Saturday, August 17, 2019

கிரீன்லாந்தை வாங்க டிரம்ப் விருப்பம் , மூழ்கும் நிலையில் ஜகார்த்தா!


கிரீன்லாந்து தீவை விலைக்கு வாங்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விருப்பம் தெரிவித்ததாக வெளியான தகவல், டென்மார்க்கில் அதிர் வலையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
ஆர்ட்டிக் மற்றும் அண்டார்டிக் பெருங்கடல்களுக்கு இடையே அமைந்துள்ள உலகின் மிகப் பெரிய தீவான கிரீன்லாந்து, டென்மார்க் ஆளுகைக்குள்பட்ட தன் னாட்சிப் பிரதேசமாகும்.
அந்தத் தீவை விலைக்கு வாங்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்யுமாறு அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக தகவல் வெளியானது.
இது, டென்மார்க்கில் அதிர்ச்சி அலையை ஏற்படுத் தியுள்ளது. இதற்கு டென்மார்க்கின் முக்கிய தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
டென்மார்க் தனது 50,000 குடிமக்களை அமெரிக் காவுக்கு விற்பனை செய்யும் என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாது என்று அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் லார்ஸ் ரஸ்முனஸன் கூறினார்.
எனினும், இந்த பரிசீலனை குறித்து இதுவரை அதி காரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்று தகவல் கள் தெரிவிக்கின்றன.

மூழ்கும் நிலையில் ஜகார்த்தா!


இந்தோனேசிய தலைநகர் ஜகார்த் தாவில் சுற்றுச்சுழலைப் பாதுகாப்பதற்கான தற்போதைய நடவடிக்கைகள் தொடர்ந்தாலும், வரும் 2050-ஆம் ஆண்டுக்குள் அந்த நகரத்தின் மூன்றில் ஒரு பகுதி கடலுக்குள் மூழ்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டம், அதிகரித்து வரும் கடல் மட்டம், மாறி வரும் பருவநிலை ஆகிய காரணங்களால் ஏற்கெனவே அந்த நகரின் பல பகுதிகள் கடலுக்குள் முழ்கியுள்ள நிலையில், தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால் இந்தோனேசியா புதிய தலைநகரைத் தேட வேண்டியிருக்கும் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...