போபால்
ஆக 15 மிசா சட்டத்தின் கீழ்
கைதானவர்கள் என்ற பெயரில் பாஜகவினருக்கு
சுதந்திர தினத்தன்று அளிக்கப்பட்டு வந்த மரியாதையை மத்தியப்
பிரதேச முதல்வர் கமல்நாத் ரத்து செய்துள்ளார்.
அவசர நிலைச் சட்டம் பிரகடனம்
செய்யப்பட்ட போது எதிர்க்கட்சியினர்
ஏராளமானோர் மிசா சட்டத் தின்
கீழ் கைது செய்யப்பட்டனர். மத்திய
பிரதேச மாநிலத்தில் அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில்
பாஜக வினருக்கு மட்டும் கடந்த 2008 ஆம்
வருடம் அப்போதைய பா.ஜ.க.
அரசு மாதம் ரூ. 6000 உதவித்
தொகை அளிக்க உத்தரவிட்டது. அதன்
பிறகு அந்த உதவித் தொகை
சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு இணையாக
ரூ.25000மாக உயர்த்தப்பட்டது.
அத்துடன்
பா.ஜ.க.வினருக்கு
சுதந்திர தினத்தன்று தலைநகர் போபால் மற்றும்
அனைத்து மாவட்ட தலைநகரிலும் சுதந்திர
தினத்தன்று சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம்
நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று
பா.ஜ.க.விடம்
இருந்து ஆட்சியைக் கைப்பற்றியது. முதல்வராகப் பதவி ஏற்ற கமல்நாத்
தாம் பதவி ஏற்ற இரு
வாரங்களில் பாஜகவினருக்கு செல்லும் உதவித் தொகையை நிறுத்தி
வைத்தார்.
இந்த உதவித் தொகைக்குச் சிபாரிசு
செய்யப்பட்டவர்களில் பலர் உயி ருடன்
இல்லை என்பதால் அவர்கள் உயிருடன் இருப்பதை
உறுதி செய்யச் சோதனைக்கு உத்தரவிட்டார்.
தற் போது முதல்வர் கமல்
நாத் இந்த ஆண்டு சுதந்திர
தினம் முதல் மிசா கைதிகள்
போர்வையில் உள்ள பாஜக வினருக்கு
வழங்கப்படும் சிறப்பு மரி யாதையை
ரத்து செய்து உத்தரவிட் டுள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷோபா
ஒஸா, மிசா கைதி உதவித் தொகை
பெறுபவர்கள் பாஜகவினராக உள்ளனர். அத்துடன் அவர்களில் பலர் அப்போது சிறைக்
குச் செல்லவில்லை. தங்கள் கட்சி ஊழியர்களுக்கு
உதவ அப்போதைய பாஜக அரசு தந்திரமாக
இந்த திட் டத்தை நடத்தி
உள்ளது. ம பி அரசு
சுதந்திர தினத்தன்று
சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மட்டுமே
சிறப்பு மரியாதை செலுத்த எண்ணு
கிறது எனத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment