Monday, August 12, 2019

காஷ்மீர் விவகாரம்: திருவாரூர் மத்தியப் பல்கலை. மாணவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசாம்

காஷ்மீர் விவ காரம் காரணமாக திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக மாணவர் களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.   மத்திய அரசு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புத் தகுதியை  ரத்து செய்யும் வகையில் 370-ஆவது பிரிவை நீக்கியது. இதை யொட்டி, நாடு முழுவதும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
மத்தியப் பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு புதன் கிழமையும் படிப்பதற்கான விவாதத்துக்குரிய நேரம் என்பது வழக்கமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு, ஆகஸ்ட் 7-ஆம் தேதி படிப்பு மற்றும் விவாதத்துக்கான நேரத்தில் ஏறத்தாழ 30 பல்கலைக்கழக மாணவர்கள் வழக்கம்போல் விவா தித்துக் கொண்டிருந்தனர். அப் போது, ஜம்மு-காஷ்மீர் விவகாரமும் பொது அறிவு சம்பந்தப்பட்ட பிரச்சினை என்ற நோக்கில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இரண்டு நாள்களுக்குப் பிறகு ஆகஸ்ட் 9-ஆம் தேதி குழு விவாதத்தில் கலந்துகொண்ட 5 மாணவிகள் உள் ளிட்ட 30 மாணவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட் டுள்ளது.
அந்த நோட்டீஸில் கூறப்பட்ட தாவது: நீங்கள் (மாணவர்கள்) அனை வரும் மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றுகூடி இந்திய அரசியல் சட்டத்தை பற்றி விவாதித் ததாக தெரிகிறது. பல்வேறு சுற்றறிக் கைகளுக்கு பின்னரும் அறிவுரை களுக்கு பின்னரும், நீங்கள் இதுபோல் இந்திய இறையாண்மைக்கும் இந்திய அரசியல் சட்டத்திற்கும் எதிராக விவாதம் செய்ததாக தெரிகிறது. இது நன்னடத்தை விதிகளுக்கு எதிரா னது. எனவே  மூன்று நாட்களுக்குள் நீங்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மாணவர்கள் தரப்பில் கூறிய தாவது:  நாங்கள் காஷ்மீருக்கு அளிக்கப் பட்டிருந்த 370ஆவது பிரிவின் சிறப்புத் தகுதி நீக்கியதை ஆதரித்தோ, எதிர்த்தோ எதையும் செய்யவில்லை. எங்களது எதிர்கால பணிக்கான தேர்வுகளுக்காக பொது அறிவு சம் பந்தப்பட்ட கருத்துகளை மட்டுமே விவாதம் செய்தபோது, காஷ்மீர் விவகாரமும் அதில் ஒன்றாக இருந் தது. அதில் அனைத்து அம்சங்களும் விவாதிக்கப்பட்டது அவ்வளவுதான்.
இது சாதாரணமாக நடந்த விஷயம். இதற்காக பல்கலைக் கழக நிர்வாகம் எங்கள்மீது நடவ டிக்கை எடுக்கும் நோக்கில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்றனர்.
இதுகுறித்து, மத்தியப் பல்கலைக் கழக பதிவாளர் எஸ். புவனேஸ்வரி கூறியதாவது:
ஒரு சிலர் பல்கலைக்கழக சுவர்களில் 370-ஆவது பிரிவு நீக்கம் பற்றியும், அதை எதிர்க்கின்ற வகையிலே சில வாசகங்களை சுவர்களில் ஒட்டியதாக தெரிகிறது . இதுசம்பந்த மாக மாணவர்களுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளோம். அவர்கள் 3 நாள்களில் பதில் அளிக்க வேண்டும். மேலும், இது சம்பந்தமாக காவல் துறையிடம் புகார் அளிக்கப் பட்டுள்ளதாகவும் காவல்துறையினரும் விசாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...