 7ஆம் தேதி நிலவின் தென் துருவப் பகுதியில் இறங்குகிறேன். நான் எங்கே இருக்கி றேன், என்ன செய்கிறேன் என்பதை அறிய காத்திருங்கள் என பதிவிடப்பட் டுள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...