Monday, August 12, 2019

பெண்கள் கல்வி அறிவு பெறவேண்டும் என்று போராடி பெற்று தந்தவர் பெரியார்: கனிமொழி பேச்சு


பெண்கள் கல்வி அறிவு பெறவேண்டும் என்று போராடி பெற்று தந்தவர் பெரியார் என்று  நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி  தெரிவித்தார்.
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியின் சமூக மேம்பாட்டு திட்டம் சார்பில் ஆண்டு தோறும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அங்குள்ள மகளிர் மற்றும் மாணவர்களுக்கு மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதுபோல் இந்தாண்டு தருவை குளம் கிராமத்தில் உள்ள பெண்கள் மற்றும் மாணவர்களுக் கான சூழல் மேம்பாட்டு முகாம், நேற்று காலையில் தருவைகுளம் தூய கத்தரீன் பெண்கள் தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
தூய மரியன்னை கல்லூரி குழந்தை தெரஸ் வரவேற்றார். கல்லூரி முதல்வர் லூசியா ரோஸ் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி  நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு பேசியதாவது:
பல ஆண்டுகளுக்கு முன்பு பெண் கல்வி என்பது நினைக்க முடியாத ஒன்றாக இருந்தது. இந்த சமூக சூழலை மாற்றி அனை வரும் கல்வி பயில வேண்டும். பெண்கள் கல்வி அறிவு பெற வேண்டும் என்று போராடி பெற்று தந்தவர்கள் பெரியார் மற்றும் திராவிடர் கழகத்தினர். பெண்கள் வேலைக்கு செல்வதன் மூலம் அவர்களின் வாழ்க்கையில் முக்கிய முடிவுகளை அவர்களே எடுக்கும் நிலை உருவாகி உள்ளது.
பெண்களால் அனைத்தையும் செய்ய முடியும். சில நாட்களுக்கு முன்பு விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-2 தலைமை பணியில் இருந்தவர்களில் 2 பேர் பெண்கள். எனவே பெண்கள் தங்களது தன்னம்பிக் கையை வளர்த்து கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து, மகளிர் மற்றும் மாணவர்களுக்கு நடத்தப்படும் சணல் கைவினை பொருட்கள் தயாரித்தல் பயிற்சி, தையல் பயிற்சி, ஆங்கில மொழி பயிற்சி, மாடி தோட்டம் அமைக்கும் பயிற்சியை அவர் தொடங்கி வைத்தார்.
கருத்து வேறுபாடு இல்லை
முன்னதாக தூத்துக்குடி விமான நிலை யத்தில் மக்களவை உறுப்பினர் கனிமொழி செய்தியாளர் களிடம் கூறும்போது, ‘‘காங்கி ரஸ் கட்சியுடன் திமுகவுக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை. காஷ்மீருக்கு வழங்கப் பட்டிருந்த சிறப்புத் தகுதி ரத்து செய்யப் பட்டதை திமுக எதிர்க்கிறது’’ என்றார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...