பாகிஸ்தா னுக்கு இயக்கப்பட்டு வந்த வாராந்திர தார் ரயில் சேவையை இந்தியா ரத்து செய்தது.
ராஜஸ்தானின் ஜோத்பூரி லிருந்து பாகிஸ்தான்
நாட் டிலுள்ள கராச்சி நகருக்கு வாரந்தோறும் சனிக்கிழமை அன்று தார் ரயில்
இயக் கப்பட்டு வந்தது. இந்நிலை யில், ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்புத்
தகுதியை நீக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்குக் கடும் எதிர்ப்பு
தெரிவித்த பாகிஸ் தான், இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக நட வடிக்கைகளை
ரத்து செய்வ தாகவும், டில்லிக்கு வாரம் இருமுறை இயக்கப்படும் சம்சவுதா
விரைவு ரயில் சேவையை ரத்து செய்வ தாகவும் அறிவித்தது.
அதே போல், தார் ரயில் சேவையை ரத்து
செய்வதாகக் கடந்த 9-ஆம் தேதி பாகிஸ் தான் அறிவித்தது. இந்நிலை யில்,
ராஜஸ்தானிலிருந்து இயக்கப்படும் தார் ரயில் சேவையை ரத்து செய்வதாக வடமேற்கு
ரயில்வே வெள் ளிக்கிழமை தெரிவித்தது. இது தொடர்பாக, வடமேற்கு ரயில்வேயின்
செய்தித் தொடர்பாளர் கூறுகையில், தார் ரயில் சேவை காலவரையின்றி
நிறுத்தப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பை ரயில்வே அமைச்சகம், வட மேற்கு
ரயில்வேயிடம் தெரிவித்துள்ளது. இந்த ரயிலில் பயணிப்பதற்காக 45 பேர்
முன்பதிவு செய்திருந்தனர். அவர்கள் செலுத்திய பணத் தைத் திருப்பிச்
செலுத்துவதற் கான பணிகள் தொடங்கப் பட்டுள்ளன. ரயில்வே அமைச் சகம்
தெரிவிக்கும்வரை தார் ரயில் இயக்கப்படாது என்றார்.
இதற்கு முன்பு, இந்தியா வுக்கும்
பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த 1965-ஆம் ஆண்டு ஏற்பட்ட போரில் தண்டவாளங்கள்
சிதைக்கப் பட்டதைத் தொடர்ந்து தார் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, 41 ஆண்டுக ளுக்குப் பிறகு, கடந்த 2006-ஆம் ஆண்டு பிப்ரவரி
மாதம் இரு நாடுகளுக்கிடையேயான தார் ரயில் சேவை மீண்டும் தொடங்கியது.
No comments:
Post a Comment