Tuesday, August 13, 2019

பளுதூக்குதலில் முதல் தங்கம் பெற்ற மங்கை!


பெண்கள் என்றாலே மெல்லிய இயல்போடு இருப்பார்கள்; அவர்களால் கடினமான வேலைகளைச் செய்ய முடியாது என்பது பலரது நினைப்பு. இதைத்தான் விளையாட்டு சார்ந்தும் சிலர் சொல்லுவார்கள். தடகளம், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுகிற பெண்களை ஏற்றுக்கொள் கிறவர்கள், மல்யுத்தம், பளுதூக்குதல் போன்றவற்றில் களம்காணப் பெண் களுக்குப் பெரிய வாய்ப்பளிப்பதில்லை. அவையெல்லாம் ஆண்களுக்கான விளை யாட்டு என்ற சிந்தனையின் வெளிப்பாடு இது.

ஆண்களுக்கானவை என முத்திரை குத்தப்பட்ட விளையாட்டுகளில் ஈடுபடு கிற பெண்களுக்கு இரட்டைச் சவால். சமூகத்தின் பொதுவான கற்பிதத்தை உடைப்பதோடு பெண்ணுக்கான இலக் கணத்துக்கு எதிராக உடலை உறுதிசெய்ய வேண்டும். இவை இரண்டையும் அருமையாகச் செய்து வாகைசூடியிருக்கிறார் அனுராதா. சமோவ் தீவில் ஜூலை 14 அன்று நடைபெற்ற காமன்வெல்த் பளுதூக்குதல் வாகையர் பட்டப் போட் டியில் 221 கிலோ எடையைத் தூக்கி, மற்ற நாடுகளெல்லாம் வியக்கும் வகையில் இந்தியாவின் புகழை உச்சத்துக்குக் கொண்டுசென்றுள்ளார் அவர்.

பளுதூக்குவது போன்ற உடல் வலு வுடன் தொடர்புடைய விளையாட்டுகளில் மிளிர பயிற்சியோடு சத்தான உணவும் அவசியம். அன்றாடச் சாப்பாட்டுக்கே சிரமப்படும் குடும்பத்தில் பிறந்த அனுராதா, வறுமையைத் தன் உறுதி யாலும் திறமையாலும் வென்றிருக்கிறார். புதுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் விவசாயத்தை ஆதார மாகக்கொண்ட கொண்ட குக்கிராமம் நெம்மேலிப்பட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த பவுன்ராஜ் - ராணி தம்பதியின் மகளான அனுராதாவின் பெயர்தான் காமன்வெல்த் போட்டி அரங்கில் அன்று உரத்து முழங்கியது. தொடக்கக் கல் வியைத் தன் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படித்த அனுராதா, அதன் பிறகு அருகிலுள்ள பெருங்களூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். அவர் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது தந்தை பவுன்ராஜ் இறந்துவிட்டார்.

தந்தையின் இறப்புக்குப் பிறகு அனு ராதாவின் குடும்பம் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளானது. யாராவது ஒருவர் கூலி வேலைக்குச் சென்றால்தான் குடும்பத்தை நடத்த முடியும் என்ற சூழல். பன்னிரண்டாம் வகுப்பு படித்துவந்த அனுராதாவின் அண்ணன் மாரிமுத்து படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டுக் கூலி வேலைக்குச் செல்லத் தொடங்கினார். அனுராதா படிப்பைத் தொடர்ந்தார்.

என்னைப் படிக்கவைக்க அம்மா ஆடு மேய்ச்சாங்க. அண்ணன் கூலி வேலைக்குப் போனார். நாங்க கூரை வீட்டில்தான் இருந்தோம். அப்போ வீட்டில் சைக்கிள் கூட இல்லை. என்னோட விளையாட்டு ஆர்வத்தைப் புரிந்துகொண்ட அண்ணன், எதையும் பொருட்படுத்தாமல் என்னைப் பயிற்சிக்கு அனுப்பினார். பயிற்சி முடிஞ்சதும் வயிற்றை வாரிச் சுருட்டும் அள வுக்குப் பசியெடுக்கும். அப்போ உறவினர் களும் நண்பர்களும் உதவினார்கள் என்று சொல்லும் அனுராதா, பொரு ளாதார நெருக்கடியில் தங்கள் குடும்பம் தத்தளித்ததாகவும் சொல்கிறார்.

தினமும் படிக்கவும் பயிற்சிக்கும் ஊரில் இருந்து பெருங்களூர் வரைக்கும் போய்வருவதே பெரும்பாடாக இருக்கும். அந்த வழியாக  போகிறவர்களிடம்  லிஃப்ட் கேட்டு வரணும். அப்போ எங்க குடும்ப வறுமையை மட்டுமே பெரிதாக நினைத்திருந்தால் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்திட்டு ஆடு மாடு மேய்த்துக் கொண்டு வீட்டிலேயே முடங்கியிருப் பேன் என்று புன்னகைக்கும் அனுராதா, தன் விளையாட்டுத் திறமை நிச்சயம் தன்னைக் கரைசேர்க்கும் என்று உறுதி யாக நம்பியிருக்கிறார். அந்த நம்பிக்கை இன்று அவரைத் தங்கத் தாரகையாக வலம்வரச் செய்திருக்கிறது என்கிறார் அனுராதாவின் அண்ணன் மாரிமுத்து.

பளுதூக்குவதில் பள்ளி அளவில் ஏராளமான சாதனைகளைப் படைத்த அனுராதா, புதுக்கோட்டை மன்னர் அரசுக் கல்லூரியில் பி.சி.ஏ. படித்தார். அப்போதும் தீவிரப் பயிற்சியில் ஈடு பட்டுவந்தார். பளுதூக்கும் போட்டி எங்கே நடந்தாலும் அதில் தனக்குப் பரிசு கிடைக்கும் என்ற நிலையை எட்டினார். அனுராதாவின் திறமையை அறிந்த ஒரு தனியார் கல்லூரி நிர்வாகம், கட்டண மின்றி அவரை எம்.எஸ்சி, எம்.ஃபில்., வரை படிக்கவைத்தது. தொடர்ந்து தேசிய அளவிலும் தடம்பதித்தார் அனுராதா. தன் திறமையை மேம்படுத்திக்கொள்ள, பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் ஓராண்டு பயிற்சி பெற்றார். 2016-இல் நடைபெற்ற காவல் துறைத் தேர்வில் விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டில் காவல் உதவி ஆய் வாளராகத் தேர்வானார்.
தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி காவல் நிலை யத்தில் பணியில் சேர்ந்த அவர், தற்போது தோகூர் காவல் நிலையத்தில் பணி புரிந்துவருகிறார். இந்திய அளவில் நடை பெற்ற காவலர் களுக்கு இடையேயான போட்டிகளில் தொடர்ந்து அனுராதா தங்கப் பதக்கம் வென்றார்.

இதன் மூலம் மத்திய அரசு நடத்தும் இலவசப் பயிற்சி மய்யத்தில் பயிற்சி பெறத் தேர்வானார். அங்கேயே தங்கிப் பயிற்சி பெற்றுவந்த அனுராதா, அதன் தொடர்ச் சியாக காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் களமிறங்கினார். சொல்லி வைத்ததுபோல் அதிலும் அனுராதா வுக்கே  தங்கப் பதக்கம்! தமிழகத்தில் இருந்து காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற முதல் பெண் என்ற சாதனை யை அனுராதா படைத் துள்ளார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...