Tuesday, August 13, 2019

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 38 மனித உரிமை காப்பாளர்கள் படுகொலை: எவிடன்ஸ் அமைப்பு தகவல்

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 38 மனித உரிமை காப்பாளர்கள் படுகொலை செய்யப் பட்டுள்ளனர். இவர்களின் பாது காப்புக்கு தனிச்சட்டம் இயற்ற வேண்டுமென எவிடன்ஸ் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகில் உள்ள முதலைப்பட்டி கிராமத்தில் வீரமலை (70), அவரது மகன் நல்லதம்பி ஆகிய இருவரும் கடந்த ஜூலை 29ஆம் தேதி 6 பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர்.
நீர்நிலைகளை பாதுகாப்பதற்காக போராடிய இருவரும் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.இது குறித்து எவிடன்ஸ் அமைப்பின் உண் மையறியும் குழுவினர், சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு நேரடியாக சென்று, கள ஆய்வு மேற்கொண்டனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
இதுபற்றி, அமைப்பின் செயல் இயக்குநர் கதிர் கூறியதாவது:
குளித்தலை அருகே முதலைப்பட்டி கிராமத்தில் சுமார் 198.45 ஏக்கர் குளம் மற்றும் நீர்நிலை கொண்ட அரசு நிலம் உள்ளது. இப்பகுதியை 50 பேர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இத னால் இப்பகுதி நீர்நிலை வறண்டது.
இதுகுறித்து தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் அடிப்படையில் தகவல் கேட்டபோது, 50 ஏக்கரை தவிர, மற்ற பகுதிகள் எல்லாம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது உண்மையென தெரியவந்தது.
இதனடிப்படையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப் பட்டு, கடந்த 24.10.2018இல் இந்த ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.
இருப்பினும் ஆக்கி ரமிப்பு அகற்றப்படவில்லை. இதனை யடுத்து 8.3.2019இல் உயர்நீதிமன்ற மதுரை கிளை, நீர்நிலைகளை ஆக்கி ரமிப்பதை  ஏற்றுக்கொள்ள முடியாது. கரூர் மாவட்ட ஆட்சியரும், குளித் தலை வட்டாட்சியரும் ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இதனால், இவ்வழக்கை முன் னின்று எடுத்து நடத்திய வீரமலை, நல்லதம்பி ஆகியோர் மீது நீர்நிலை ஆக் கிரமிப்பாளர்கள் கடும் கோபத் தில் இருந்தனர். இதன்காரணமாக 6 பேர் கொண்ட கும்பலால், இருவரும் வெட்டி படுகொலை செய்யப்பட் டனர்.
இதுகுறித்து குளித்தலை காவல் துறையினர் வழக்குப்பதிந்து, குற்றவாளிகளை கைது செய்து, காவலில் வைத்தனர். தமிழகத்தில் இதுபோன்ற மனித உரிமை ஆர்வ லர்கள் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது. நீர்நிலை, மணல் கொள்ளை, மது, ஜாதி வன்மம் ஆகியவற்றுக்கு எதிராக போராடுகிற மனித உரிமை காப்பாளர்கள் கடந்த 2016 ஆகஸ்ட் முதல் 2019 ஜூலை வரை 38 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
எனவே, மனித உரிமை காப் பாளர்களை பாதுகாப்பது அரசின் கடமை.
இதனால், மனித உரிமை காப்பாளர்களின் பாதுகாப்புக் கென்று, தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்ற பரப்புரையை தொடங்கி இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...