Sunday, August 18, 2019

கூட்டாட்சி தத்துவத்தை உடைத்து ஒற்றை ஆட்சி முறையை நிலைநாட்ட மோடி அரசு முயற்சி செய்கிறது சீத்தாராம் யெச்சூரி குற்றச்சாட்டு


சமுக, பொருளாதார ஒடுக்குமுறைக்கு எதிராக ஒருமித்த குரல் உருவாக வேண்டும் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலர் சீத் தாராம் யெச்சூரி.
தஞ்சாவூரில் தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மூன்று நாள் மாநாட்டின் நிறை வாக, திலகர் திடலில் 17.8.2019 அன்று இரவு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் மேலும் பேசியது:
நம் நாட்டில் 70 ஆண்டு களுக்கும் மேலாக தாழ்த்தப் பட்ட, பழங்குடியின மக்களுக் கான இடஒதுக்கீடு அமலில் இருந்தாலும், அவர்களுடைய வாழ்க்கை நிலை முன்னேறிச் செல்ல முடியாத நிலைமையில் உள்ளது. அவர்கள்  முன்னேற வேண்டுமானால் சமுக, பொரு ளாதார விடுதலை வேண்டும். எனவே, இதற்கான போராட் டத்தை ஒன்றுபட்ட போராட் டமாக நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.
இந்திய அரசியலமைப்புச் சட்டமானது மதச்சார்பின்மை, பொருளாதாரச் சுயசார்பு, சமுக நீதிக் கட்டமைப்பு, கூட் டாட்சி ஆகிய 4 தூண்களில் நின்று கொண்டிருக்கிறது.
இந்த நான்கு தூண்களையும் தகர்த்தெறியக்கூடிய மோச மான பாதையில் பாஜக அரசு செல்கிறது. எனவே, நாம் நடத் தக்கூடிய மிகப் பெரிய போராட்டங்களில் தீண்டாமை ஒழிப்பும் ஒன்று.  கடந்த 70 ஆண்டுகளாக நாம் பெற்று வந்த பலன்கள் அனைத்தையும் அழிக்கக்கூடிய நடவடிக்கையில் இந்த அரசு ஈடுபட்டுள்ளது. இதற்கு எதிராக முழங்க வேண் டிய கட்டாயத்தில் உள்ளோம்.
தற்போது இடஒதுக்கீடே கேள்விக்குள்ளாகும் மோச மான நிலை உருவாகி இருக் கிறது. இதேபோல, பொதுத் துறைகளைத் தனியார்மய மாக்கக் கூடிய மோசமான பாதையில் பாஜக அரசு செல்கிறது. கல்வித் துறையில் மிகப் பெரிய தாக்குதலாகப் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த முயற்சிக்கிறது.
இதன் மூலம், பள்ளிகள், கல்லூரிகளை தனியாருக்குத் தாரைவார்க்கக்கூடிய நிலைமை உருவாகும். வேலைவாய்ப்பு என்பது மிக மோசமான சூழ்நிலையில் உள்ளது. வேலையின்மையும் தீவிரமடைந்து வருகிறது. மக்களை வறுமைக் கோட்டுக்குக் கீழே மேலும், மேலும் தள்ளப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோல, ஜம்மு காஷ் மீரில் மிக மோசமான தாக்குதலை மத்திய அரசு நடத்தி வருகிறது. கூட்டாட்சி தத்துவத்தை உடைத்து ஒற்றை ஆட்சி முறையை நிலை நாட்ட மோடி அரசு முயற்சி செய்கிறது. வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியாவின் அடி நாதமாக இருக்கிறது. இதை நாம் வலுப் படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எனவே, பகுதி, பகுதியாகப் பிரிந்து பல்வேறு போராட்டங்களை நடத்தினா லும் கூட, சமுக, பொருளாதார ஒடுக்குமுறை, உரிமைகள் பறிப் புக்கு எதிராக அனைத்து போராட் டங்களையும் ஒன்றி ணைக்க வேண்டும் என்றார் யெச்சூரி.
கூட்டத்தில் தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி மாநி லத் தலைவர் பி. சம்பத், பொதுச் செயலர் கே. சாமுவேல் ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...