ராஜஸ் தானில் பெக்லூகான் என்ற பால்பண்ணை
அதிபரை அடித்துக் கொலை செய்த குற்றவாளிகளை நீதிமன்றம் விடுதலை செய்தது
தொடர் பாக கருத்து தெரிவித்த பிரி யங்கா காந்தி மீது கிரிமினல் வழக்கு
பதிவு செய்யப்பட் டுள்ளது.
ராஜஸ்தானைச் சேர்ந்த பெக்லூகான், 2017 ஆம்
ஆண்டு ஏப்ரல் மாதம், பால் வியாபாரத்திற்கு மாடு வாங்கிக்கொண்டு வண்டியில்
ஏற்றி செல்லும் போது, மாட் டிறைச்சிக்காக மாடுகள் கொண்டு செல்லப் படுவதாக
கூறி வாகனத்தை வழிமறித்த பசு பாதுகாவலர் கள், பெகலூ கானை கடு மையாக
தாக்கினர். இதில் அவர் உயிரிழந்தார்.
பெகலூகானை தாக்கிய தாக 9 பேர் கைது
செய்யப் பட்டனர். இதில் 2 பேர் சிறுவர்கள். ஒருவர் விசா ரணை நடந்து
கொண்டிருந்த போது உயிரிழந்தார். இந் நிலையில் இவ்வழக்கை விசா ரித்த
ராஜஸ்தான் நீதிமன்றம் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சான்றுகள்
போதுமானதாக இல்லை எனக் கூறி கொலைகாரர்கள் அனைவரையும் விடுதலை செய்து
தீர்ப்பு வழங்கியது.
இது தொடர்பாக சுட் டுரையில் கருத்து பதிவிட்ட பிரியங்கா,
‘‘இந்த தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது.
கொலை வழக் கில் குற்றம்சாட்டப்பட்டவர் கள் விடுதலை செய்யப்பட் டுள்ளனர்.
ராஜஸ்தான் அரசு இதில் தலையிட்டு நீதி கிடைக்க செய்யும் என நம்பு கிறேன்''
என கருத்து பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து ராஜஸ் தான் மாநில பாஜகவினர்
பிரியங்கா காந்திக்கு எதி ராகக் கடுமையான வார்த் தைப் பிரயோகம் செய்து வரு
கின்றனர். இந்த நிலையில் இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த சுதிர் ஓஜா என்பவர்
பிரியங்கா மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது பற்றி மனுதாரரின் வழக்குரைஞர் கூறுகையில்,
மதக் கலவரத்தை தூண் டும் வகையிலும்,
நீதிமன்ற தீர்ப்பை விமர்சனம் செய்த தாகவும் 3 பிரிவுகளின் கீழ் பிரியங்கா
மீது கிரிமினல் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீது வரும் ஆக.,26
அன்று விசாரணை நடைபெற உள்ளது என்றார்.
No comments:
Post a Comment