வரும் 2027ஆம் ஆண்டில் உலகி லேயே அதிக
மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்கும் என்று அய்.நா. கணித்துள்ளது.
எதிர்வரும் ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் குறையக் கூடும்
என்றும் அய்.நா. தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 133
கோடியாக உள்ளது. சீனாவுக்கு அடுத்த படியாக உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட
நாடாக இந்தியா உள்ளது. சீனாவின் மக்கள்தொகை சுமார் 138 கோடியாகும்.
இந்நிலையில், 2027-ஆம் ஆண்டில் இந்திய மக்கள் தொகை சீனாவை விஞ்சிவி டும் என்று அய்.நா. கணித்து உள்ளது.
மேலும், 2065-ஆம் ஆண் டிலிருந்து இந்தியாவின் மக்கள்தொகை குறையத் தொடங்கும் என்றும் கணிக் கப்பட்டுள்ளது.
மக்கள்தொகையை கட்டுப்படுத்துவதில் தென்
மாநிலங்களின் செயல்பாடு சிறப்பாக உள்ளதாக துறை சார் வல்லுநர்கள் தெரிவித்
துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது:
இந்தியாவில் குழந்தைகள் பிறப்பு
விகிதத்தைப் பொருத்த வரையில், விந்திய மலைக்கு தெற்கே உள்ள பகுதிகளில்
குறைவாகவும், வடக்கே உள்ள பகுதிகளில் அதிகமா கவும் உள்ளது.
தமிழகம், தெலங்கானா, ஆந்திரம், கேரளம்,
கருநாட கம் ஆகிய தென் மாநிலங் களில், ஒட்டுமொத்த குழந் தைகள் பிறப்பு
விகிதம் 1.8-ஆக உள்ளது. ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட வட மாநிலங் களில் இந்த
விகிதம் 2.3 ஆகும். குறிப்பாக பீகார், உத் தரப் பிரதேசம் ஆகிய மாநி
லங்களில் குழந்தைகள் பிறப்பு விகிதம் தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது.
வட மாநிலங்களில் வாழும் மக்க ளின் வாழ்க்கைத் தரத்தைவிட தென் மாநிலங்களில்
வாழும் மக்களின் வாழ்க்கை தரம் சிறப்பாக உள்ளது. வடமாநி லங்களில்
மக்கள்தொகை பெருக் கம் கட்டுப்படுத்தப்படாததே இந்த நிலைக்கு காரணம் என்று
அந்த வல்லுநர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக, பிரதமர் நரேந் திர மோடி தனது
சுதந்திர தின உரையின்போது, நாட் டில் மக்கள்தொகை பெருக் கத்தை
கட்டுப்படுத்த வேண் டியதன் அவசியம் குறித்து பேசினார். மக்கள்தொகை
பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டியது, தேசப்பற்றின் வெளிப்பாடு என்று அவர்
குறிப்பிட்டார்
மக்கள்தொகையை கட்டுப்படுத்த மத்திய அரசு
பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் சூழலில், 2027-ஆம் ஆண்டில் உலகி
லேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா மாறும் என்ற கணிப்பை அய்.நா.
வெளியிட்டுள்ளது.
குழந்தைகள் பிறப்பு விகிதம்
தென் மாநிலங்கள் 1.8
வட மாநிலங்கள் 2.3
No comments:
Post a Comment